காதலை விட வாழ்க்கை பெரிது.. ஷாருக் கான்
மும்பை நடிகை ஜியா கான் மறைவு குறித்து இரங்கல் தெரிவித்துள்ள பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக் கான், காதலுக்காக உயிரை நீத்துக் கொள்வது தவறு என்று வலியுறுத்தியுள்ளார்.
25 வயதான ஜியா கான் தனது மும்பை வீட்டில் தற்கொலை செய்து கொண்டார். அவரது மறைவுக்கு பாலிவுட் ஒட்டுமொத்தமாக வருத்தமும், இரங்கலும் தெரிவித்தது.
இந்த நிலையில் ஜியா கானின் தற்கொலை குறித்து கருத்து தெரிவித்துள்ளார் ஷாருக் கான்.
இதுகுறித்து ஷாருக் கான் கூறியிருப்பதாவது...

காதலை விட வாழ்க்கை பெரியது
காதலை விட வாழ்க்கைதான் முக்கியமானது, பெரியது.

ஒவ்வொருவருக்கும் ஒரு காதல்
ஒவ்வொருவருக்கும் காதல் குறித்த கருத்துக்கள் இருக்கலாம். காதல் என்பது சர்வதேச விஷயம்.

நான் கூட காதலராக நடித்தவன்தான்
நான் கூட பல படங்களில் காதலராக நடித்தவன்தான். ஆனால் அதெல்லாம் மற்றவர்கள் எழுதிக் கொடுத்த வசனத்தைப் பேசி நடித்த நடிப்பு. ஆனால் என்னைப் பொறுத்தவரை காதலை விட வாழ்க்கைதான் பெரியது, முக்கியமானது.

தைரியமாக சந்தியுங்கள்
வாழ்க்கையில் ஒவ்வொருவருக்கும் கடினமான சூழ்நிலைகள் ஏற்படுவது சகஜம்தான். ஆனால் அதை தைரியமாக சந்திக்க வேண்டும். வாழ்க்கையை மதிக்க வேண்டும்.

நம்பிக்கையை விடாதீர்கள்
ஒவ்வொரு பிரச்சினையையும் தீர்க்க முயற்சிக்க வேண்டும். அதற்கு நிறைய நம்பிக்கை வேண்டும். நம்பிக்கையை எந்தக் கட்டத்திலும் விட்டு விடக் கூடாது என்றார் ஷாருக் கான்.


Click it and Unblock the Notifications











