இப்போதான் தெரியுது.. பாகுபலி படத்துல வேம்புலி நடிச்ச கேரக்டர் இதுதான்.. வைரலாகும் போட்டோஸ்!

சென்னை: பாகுபலி படத்தில் நடிகர் ஜான் கோக்கென் நடித்த கதாப்பாத்திரத்தின் போட்டோ வெளியாகியுள்ளது.

பிரபல தெலுங்கு நடிகர் ஜான் கோக்கென். மும்பையை பூர்விகமாக கொண்ட இவர் தெலுங்கு படங்களின் மூலம் சினிமாவுக்கு அறிமுகமானார்.

எஸ்எஸ் ராஜமவுலி இயக்கத்தில் வெளியான பாகுபலி தி பிகினிங் படத்திலும் நடித்துள்ளார் ஜான் கோக்கென். இதேபோல் கேஜிஎஃப் படத்திலும் நடித்திருக்கிறார்.

வேம்புலி கதாப்பாத்திரம்

வேம்புலி கதாப்பாத்திரம்

இந்நிலையில் பா ரஞ்சித் இயக்கத்தில் கடந்த மாதம் வெளியான சார்பட்டா பரம்பரை படத்திலும் நடித்துள்ளார் ஜான் கோக்கென். இந்தப் படத்தில் வேம்புலி கதாப்பாத்திரத்தில் முரட்டு மீசையுடன் குத்துச்சண்டை வீரராக மிரட்டியுள்ளார் ஜான் கோக்கேன்.

மிரட்டல் நடிப்புக்கு பாராட்டு

மிரட்டல் நடிப்புக்கு பாராட்டு

ஜான் கோக்கெனின் மிரட்டல் நடிப்பை ரசிகர்கள் மட்டுமின்றி சினிமா பிரபலங்களும் பாராட்டினர். 40 வயதான ஜான் கோக்கென் 2012ஆம் ஆண்டு பிரபல நடிகையான மீரா வாசுதேவனை திருமணம் செய்தார்.

தமிழ் மலையாள படங்கள்

தமிழ் மலையாள படங்கள்

மலையாள நடிகையான மீரா வாசுதேவனுக்கு ஜான் கோக்கொன் இரண்டாவது கணவர் ஆவார். ஆனால் இருவருக்குள்ளும் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் 2016 ஆம் ஆண்டு விவாகரத்து செய்து கொண்டனர். பின்னர் ஜான் கோக்கென் கடந்த 2019 ஆம் ஆண்டு நடிகையும் தொகுப்பாளினியுமான பூஜா ராமச்சந்திரனை காதலித்து இரண்டாவது திருமணம் செய்துக் கொண்டார்.

பாகுபலி பட போட்டோ

பாகுபலி பட போட்டோ

இருவரும் சமூக வலைதளங்களில் சேர்ந்து வெளியிடும் போட்டோக்கள் இணையத்தை திணறடித்து வருகிறது. இந்நிலையில் நடிகர் ஜான் கோக்கென் பாகுபலி படத்தில் தனது கதாப்பாத்திர போட்டோவை தனது டிவிட்டர் பக்கத்தில் ஷேர் செய்துள்ளார். மேலும் அந்த போட்டோவுடன் உருக்கமான தகவலையும் பகிர்ந்துள்ளார் ஜான் கோக்கென்.

என் பெயர் யாருக்கும் தெரியாது

என் பெயர் யாருக்கும் தெரியாது

அதாவது, நான் 'பாகுபலி'யில் இந்த காட்சியில்தான இருந்தேன். மிகச்சிறிய வேடம் அது. அந்த ஷூட்டிங்கின் நாட்களை நான் நினைவில் வைத்துள்ளேன். அந்தப் படத்தில் யாருக்கும் என் பெயர் தெரியாது.. நானே எனக்குள் சொல்லிக்கொள்வேன் ஒரு நாள் பெரிய லீக்கில் வருவேன். அப்போது அனைவருக்கும் என் பெயர் தெரியும் என்று.. அந்த நாள் வந்துவிட்டது சார்பட்டாவுடன்.. என பதிவிட்டுள்ளார்.

அஜித் சார் சொன்னது போல்

அஜித் சார் சொன்னது போல்

மேலும் இந்தப் புகைப்படத்தை நான் இங்கு பெருமிதத்துடன் பகிர்கிறேன். அஜித் சார் கூறியதுபோல், வாழ்க்கையில் நிறைய ஏற்ற, இறக்கங்கள் வரலாம். ஆனால் நீங்கள் நம்பிக்கையுடன் இருக்க வேண்டும். உங்கள் நேரம் வரும்வரை காத்திருக்க வேண்டும். அந்தக் காத்திருப்பு நாளில் உங்களைத் தகுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.

உங்கள் கனவுக்காக போராடுங்கள்

உங்கள் கனவுக்காக போராடுங்கள்

எதுவும் கடினம் இல்லை. ஆகையால், எப்போதும் நம்பிக்கையைத் தளரவிடாதீர்கள். உங்களுக்கு இருப்பது ஒரு வாழ்க்கையே. அந்த வாழ்க்கையில் உங்களின் கனவுக்காகப் போராடுங்கள் என் பதிவிட்டுள்ளார். மேலும் இந்த போட்டோவை ஃபேஸ்புக்கில் ஷேர் செய்த ரோஹித் நெல்சனுக்கும் நன்றி கூறியுள்ளார் ஜான் கோக்கென்.

காலக்கியர்கள் கூட்டத்தில் ஒருவராக..

காலக்கியர்கள் கூட்டத்தில் ஒருவராக..

ஜான் கோக்கென் பாகுபலி படத்தில் காலக்கியர்களில் கூட்டத்தில் ஒருவராக நடித்துள்ளார். பாகுபலி படத்தில் பெரும் படை பலத்தை கொண்ட காலக்கியர்கள் மகிழ்மதி மீது போர்த் தொடுப்பார்கள் அதில் பாகுபலி மற்றும் பல்வால் தேவன் தலைமையிலான மகிழ்மதியின் படையே வெல்லும் என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X