சிவகார்த்திகேயன் போட்டியா?.. அவர் என்னை பார்த்து வளர்ந்தவர்.. ஜீவா அதிரடி.. சரியான தெளிவு ப்பா!

சென்னை: சிவகார்த்திகேயன் நடிப்பில் கடந்த பத்தாம் தேதி வெளியான பராசக்தி திரைப்படம் சுமார் ஹிட்டடித்திருக்கிறது. அதேசமயம் ஜீவா நடிப்பில் வெளியான தலைவர் தம்பி தலைமையில் 15ஆம் தேதி வெளியாகி பராசக்தியைவிடவும் அதிகம் பாசிட்டிவ் ரெஸ்பான்ஸை பெற்றுவருகிறது. இந்நிலையில் சிவகார்த்திகேயனுக்கு சீனியரான ஜீவா சமீபத்திய பேட்டி ஒன்றில் எஸ்கே குறித்து பேசியிருக்கும் விஷயம் பலரிடம் கவனத்தை ஈர்த்திருக்கிறது.

சிவகார்த்திகேயன் இப்போது கோலிவுட்டின் டாப் நடிகர்களில் ஒருவராக வளர்ந்திருக்கிறார். அமரன் படத்தின் மெகா ஹிட் அவரது கரியரை மேற்கொண்டு உச்சத்துக்கு கொண்டு சென்றது என சொல்லலாம். அந்தப் படத்துக்கு பிறகு நடித்த மதராஸி படமும் ஓரளவு ஹிட்தான். இப்போது சுதா கொங்கரா இயக்கத்தில் பராசக்தி படம் ரிலீஸானது. ஹிந்தி திணிப்புக்கு எதிராக மாணவர்கள் தமிழ்நாட்டில் நடந்த போராட்டத்தை மையப்படுத்தி உருவாகியிருந்தது.

சுமாரான வரவேற்புதான்: கதைக்களம் தரமாக இருப்பதால் கண்டிப்பாக படமும் தரமான சம்பவமும் செய்யும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் படம் அந்த அளவுக்கு திருப்தியை ரசிகர்களுக்கு கொடுக்கவில்லை. நல்ல கதையை முழுக்க முழுக்க உணர்வுப்பூர்வமாக இல்லாமல் தேவையில்லாத காட்சிகளை எல்லாம் வைத்து இயக்குநர் கெடுத்துவிட்டார் என கூறினார்கள். வசூலை பொறுத்தவரை இந்தியாவில் மொத்தம் ஒரு வாரத்தில் 41 கோடி ரூபாய் வசூலித்திருப்பதாகவும் சாக்நில்க் இணையதளம் தெரிவிக்கிறது.

Jiiva Says Sivakarthikeyan Is Not His Competitor Interview Goes Viral
Photo Credit:

தலைவர் தம்பி தலைமையில்: இது ஒருபக்கம் இருக்க நிதிஷ் இயக்கத்தில் ஜீவா நடித்த தலைவர் தம்பி தலைமையில் படத்தில் நடித்தார். பொங்கல் வெளியீடாக ஜனவரி 15ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. இப்படமோ யாருமே எதிர்பார்க்காத வகையில் அனைவரையும் முழு திருப்திப்படுத்திவிட்டது. எவ்வளவோ உயரத்துக்கு போயிருக்க வேண்டிய நடிகர் ஜீவா என பெயர் உண்டு. அவருக்கு இந்த ஹிட் தேவையான ஒன்றுதான் என மகிழ்ச்சியோடு அனைவரும் சொல்கிறார்கள்.

சிவகார்த்திகேயன் போட்டியா?: இந்நிலையில் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் சிவகார்த்திகேயன் பற்றி ஜீவாவிடம் கேள்வி முன்வைக்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அவரோ, "நான் சினிமாவில் அறிமுகமான நேரத்தில்தான் ரவி மோகன், தனுஷ், சிம்பு எல்லாம் அறிமுகமானார்கள். அவர்களைத்தான் எனக்கு போட்டியாக நான் பார்க்கிறேன். ஆனால் சிவகார்த்திகேயனையோ அல்லது மற்ற நடிகர்களையோ எப்போதும் நான் என்னுட்டையிஅ போட்டியாளரக பார்க்கவில்லை.

அவரே சொல்லிருக்காரு: சிவகார்த்திகேயன் முதன்முறை என்னை பார்த்தபோது, 'அண்ணா உங்கல் படங்களை எல்லாம் முதல் நாள் முதல் கட்சி பார்த்து வளர்ந்திருக்கிறேன் என அவரே சொன்னார். அவரெல்லாம் என்னுடைய படங்களை பார்த்து வளர்ந்தவர். அவருக்கு நானெல்லாம் இன்ஸ்பிரேஷனாக இருந்திருக்கிறேன்" என்றார். முன்னதாக அகமது இயக்கத்தில் ஜீவா ஹீரோவாக நடித்த என்றென்றும் புன்னகை படத்தில் வினய் நடித்திருந்த கதாபாத்திரத்தில் சிவகார்த்திகேயன்தான் நடிப்பதாக இருந்தார். ஆனால் அவர் ஒத்துக்கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X