»   »  மனைவிக்குப் பயந்து.. ஸ்ருதி ஹாசனின் உதட்டை "டச்" பண்ண மறுத்த ஜான் ஆப்ரகாம்!

மனைவிக்குப் பயந்து.. ஸ்ருதி ஹாசனின் உதட்டை "டச்" பண்ண மறுத்த ஜான் ஆப்ரகாம்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை: ‘வெல்கம் பேக்' படத்தில் ஸ்ருதிஹாசனுக்கு லிப் டு லிப் முத்தம் கொடுத்து நடிக்க நடிகர் ஜான் ஆபிரஹாம் மறுத்து விட்டாராம்.

கரும்பு தின்னக் கூலியா என்பது போல் பல படங்களில் நடிகர்களே,நாயகிகளுடன் முத்தக்காட்சி உள்ளிட்ட நெருக்கமான காட்சிகளை வைக்கச் சொல்லி வற்புறுத்துவதாக குற்றச்சாட்டுகள் உண்டு. சிலர் இக்காட்சிகளில் பல டேக்குகள் வாங்குவதாகவும் கூறப்படுவதுண்டு.

ஆனால், இவர்களில் இருந்து வித்தியாசப்பட்டு, இயக்குநர் வற்புறுத்தியும் நடிகை சுருதிஹாசனுக்கு முத்தம் தருவது போன்ற காட்சியில் நடிக்க மறுத்து விட்டாராம் நடிகர் ஜான் ஆபிரஹாம்.

வெல்கம் பேக்...

வெல்கம் பேக்...

வெல்கம் பேக் என்ற படம் மூலம் முதன்முறையாக நடிகர் ஜான் ஆபிரஹாமுடன் ஜோடி சேர்ந்துள்ளார் நடிகை சுருதிஹாசன். இப்படத்தின் படப்பிடிப்புகள் வேகமாக நடந்து வருகிறது.

முதலில் ஓகே... அப்புறம் நோ

முதலில் ஓகே... அப்புறம் நோ

இந்நிலையில், கதைப்படி சுருதிக்கு, ஜான் ஆபிரஹாம் உதட்டில் முத்தமிடுவது போன்ற காட்சி. காட்சி தொடர்பாக இருவருக்கும் தெரிவிக்கப் பட்டது. முதலில் இக்காட்சிக்கு ஓகே சொன்ன ஜான் திடீரென நடிக்க மறுத்து விட்டாராம்.

சமாளிப்பு...

சமாளிப்பு...

சுருதிஹாசனை என்னால் முத்தமிட முடியாது என இயக்குனரிடம் கறாராக கூறிவிட்டாராம் ஜான் ஆபிரஹாம். இதனால் டைரக்டருக்கு ஏமாற்றம் ஏற்பட்டதாம். பின்னர் ஒருவழியாக முத்தம் கொடுக்காமலேயே இருவரையும் நெருக்கமாக நடிக்க வைத்து காட்சியை சமாளித்தாராம் இயக்குநர்.

மனைவியின் உத்தரவு...

மனைவியின் உத்தரவு...

கடந்த வருடம் பிரியா ரஞ்சலை திருமணம் செய்து கொண்டார் ஜான் ஆபிரஹாம். அதற்குப் பிறகு இவ்வாறு முத்தக் காட்சிகளில் நடிப்பதில்லை என முடிவெடுத்துள்ளாராம் அவர். காரணம் கணவர் அவ்வாறு நடிப்பது பிரியாவிற்கு பிடிக்கவில்லையாம்.

வித்தியாசமானவர்...

வித்தியாசமானவர்...

சுருதிக்கு முத்தம் தர ஜான் ஆபிரஹாம் மறுத்த விஷயம் தான் தற்போது பாலிவுட்டில் பரபரப்பாகப் பேசப்பட்டு வருகிறது. இந்த சம்பவத்தைத் தொடர்ந்து மற்ற நடிகர்களுக்கு மத்தியில் ஜான் வித்தியாசமானவர் என படக்குழுவினர் பாராட்டி வருகின்றனர்.

English summary
The latest news related to John is, apparently John refused to kiss his co-star Shruiti in ‘Welcome Back’ as he happens to be no longer comfortable with kissing and intimate scenes post marriage to his wife, Priya Runchal.
Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil