கோர்ட் வரை போயும் கூட தொடர்ந்து 'தம்' அடிக்கிறீங்களே ஷாருக்!.. விட்ரலாமே?
மும்பை: ரம்ஜானுக்கு ரிலீஸ் ஆகும் தனது சென்னை எக்ஸ்பிரஸ் படத்தை விளம்பரப்படுத்த ஜலக் திக்லா ஜா மற்றும் மதுபாலா ஏக் இஷ்க், ஏக் ஜுனூன் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட ஷாருக்கான் அனைவருக்கும் முன்பு சிகரெட் பிடித்துள்ளார்.
ஷாருக்கான், தீபிகா படுகோனே நடித்துள்ள சென்னை எக்ஸ்பிரஸ் படம் ரம்ஜான் ஸ்பெஷலாக ரிலீஸ் ஆகிறது. இந்த படத்தை ஷாருக்கான், தீபிகா மற்றும் இயக்குனர் ரோஹித் ஷெட்டி ஆகியோர் விளம்பரப்படுத்தி வருகின்றனர்.
அதன் ஒரு பகுதியாக சென்னை எக்ஸ்பிரஸ் குழு கலர்ஸ் டிவியில் ஒளிபரப்பாகும் ஜலக் திக்லா ஜா நிகழ்ச்சிக்கு சென்றது.

மாதுரி
பாலிவுட் நடிகை மாதுரி தீக்சித் நடுவராக இருக்கும் டான்ஸ் ஷோ ஜலக் திக் லா ஜா. இந்த நிகழ்ச்சியில் சென்னை எக்ஸ்பிரஸ் படத்தை விளம்பரப்படுத்த ஷாருக்கான், தீபிகா, ரோஹித் ஷெட்டி ஆகியோர் வந்தனர்.

தம்
நிகழ்ச்சி நடந்து கொண்டிருக்கையில் ஷாருக்கான் மாதுரிக்கு அருகில் அமர்ந்து கொண்டு அனைத்து ரசிகர்களும் பார்த்துக் கொண்டிருக்கையில் சிகரெட் பிடித்தார். இப்படி ஒரு நிகழ்ச்சிக்கு வந்த இடத்தில் ஷாருக் புகைப்பிடித்தது அனைவரையும் ஆச்சரியப்பட வைத்தது.

மதுபாலா
மேலும் சென்னை எக்ஸ்பிரஸ் குழு கலர்ஸ் டிவியில் ஒளிபரப்பாகும் இந்தி சீரியலான மதுபாலா ஏக் இஷ்க், ஏக் ஜுனூன் செட்டுக்கும் சென்றது. அங்கும் ஷாருக்கான் ஒரு சிகரெட்டை எடுத்து பற்ற வைத்துள்ளார்.

ஐபிஎல்
முன்னதாக ஐபிஎல் போட்டிகளின் போது தனது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி விளையாடுவதை அரங்கில் இருந்து பார்த்துக் கொண்டிருந்த ஷாருக் தம்மடித்து சர்ச்சையில் சிக்கிக் கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது. பொது இடத்தில் புகைப்பிடித்ததற்காக நீதிமன்றம் வரை சென்றும் அவர் திருந்தியபாடில்லையே.


Click it and Unblock the Notifications











