Dhanush - அதற்காக தனுஷுக்கு ரெக்கமெண்ட் செய்ததே ரஜினிகாந்த்தானா?..வெளியான டாப் சீக்ரெட்..இது வேற நடந்திருக்கா
சென்னை: Dhanush (தனுஷ்) தனுஷுக்கு ரஜினிகாந்த் ரெக்கமெண்ட் செய்ததாக கோலிவுட்டில் புதிய தகவல் வெளியாகியிருக்கிறது.
தனுஷ் தற்போது கேப்டன் மில்லர் படத்தில் நடித்திருக்கிறார். படமானது பொங்கலுக்கு ரிலீஸாகிறது. அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் ப்ரியங்கா மோகன், சிவராஜ்குமார் உள்ளிட்ட பலர் நடித்திருக்கின்றனர். அருண் இதற்கு முன்னர் இயக்கிய ராக்கி, சாணிக்காயிதம் ஆகிய இரண்டு படங்களுமே கவனம் ஈர்த்தவை என்பதால் இந்தப் படத்தின் மீதான எதிர்பார்ப்பும் எகிறியுள்ளது.

இயக்குநர் தனுஷ்: தனுஷ் நடிகராக மட்டுமின்றி இயக்குநராகவும் ஜொலித்துவருகிறார். ராஜ்கிரண் உள்ளிட்டோரை வைத்து அவர் இயக்கிய பவர்பாண்டி படம் சூப்பர் டூப்பர் ஹிட்டடித்தது. தனது 50ஆவது படத்தையும் அவரே இயக்குகிறார். அதுதொடர்பான வேலைகள் மும்முரமாக நடந்துவருகின்றன. சன் பிக்சர்ஸ் தயாரிக்க ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். இந்தப் படம் மட்டுமின்றி இன்னொரு படத்தையும் அவர் இயக்கவிருப்பதாக கூறப்படுகிறது.
பிரிந்த தனுஷ்: இதற்கிடையே தனுஷ் கடந்த 2004ஆம் ஆண்டு ரஜினியின் மூத்த மகள் ஐஸ்வர்யாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார். அவர்களுக்கு யாத்ரா, லிங்கா என்ற இரண்டு மகன்கள் இருக்கிறார்கள். சுமூகமாக போய்க்கொண்டிருந்த திருமண வாழ்க்கை சில வருடங்களுக்கு பிரிவில் நின்றது. இருவரும் பிரிந்தாலும் இதுவரை இரண்டு பேரும் விவாகரத்து பெறவில்லை. அவர்களை சேர்த்து வைக்க குடும்பத்தினர் முயன்றுவருவதாக கூறப்படுகிறது.
பாலிவுட்: கோலிவுட்டில் அறிமுகமானபோது தனுஷ் மீது ஏகப்பட்ட விமர்சன அம்புகள் ஏவப்பட்டன. குறிப்பாக அவரது உருவத்தை வைத்து கடுமையாக கிண்டல் செய்தனர். ஆனால் அதை கண்டு அஞ்சாத தனுஷ்; தனது திறமையை அமைதியாக வளர்த்து அசுர வேகத்தில் உயர்ந்தார். தற்போது பாலிவுட்டிலும் தவிர்க்க முடியாத நடிகராக வலம் வந்துகொண்டிருக்கிறார்.
செய்யாறு பாலு பேட்டி: பொதுவாக கோலிவுட்டிலிருந்து பாலிவுட் சென்று நடிகைகள் கோலோச்சியிருக்கிறார்கள். நடிகர்கள் பெரும்பாலும் கோலோச்சியதில்லை. ஆனால் விதிவிலக்காக தனுஷ் இருக்கிறார். இப்படிப்பட்ட சூழலில் பத்திரிகையாளர் செய்யாறு பாலு சமீபத்தில் தனியார் யூட்யூப் சேனல் ஒன்றுக்கு பேட்டியளித்திருந்தார்.
ரஜினியின் ரெக்கமெண்ட்: அவர் அளித்த பேட்டியில், "தனுஷ் திறமையான நடிகராக இருந்தாலும் அவரது முதல் விசிட்டிங் கார்டு என்றால் அது ரஜினியின் மருமகன் என்பதுதான். பொதுவாக பாலிவுட்டில் தென் மாநில ஆட்களை வளரவிட மாட்டார்கள். அது ஒரு மாஃபியா செயல்பாடு போன்றது. ஆனால் அதையெல்லாம் மீறி தனுஷ் வென்றிருக்கிறார். ஏனெனில் ரஜினிகாந்த்தே நேரடியாக சில இயக்குநர்களுக்கு ஃபோன் செய்து தனுஷ் எனது மாப்பிள்ளைதான். அவரை உள்ளே விடுங்கள் என சிபாரிசு செய்திருக்கிறார்" என்றார்.


Click it and Unblock the Notifications











