தந்தை தயாரிப்பில் இணையும் பிரபல நடிகர்... ஆர்ப்பாட்டமான பர்ஸ்ட் லுக் வெளியீடு

சென்னை : புது வசந்தம் படம்மூலம் தயாரிப்பாளராக அறிமுகமான ஆர் பி சௌத்ரி பல படங்களை தயாரித்துள்ளார்.

சில காலங்கள் இவர் படங்களை தயாரிப்பதை நிறுத்திய நிலையில் மீண்டும் தயாரிப்பில் இறங்கியுள்ளார்.

தன்னுடைய மகனை வைத்து தற்போது புதிய படத்தை தயாரித்து வருகிறார்.

தயாரிப்பாளர் ஆர்பி சௌத்ரி

தயாரிப்பாளர் ஆர்பி சௌத்ரி

புது வசந்தம் படம் மூலம் தமிழ் சினிமாவில் தயாரிப்பாளராக களமிறங்கி ஏராளமான வெற்றிப் படங்களை தந்தவர் ஆர் பி சௌத்ரி. வித்தியாசமான படங்களை தயாரித்த இவர் புதிய இயக்குநர்களை தமிழ் சினிமாவிற்கு அறிமுகம் செய்தார். வெற்றி தயாரிப்பாளராக விளங்கினார்.

மீண்டும் தயாரிப்பு

மீண்டும் தயாரிப்பு

சமீப காலங்களாக இவர் தயாரிப்புப் பணியை நிறுத்தி வைத்துள்ளார். இந்நிலையில் தற்போது மீண்டும் படத் தயாரிப்பில் இறங்கியுள்ளார். இவரது மகனும் முன்னணி நடிகருமான ஜீவா நடிப்பில் தற்போது படத்தை தயாரித்து வருகிறார் ஆர்பி சௌத்ரி.

டைட்டில், பர்ஸ்ட் லுக் வெளியீடு

டைட்டில், பர்ஸ்ட் லுக் வெளியீடு

அறிமுக இயக்குநர் சந்தோஷ் ராஜன் என்பவர் இயக்கத்தில் படம் உருவாகி வருகிறது. படத்தின் சூட்டிங் நடைபெற்றுவரும் நிலையில் தற்போது படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் டைட்டிலை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். படத்திற்கு வரலாறு முக்கியம் என்று பெயரிடப்பட்டுள்ளது.

வரலாறு முக்கியம் டைட்டில்

வரலாறு முக்கியம் டைட்டில்

படத்தின் பர்ஸ்ட் லுக்கில் மிகவும் ஆர்ப்பாட்டமாக காணப்படுகிறார் ஜீவா. அவருக்கே உரிய காமெடியான உடல்மொழியை இதில் வெளிப்படுத்தியுள்ளார். போஸ்டரையொட்டி பார்க்கையில் படம் காமெடி கலாட்டாவாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

போஸ்டரை வெளியிட்ட ஜீவா

போஸ்டரை வெளியிட்ட ஜீவா

இந்தப் போஸ்டரை ஜீவா தனது ட்விட்டர் பக்கத்தில் இன்றைய தினம் வெளியிட்டுள்ளார். இரண்டு போஸ்டர்களாக அவர் வெளியிட்டுள்ளார். ஒன்றில் லுங்கியுடன் காணப்படுகிறார். இவரது நடிப்பில் வெளியான கலகலப்பு 2 படம் வெற்றிப் படமாக அமைந்தது.

Recommended Video

எனக்கு எல்லாமே என் நண்பர்கள் தான் |ACTOR JIIVA CHAT | FILMIBEAT TAMIL
வெற்றிக்காக காத்திருப்பு

வெற்றிக்காக காத்திருப்பு

3 ஹீரோக்களில் ஒருவராக இவர் இந்தப் படத்தில் நடித்திருந்தார். சுந்தர் சி இயக்கத்தில் வெளியான இந்தப் படம் வெற்றிப்படமாக அமைந்த நிலையிலும் இவருக்கு பெயரை வாங்கிக் கொடுக்கவில்லை. சமீப காலங்களில் எந்த வெற்றியையும் கொடுக்காத ஜீவாவிற்கு இந்தப் படம் கைகொடுக்குமா என்பதை பொருத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X