திடீரென டிரெண்டான #ஜோசப்விஜய்.. ட்விட்டரை தெறிக்கவிடும் தளபதி ரசிகர்கள்.. என்ன ஆச்சு?
சென்னை: நடிகர் விஜய் கிறிஸ்து மதத்தை சேர்ந்தவர் என அவருக்கு எதிரான ட்வீட்களும் ஜோசப் விஜய் தான் அதுக்கு இப்போ என்ன? அவர் எப்போதும் எங்க தளபதி தான் என விஜய் ரசிகர்களும் சண்டை போட்டு #ஜோசப்விஜய் ஹாஷ்டேக்கை டிரெண்ட் செய்து வருகின்றனர்.
திடீரென இப்படியொரு ஹாஷ்டேக் டிரெண்டாக என்ன காரணம் என பல ரசிகர்கள் தலையை பிய்த்துக் கொண்டு கேள்வி எழுப்பி வரும் ட்வீட்களும் அதிகளவில் தென்படுகின்றன.
சாதி, மதங்களை கடந்து மனிதராகவும் அவரது சாதனையை மட்டுமே பாருங்கள் என்கிற நியூட்ரல் ஃபேன்ஸ் ட்வீட்களும் நிறைந்து டாப் டிரெண்டிங்கில் அந்த ஹாஷ்டேக் டிரெண்டாகி வருகிறது.

திடீர் டிரெண்டிங்
#ஜோசப்விஜய் என்ற ஹாஷ்டேக் திடீரென ட்விட்டரில் டிரெண்டாகி வருகிறது. நேற்று கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு ஏகப்பட்ட சினிமா பிரபலங்கள் வாழ்த்து கூறி சகோதரத்துவத்தை பரப்பி வந்த நிலையில், இன்று இப்படியொரு ஹாஷ்டேக்கில் சில விஷமிகள் நெகட்டிவிட்டியை பரப்பி வருகின்றனர்.

விஜய் ரசிகர்கள் ஆதரவு
நடிகர் விஜய் குறித்து தவறான பரப்புரையை சில விஷமிகள் மேற்கொண்டு வந்த நிலையில், ஜோசப் விஜய் ஆக இருந்தால் தான் என்ன? அவர் எங்க தளபதி விஜய் தான், எங்களுக்கு எப்பவுமே அண்ணன் தான் என ஏகப்பட்ட ரசிகர்கள் அதே ஹாஷ்டேக்கில் நடிகர் விஜய்க்கு ஆதரவு குரல் கொடுத்து வருகின்றனர்.

எம்மதமும் சம்மதம்
மதத்தின் பெயரால் நடிகர் விஜய்யை சீண்டி பார்க்கும் நபர்களுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக ஏகப்பட்ட ரசிகர்கள் இந்து, கிறிஸ்டியன், முஸ்லிம் என எம்மதமும் சம்மதம் என நடிகர் விஜய் வெளிப்படுத்திய பல தருணங்களின் புகைப்படங்களையும் சினிமா காட்சிகளையும் ஷேர் செய்து வைரலாக்கி வருகின்றனர்.

சில அஜித் ரசிகர்கள்
விஜய்க்கு எதிரான ஹாஷ்டேக்கை சில அஜித் ரசிகர்கள் டிரெண்ட் செய்து வரும் நிலையில், பல அஜித் ரசிகர்கள் இது தவறான விஷயம் சாதியின் பெயரால் மதத்தின் பெயரால் மனிதர்களை பிரித்துப் பார்க்க கூடாது நான் ஒரு தல ரசிகனா இருந்தாலும் இதனை கண்டிக்கிறேன் என போட்டுள்ள ட்வீட்கள் தான் உண்மையான அஜித் ரசிகர்களை அடையாளம் காட்டுகின்றன.


Click it and Unblock the Notifications











