அவர் பெண்ணாக இருந்தால் லவ் லட்டர்.. கமலுக்கு ஐ லவ் யூ.. பிரபல நடிகர் ஓபன் டாக்

சென்னை: சூர்யா, பூஜா ஹெக்டே, ஜெயராம் ஆகியோர் நடித்துள்ள ரெட்ரோ திரைப்படம் மே 1ஆம் தேதி ரீலீஸ் ஆக இருக்கிறது. இப்படத்தை கார்த்திக் சுப்பராஜ் இயக்கியுள்ளார். கங்குவா படத்தின் தோல்விக்கு பிறகு ரெட்ரோ வெளியாவதால் ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்போடு காத்திருக்கிறார்கள். இந்நிலையில், இப்படத்தின் புரோமோஷன் நிகழ்ச்சியில் பங்கேற்ற பிரபல நடிகர் ஒருவர் சூர்யா பெண்ணாக இருந்தால் லவ் லட்டர் கொடுத்திருப்பேன் என தெரிவித்திருக்கிறார். தற்போது இவர் பேசிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

கங்குவா படத்தின் தோல்விக்கு பிறகு சூர்யா நிதானமாக நல்ல கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். தற்போது கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள ரெட்ரோ திரைப்படம் இன்னும் 3 நாட்களில் திரையரங்குகளில் ரிலீஸ் ஆகிறது. இப்படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மொழிகளில் வெளியாவதால் படத்திற்கான எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளது. சூர்யாவின் ரசிகர்களும் நான் நீ என போட்டி போட்டுகொண்டு ஆன்லைனில் முன்பதிவு செய்துள்ளனர். படத்தின் அறிவிப்பு வெளியான நாள் முதலே ரசிகர்கள் இப்படத்தை காண ஆவலுடன் காத்திருக்கின்றனர். படத்திற்கு மிகப்பெரிய பலமாக பாடல்களும் நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது.

joju-george-calls-suriya-a-real-superstar-at-a-retro-film-promotion-event

கனிமா குத்தாட்டம்: ரெட்ரோ படத்தின் முதல் பாடலான கண்ணாடி பூக்கள் பாடல் இளைஞர்களின் மனதை வருடி சென்றது. இப்பாடலை கேட்டு தூங்க முடியாமல் இரவுகளை தொலைத்த ரசிகர்கள் ஏராளம் உள்ளனர். அத போன்று கனிமா பாடல்கள் சமூகவலைதளங்களை ஆக்கிரமித்தது. கனிமா பாடலில் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணனும் நடிகர்களோடு சேர்ந்து ஆட்டம் போட்டிருப்பார். இப்பாட்டிற்கு நடிகை பூஜா ஹெக்டேவின் நடனம் அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்தது. இதனை ரீல்ஸ் செய்து ரீ கிரியேட் செய்து சமூகவலைதளங்களில் வீடியோவாகவும் வெளியிட்டு ரசிகர்கள் ஆர்ப்பரித்தார்கள். பூஜா ஹெக்டேவின் நடன அசைவுகள் வைஃப் மோடாக மாறியது குறிப்பிடத்தக்கது.

லவ் லட்டர் கொடுத்திருப்பேன்: இன்னும் 2 நாட்களில் ரெட்ரோ படம் வெளியாக இருக்கும் நிலையில், அதற்கான புரோமோஷன் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், நேற்று கேரளாவில் ரெட்ரோ படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்வி்ல பங்கேற்ற நடிகர் ஜோஜூ ஜார்ஜ், நான் ஒரு பெண்ணாக இருந்திருந்தால் கண்டிப்பாக சூர்யா சாருக்கு லவ் லட்டர் கொடுத்திருப்பேன். அவரது தோற்றத்திற்காகவும், அழகை பார்த்து லவ் லட்டர் கொடுத்திருக்க மாட்டேன். சூர்யா சாரின் நல்ல மனதிற்கும், கண்ணியத்திற்கும், அவர் செய்யும் நல்ல செயல்களுக்காக கொடுத்திருப்பேன். அவரை பற்றி நீங்கள் அதிகளவில் தெரிந்து வைத்த அனைத்தும் எனக்கும் பிடிக்கும். உண்மையில் அவர் ஒரு ரியல் சூப்பர் ஸ்டார் என தெரிவித்தார். மேலும், ஜோஜூ ஜார்ஜ் இதை கூறும்போது சூர்யா வெட்கத்தில் சிரித்தார்.

joju-george-calls-suriya-a-real-superstar-at-a-retro-film-promotion-event

கமலுக்கு ஐ லவ் யூ: மலையாள சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் ஜோஜூ ஜார்ஜ் தமிழ் படங்களில் அதிக கவனம் செலுத்தி வருகிறார். கமல், சிம்பு நடித்திருக்கும் தக் லைஃப் படத்திலும் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். சமீபத்தில் நடந்த தக் லைஃப் படத்தின் புரோமோஷன் நிகழ்ச்சியில் பேசிய நடிகர் கமல்ஹாசன், 2 நடிகைகள் இருந்தும் எனக்கு அவர்கள் ஒரு ஐ லவ் யூ கூட சொன்னது இல்லை. ஆனால், ஜோஜூ ஜார்ஜ் என்னிடம் தினமும் காலையில் குட்மார்னிங் சொல்வதற்கு பதிலாக ஐ லவ் யூ சார் என்றே கூறினார். இதன் மூலம் அவர் என் மீது வைத்திருக்கும் அன்பை தெரிந்துகொண்டேன் என தெரிவித்தார். இந்நிலையில், கமலுக்கு ஐ லவ் யூ, சூர்யாவிற்கு லவ் லட்டர் கொடுப்பதாக ஜோஜூ ஜார்ஜ் கூறியதை கேட்டு ரசிகர்கள் அவரை பயங்கரமான ஆளா இருக்காரே என ஜாலியாக கமெண்ட் பதிவிட்டுள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X