தலைவர் தம்பி தலைமையில் ஹிட்டுக்குப் பிறகு ‘தகப்பன்’ படத்தை தொடங்கிய ஜீவா.. ஹீரோயின் யாரு தெரியுமா?

சென்னை: 'கருடன்', 'மாமன்' உள்ளிட்ட தரமான வெற்றிப் படங்களை தயாரித்து ரசிகர்களின் பாராட்டைப் பெற்றுள்ள லார்க் ஸ்டூடியோஸ், நடிகர் ஜீவா நடிப்பில், தனது அடுத்த பிரம்மாண்ட தயாரிப்பான 'தகப்பன்' திரைப்படத்தின் படப்பிடிப்பை இன்று பூஜையுடன் அதிகாரபூர்வமாகத் தொடங்கியுள்ளது.

மதுரையில் கோலாகலமாக நடைபெற்ற இந்த பூஜையில் படக்குழுவினரோடு திரை பிரபலங்கள் பலர் கலந்து கொண்டு தங்களது வாழ்த்துக்களைத் தெரிவித்தனர். நடிகர் ஜீவா கதாநாயகனாக நடிக்கும் இத்திரைப்படத்தில், தேசிய விருது பெற்ற பிரபல நடிகை ரஜிஷா விஜயன் கதாநாயகியாக இணைந்துள்ளார். இந்த புதிய கூட்டணி சினிமா ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

Jiiva and Rajisha Vijayan starrer Thagappan Movie Pooja Happened Today

சமீபத்தில் வெளியான 'TTT' திரைப்படத்தின் வெற்றிக்குப் பிறகு, ஜீவா மீண்டும் மதுரை மண்ணின் மண்வாசனையோடு, வலுவான உணர்வுகளை மையமாகக் கொண்ட கதக்களத்தில் நடிக்கிறார். விமர்சகர்களின் கவனத்தை ஈர்த்த 'கிடா' திரைப்படத்தின் இயக்குநர் ரா. வெங்கட், இப்படத்தின் கதை, திரைக்கதை மற்றும் இயக்கத்தை மேற்கொள்கிறார்.

மதுரை மண் வாசம்: மதுரை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளை பின்னணியாகக் கொண்டு உருவாகும் 'தகப்பன்', தந்தை - மகன் உறவின் ஆழமான பாசம், குடும்ப உறவுகளின் வலிமை மற்றும் மனித உணர்வுகளை மையமாகக் கொண்ட ஒரு உணர்வுபூர்வமான படைப்பாக தயாராகிறது. குடும்ப ரசிகர்கள் முதல் இளைஞர்கள் வரை அனைத்து தரப்பினரையும் கவரும் வகையில் இதன் திரைக்கதை வடிவமைக்கப்பட்டுள்ளது.

Jiiva and Rajisha Vijayan starrer Thagappan Movie Pooja Happened Today

படக்குழு விவரங்கள்: கே. குமார் தயாரிக்கும் இத்திரைப்படத்திற்கு, எம். சுகுமார் ஒளிப்பதிவு செய்கிறார். படத்தொகுப்பு பணிகளை நாகூரான் ராமச்சந்திரன் மேற்கொள்ள, கலை இயக்குநராக கே.பி. நந்தபாலன் பணியாற்றுகிறார். சண்டைக் காட்சிகளை மகேஷ் மேத்யூ வடிவமைக்க, ஆடை வடிவமைப்பை எம். செல்வராஜ் மற்றும் ரிதேஷ் செல்வராஜ் கவனிக்கின்றனர்.

ஒலிப்பதிவை டி. உதய் குமார் மேற்கொள்ள, அமைவிடப் புகைப்படங்களை அன்பு பதிவு செய்கிறார். நிர்வாகத் தயாரிப்பாளராக ஆர். பாலகுமார், விநியோகத் தலைவராக பிரிதிவிராஜா சின்னசாமி, மக்கள் தொடர்பாளராக யுவராஜ், விளம்பர வடிவமைப்பாளராக தினேஷ் அசோக் ஆகியோர் பணியாற்றுகின்றனர். இப்படத்தின் ஆடியோ உரிமையை முன்னணி நிறுவனமான திங்க் மியூசிக் பெற்றுள்ளது.

இன்று நடைபெற்ற பூஜையுடன் படத்தின் பணிகள் முறைப்படி தொடங்கியுள்ள நிலையில், மதுரை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஒரே கட்டமாக படப்பிடிப்பை நடத்த படக்குழு திட்டமிட்டுள்ளது.

வலுவான கதை, திறமையான நடிகர்கள், அனுபவம் மிக்க தொழில்நுட்பக் கலைஞர்கள் மற்றும் தரமான தயாரிப்புடன் உருவாகும் 'தகப்பன்', ஜீவாவின் திரைப்பயணத்தில் ஒரு முக்கிய மைல்கல்லாகவும், தமிழ் சினிமாவில் கவனிக்கத்தக்க குடும்ப உணர்வுப் படமாகவும் அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X