ஜீவாவுடன் கைகோர்க்கும் லார்க் ஸ்டூடியோஸ் – மதுரை பின்னணியில் உருவாகும் குடும்ப கதை!

சென்னை: சூரியை வைத்து கருடன், மாமன் ஆகிய படங்களை தயாரித்த நிறுவனம் லார்க் ஸ்டூடியோஸ். மாமன் திரைப்படம் விமர்சன ரீதியாக சுமாரான வரவேற்பை பெற்றாலும் வசூலில் சக்கைப்போடு போட்டது. சூழல் இப்படி இருக்க அந்த நிறுவனத்தின் அடுத்த படம் குறித்த அறிவிப்பு இப்போது வெளியாகியிருக்கிறது.

தமிழ் சினிமாவில் திறமை வாய்ந்த நடிகர்களில் ஒருவரான ஜீவாவுக்கு பல வருடங்கள் கழித்து தலைவர் தம்பி தலைமையில் திரைப்பட்ம் சூப்பர் டூப்பர் ஹிட்டடித்தது. அந்தத் திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, ஜீவா தற்போது மதுரை மண்ணின் மண் வாசனையை மையமாகக் கொண்ட ஒரு புதிய கதையில் நடிக்க உள்ளார். இந்தப் படத்தை, விமர்சகர்கள் மற்றும் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த 'கிடா' திரைப்படத்தின் இயக்குநர் ரா.வெங்கட் இயக்குகிறார்.

Jiiva Teams Up With Kida Director Ra Venkat for an Emotional Father-Son Drama
Photo Credit:

நுணுக்கமான உணர்வுகள்: மதுரை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளை பின்னணியாகக் கொண்டு உருவாகும் இந்த திரைப்படம், அப்பா - மகன் உறவின் உணர்வுகளையும், அவர்களுக்கிடையேயான பாசப் பிணைப்பையும் மையமாகக் கொண்டு உருவாகிறது. குடும்ப உறவுகளின் ஆழத்தையும், வாழ்க்கையின் நுணுக்கமான உணர்வுகளையும் பேசும் இந்தக் கதை, அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவரும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

Also Read
Nooru Sami First Review - நூறு சாமி முதல் விமர்சனம்.. படம் எப்படி இருக்காம் தெரியுமா?
Nooru Sami First Review - நூறு சாமி முதல் விமர்சனம்.. படம் எப்படி இருக்காம் தெரியுமா?

நம்பிக்கை இருக்கிறது: இந்தப் படத்தை கே. குமார் தயாரிக்கிறார். ஒளிப்பதிவை பிரபல ஒளிப்பதிவாளர் எம். சுகுமார் கவனிக்க, படத்தொகுப்புப் பணிகளை கணேஷ் சிவா மேற்கொள்கிறார். அனுபவம் மிக்க தொழில்நுட்பக் கலைஞர்களின் பங்களிப்புடன் உருவாகும் இந்த திரைப்படம், தரமான படைப்பாக அமையும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.

ஷூட்டிங் எப்போது?: அடுத்த மாதம் மதுரை மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் ஒரே கட்டமாக படப்பிடிப்பு தொடங்கப்பட உள்ளது. கதை, நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் குழுவின் வலிமையால், இந்த திரைப்படம் தற்போது திரையுலகில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மண்ணின் இயல்பான வாழ்க்கை முறையையும், அப்பா - மகன் உறவின் உணர்வுபூர்வமான தருணங்களையும் அழுத்தமாகப் பதிவு செய்யவிருக்கும் இந்த திரைப்படம், ஜீவாவின் திரைப்பயணத்தில் மேலும் ஒரு முக்கியமான படைப்பாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Read more about: jiiva kida ஜீவா கிடா
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X