தேவையில்லாத அசிங்கங்கள் அரங்கேறியிருக்காது.. அஜித்துக்கு அட்வைஸ் செய்த அந்தணன்

சென்னை: அஜித்குமார் நடிப்பில் விடாமுயற்சி, குட் பேட் அக்லி ஆகிய படங்கள் உருவாகியிருக்கின்றன. இவற்றில் விடாமுயற்சி திரைப்படம் பொங்கலுக்கு ரிலீஸாவதாக இருந்தது. ஆனால் ரிலீஸ் தாமதமாகி பிப்ரவரி 6ஆம் தேதிக்கு தள்ளிப்போயிருக்கிறது.. அதேபோல் குட் பேட் அக்லி திரைப்படம் ஏப்ரல் 10ஆம் தேதி ரிலீஸாகவிருக்கிறது. சூழல் இப்படி இருக்க துபாயில் நடந்த கார் ரேஸில் கலந்துகொண்டு அஜித்தின் டீம் மூன்றாவது இடத்தை பிடித்தது. இந்தச் சூழலில் பிரபல பத்திரிகையாளர் அந்தணன் அஜித் குறித்து பேசியிருக்கிறார்.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான அஜித்துக்கு ஏராளமானோர் ரசிகர்களாக இருக்கிறார்கள். அவரது நடிப்பில் கடைசியாக துணிவு திரைப்படம் வெளியானது. அந்தப் படம் சூப்பர் டூப்பர் ஹிட்டடித்தது. அந்தப் படத்துக்கு பிறகு மகிழ் திருமேனி இயக்கத்தில் விடாமுயற்சி படத்தில் நடித்தார். படத்தின் ஷூட்டிங் தொடங்கி மிக மெதுவாக நடந்தது. ஒருவழியாக படத்தின் டீசர் மற்றும் முதல் சிங்கிளும் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றிருந்தன.

anthanan ajithkumar


ரிலீஸ் தாமதம்: நீண்ட தாமதத்துக்கு பிறகு விடாமுயற்சி படத்திலிருந்து தொடர்ந்து அப்டேட்டுகள் வந்துகொண்டிருந்ததால் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்திருந்தார்கள். அதில் முத்தாய்ப்பாக படமானது ஜனவரி 10ஆம் தேதி ரிலீஸாகும் என்று அறிவிக்கப்பட்டது. இதனால் இந்தப் பொங்கல் அஜித் பொங்கல் என்று அவரது ரசிகர்கள் மகிழ்ச்சியில் இருந்தார்கள். ஆனால் யாரும் எதிர்பார்க்காத விதமாக படத்தின் ரிலீஸ் தள்ளிப்போனது. நேற்று படத்தின் ட்ரெய்லர் வெளியாகி பட்டையை கிளப்பிய நிலையில் படமானது பிப்ரவரி 6ஆம் தேதி ரிலீஸாகும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. அதேபோல் குட் பேட் அக்லி ஏப்ரல் 10ஆம் தேதி ரிலீஸாகவிருக்கிறது.

கார் ரேஸ்: இதற்கிடையே அஜித்துக்கு கார் ரேஸ் என்றால் எவ்வளவு பிரியம் என்று அனைவரும் அறிந்ததே. அவர் துபாயில் நடந்த கார் ரேஸில் தனது டீமுடன் கலந்துகொண்டார். அந்த ரேஸில் மூன்றாவது இடத்தை அவரது டீம் பிடித்தது. அதனையடுத்து பேட்டி கொடுத்த அஜித்குமார், “அஜித் வாழ்க, விஜய் வாழ்க என்று ரசிகர்கள் சொல்கிறார்கள். நீங்கள் எப்போது வாழப்போகிறீர்கள்” என்று கேள்வி எழுப்பினார். அவரது இந்தக் கருத்து பலரிடமும் பலமான வரவேற்பை பெற்றது.

அந்தணன் பேட்டி: இந்நிலையில் அஜித்தின் இந்தக் கருத்து குறித்து பேசியிருக்கும் பிரபல பத்திரிகையாளரான அந்தணன், “ரசிகர்கள் சண்டை போட வேண்டாம் என்று அஜித் இன்னமும் பத்து வருடங்களுக்கு முன்பு சொல்லியிருக்கலாம். கொஞ்சம் லேட்டாக சொல்லியிருக்கிறார். இதை அவர் கொஞ்சம் முன்னரே சொல்லியிருந்தால் தேவையில்லாத அசிங்கங்கள் அரங்கேறியிருக்காது.

ஏனெனில் அஜித் ரசிகர்களும் விஜய் ரசிகர்களும் சண்டை போடும்போது அருவெருப்பான வார்த்தைகளைத்தான் பிரயோகப்படுத்துவார்கள். இரண்டு பேரின் ரசிகர்களுக்கிடையே படம் குறித்த ஆரோக்கியமான விவாதங்கள் இருக்கலாம்.ஆனால் அசிங்கமாக திட்டிக்கொள்ளாதீர்கள் என்று பத்து வருடங்களுக்கு முன்பே சொல்லியிருக்கலாம்” என்றார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X