கார்த்தி முடிப்பாருன்னு பார்த்தா.. ஜீவா ஜெயிச்சுட்டாரே.. பாவம் சிவகார்த்திகேயன்.. பரவும் TTT தீ!
சென்னை: இந்த பொங்கலுக்கு குறைந்த பட்ஜெட்டில் வெளியாகி தியேட்டர்களில் ரசிகர்களை மகிழ்ச்சி வெள்ளத்தில் ஆழ்த்தி வருகிறது ஜீவா நடிப்பில் நேற்று வெளியான 'தலைவர் தம்பி தலைமையில்' திரைப்படம். விஜய்யின் ஜன நாயகன் படம் வெளியாகாத நிலையில், பராசக்தி சிவகார்த்திகேயன் உடன் போட்டியில் நாங்க கோதாவில் குதிக்கிறோம் என கார்த்தி தனது 'வா வாத்தியார்' படத்தை இறக்கினார். ஆனால், ஆளவிடுங்கடா சாமி என கார்த்தி ரசிகர்களே ஜப்பான் படத்துக்குப் பிறகு கதற ஆரம்பித்து விட்டனர்.
பராசக்தி திரைப்படம் திமுகவின் முரசொலியாக மாறும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், படம் வெளியான 2 நாளில் தீ பெரிதாக அணைந்த நிலையில், பொங்கல் விடுமுறை நாட்களில் ஓரளவுக்கு பற்றிக் கொண்டு எரியத் தொடங்கியுள்ளது.

விஜய் படங்களுக்கே டஃப் கொடுத்து வந்த கார்த்தி இந்த முறை காரியத்தை சாதிக்காத நிலையில், சந்தோஷத்தில் இருந்த பராசக்தி டீமுக்கு தற்போது தலைவலியாக மாறி நிற்கிறதாம் 'தலைவர் தம்பி தலைமையில்' திரைப்படம்.
பல்பு வாங்கிய பராசக்தி: பொங்கல் விடுமுறையை முன்னிட்டு ஏற்கனவே அறிவித்தபடி இந்த வாரமே சிவகார்த்திகேயனின் பராசக்தி திரைப்படம் வெளியாகி இருந்தால், வா வாத்தியார் மற்றும் தலைவர் தம்பி தலைமையில் உள்ளிட்ட படங்கள் வெளியாகி இருக்காது. கடந்த வாரமே ஜன நாயகன் உடன் மோதுவதற்காக 10ம் தேதி வெளியான பராசக்தி திரைப்படம் பொங்கல் வசூலை அள்ள போட்டி போட்டு வருகிறது. பெரிய பட்ஜெட்டில் உருவான படம் இந்நேரம் 100 கோடிக்கு மேல் வசூல் செய்திருக்க வேண்டிய நிலையில், உலகளவில் 70 கோடி வரை மட்டுமே வசூல் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. தயாரிப்பு நிறுவனம் கண்டிப்பாக பொங்கலுக்கு படம் வசூல் செய்த அறிவிப்பை இன்று வெளியிடுமா? அல்லது வரும் திங்கட்கிழமை பொங்கல் கலெக்ஷன் மொத்த வசூலை அறிவிக்குமா என்பதை வெயிட் பண்ணி பார்ப்போம்.
கடுப்பேற்றிய கார்த்தி: நலன் குமாரசாமி இயக்கத்தில் கார்த்தி நடித்த வா வாத்தியார் திரைப்படம் காலம் தாழ்த்தி வெளியான நிலையில், படத்தில் இடம்பெற்ற எம்ஜிஆர் மேஜிக் ஓரளவுக்குத்தான் வொர்க்கவுட் ஆனது. பொங்கல் வின்னர் ஆகும் அளவுக்கு படம் வொர்த்தாக இல்லை என ரசிகர்கள் கடுப்பாகி உள்ளனர். ஸ்டூடியோ க்ரீன் கடனை எல்லாம் அடைத்து ரிலீஸ் செய்தாலும், படம் பந்தயம் அடிக்காத நிலையில், சர்தார் 2 மற்றும் மார்ஷல் உள்ளிட்ட படங்களை நம்பி கார்த்தி ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.
சிவகார்த்திகேயனுக்கு டஃப் கொடுக்கும் ஜீவா: குறைந்த பட்ஜெட்டில் ஒரே நாளில் நடைபெறும் படமாக காமெடி, அரசியல், டிராமா கலந்து மலையாள இயக்குநர் உருவாக்கிய தலைவர் தம்பி தலைமையில் திரைப்படம் புக் மை ஷோ டிக்கெட் புக்கிங்கில் பொங்கல் பண்டிகையை விட மாட்டுப் பொங்கலுக்கு அதிகரித்து வருவதாக ரசிகர்கள் ஸ்க்ரீன் ஷாட்டுகளை ஷேர் செய்து வருகின்றனர். ஜீவாவுக்கு நீண்ட வருடங்களுக்குப் பிறகு ஒரு கம்பேக் படமாக இந்த படம் அமைந்துள்ளதாக கூறுகின்றனர்.


Click it and Unblock the Notifications











