'அடுத்த சூப்பர் ஸ்டார்'.. நன்றி நன்றி! - பத்திரிகைக்கு விஜய் கடிதம்
அடுத்த சூப்பர் ஸ்டார் என்ற தலைப்பில் கருத்துக் கணிப்பு நடத்தி தன் பெயரைத் தேர்வு செய்த வாரப் பத்திரிகைக்கு நன்றிக் கடிதம் எழுதியுள்ளார் நடிகர் விஜய்.
தமிழ் பத்திரிகைகள் மற்றும் இணைய வெளியில் பெரும் சர்ச்சையாக உருவெடுத்துள்ளது இந்த அடுத்த சூப்பர் ஸ்டார் விவகாரம்.

ரசிகர்கள் சண்டை
குறிப்பாக சமூக வலைத்தளங்களில் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு விஜய்யை காய்ச்சி எடுத்து வருகிறார்கள் ரசிகர்கள்.

அடுத்த மக்கள் திலகம்னு சொல்லிப் பாருங்களேன்
'அடுத்த மக்கள் திலகம், புரட்சித் தலைவர், நடிகர் திலகம், அல்லது அடுத்த முதல்வர் என்ற தலைப்புகளில் கருத்துக்கணிப்பு நடத்த முடியுமா? இது புரியாமல் கருத்துக் கணிப்பு நடத்தினார்களா.. அல்லது வேண்டுமென்றே பரபரப்புக்காக இப்படி செய்தார்களா?' என்றெல்லாம் கேள்வி எழுப்பியுள்ளனர்.

விஜய் ரசிகர்கள்
பதிலுக்கு விஜய் ரசிகர்களும் மல்லுக்கட்டி வருகிறார்கள். இந்த நிலையில் தன்னை தேர்வு செய்த பத்திரிகைக்கு நன்றிக் கடிதம் எழுதியுள்ளார் விஜய்.

நன்றிக் கடிதம்
அந்தக் கடிதத்தில், "தாங்கள் நடத்திய மகா சர்வேயில் என்னை அடுத்த சூப்பர் ஸ்டாராக தேர்வு செய்ததற்கு மனப்பூர்வமாக நன்றியைத் தெரிவிக்கிறேன்.
மெகா சர்வே போட்டியைத் திறம்பட நடத்திய உங்களுக்கும், ஊழியர்களுக்கும், வாக்களித்தவர்களுக்கும் நன்றி.
நீங்கள் தந்திருக்கும் கவுரவம் என்னை மேலும் உற்சாகத்தோடு வேலைப் பார்க்க வைத்துள்ளது," என்று குறிப்பிட்டுள்ளார் விஜய்.

விஜய்
முன்பெல்லாம் விஜய்யின் அறிக்கை அல்லது கடிதங்களை வெறும் விஜய் என்ற பெயரில்தான் வெளியிடுவார் அவரது மேனேஜர் பிடி செல்வகுமார். ஆனால் இப்போது அவரது கடிதத் தலைப்பில் சி ஜோசப் விஜய் என்றே அச்சிட்டு அனுப்பி வருகிறார்.


Click it and Unblock the Notifications











