பொங்கலுக்கு மோதும் தல- தளபதி படங்கள்
சென்னை: வரும் 2014ம் ஆண்டு பொங்கல் தினத்தன்று அஜீத் குமாரின் 54வது படமும், விஜய்யின் ஜில்லா படமும் ரிலீஸ் ஆகிறது.
நேசன் இயக்கத்தில் விஜய், காஜல் அகர்வால், மோகன்லால் நடித்து வரும் ஜில்லா படம் பொங்கலுக்கு ரிலீஸ் ஆகும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டுவிட்டது. விஜய்யின் தலைவா வரும் ஆகஸ்ட் மாதம் ரிலீஸாக இருக்கிறது.
இந்நிலையில் அஜீத் குமாரின் பெயரிடப்படாத படம் தலைவாவுக்கு அடுத்து ரிலீஸாகும் என்று கூறப்படுகிறது.

சிவா இயக்கத்தில் அஜீத்
அஜீத், தமன்னா, சந்தானம் ஆகியோரை வைத்து சிவா இயக்கி வரும் படத்தின் படப்பிடிப்பு 60 சதவீதம் முடிந்துவிட்டதாம். இந்த படத்திற்கு விநாயகம் பிரதர்ஸ் என்று பெயரிடப்பட்டதாக கூறப்பட்டது.

சுவிட்சர்லாந்தில் 2 பாடல்கள்
அஜீத்தின் 54வது படத்தின் 2 பாடல்கள் சுவிட்சர்லாந்தில் படமாக்கப்பட்டுள்ளதாம்.

பொங்கலுக்கு ரிலீஸ்
அஜீத்தின் 54வது படம் வரும் பொங்கல் அன்று ரிலீஸ் ஆகிறது என்று தயாரிப்பு வட்டம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

தல-தளபதி பொங்கல்
பொங்கல் அன்று தல-தளபதி ஆகியோரின் படங்கள் மோதவிருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











