அஜித் கிட்டக்கூட சிவகார்த்திகேயனால் வர முடியாது.. குட் பேட் அக்லியுடன் மோதுங்களேன்.. பிரபலம் விளாசல்

சென்னை: சிவகார்த்திகேயன் நடிப்பில் கடைசியாக வெளியான அமரன் திரைப்படம் மெகா ஹிட்டானது. விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் படமானது பெரிய ரெஸ்பான்ஸை பெற்றது. தற்போது அவர் சுதா கொங்கரா இயக்கத்தில் பராசக்தி படத்தில் நடித்துவருகிறார். இதற்கிடையே ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் மதராஸி படத்திலும் நடித்திருக்கிறார். இந்த இரண்டு படங்களும் அவரது கரியரில் மிகப்பெரிய ஹிட் படங்களாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தச் சூழலில் சிவகார்த்திகேயன் குறித்து பிரபல பத்திரிகையாளர் அந்தணன் காட்டமாக பேசியிருக்கிறார்.

கோலிவுட்டின் இப்போதைய டாப் ஹீரோக்களில் ஒருவராக வளர்ந்திருக்கிறார் சிவகார்த்திகேயன். ஆரம்பத்தில் கடுமையான எதிர்ப்புகளையும் ட்ரோல்களையும் சந்தித்த அவர் இப்போது விமர்சித்தவர்களின் வாயை அடைத்திருக்கிறார். பத்து படங்களுக்குள் காணாமல் போய்விடுவார் என்று ஆரூடம் கூறியவர்கள் எல்லாம் இப்போது எங்கு இருக்கிறார்கள் என்றே தெரியவில்லை. அந்த அளவுக்கு அவரது வளர்ச்சி அபரிமிதமாக இருக்கிறது. அவருக்கென்று பெரும் ரசிகர் பட்டாளமே உருவாகியிருக்கிறது.

அடுத்த விஜய்யா சிவா?: அதேபோல் விஜய் நடித்த GOAT படத்தில் எஸ்கே கேமியோ ரோல் செய்திருந்தார். அப்போது விஜய் அவரது கையில் துப்பாக்கியை கொடுத்து பேசும் வசனம் அப்படியே சிவாவுக்கு பொருந்திப்போவதாக அவரது ரசிகர்கள் கூறுகிறார்கள். அதற்கேற்றபடிதான் அவரின் படங்களுடைய ரிசல்ட்டும் இருக்கிறது. கடைசியாக வெளியான அமரன் திரைப்படம்கூட 300 கோடி ரூபாய்வரை உலகம் முழுவதும் வசூல் செய்து சாதனை படைத்தது. இதனால் அவர்தான் இப்போதைக்கு பெரிய கமர்ஷியல் ஹீரோக்களில் ஒருவராக திகழ்கிறார்.

Journalist Anthanan Slams Sivakarthikeyan For Ajithkumar Here are Details

சிவா மட்டும்தான் ஹிட் கொடுத்தார்: முக்கியமாக கடந்த வருடம் சூர்யா, தனுஷ் உள்ளிட்டோர் நடித்த படங்கள் எல்லாம் படுமோசமான தோல்வியை சந்தித்தன. வசூலும் பெரிதாக செய்யவில்லை. ஆனால் சிவாவோ கடந்த வருடத்தில் அமரன் என்ற மெகா ஹிட் படத்தை கொடுத்துவிட்டார். இதனால் அவரது சம்பளமும் படுவேகமாக உயர்ந்திருக்கிறது. இப்போது அவர் தனது சம்பளமாக 50 கோடி ரூபாய்க்கும் மேல் பெறுகிறார் என்று ஒரு தகவல் ஓடிக்கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த படங்கள்: அமரன் படத்தை முடித்திருக்கும் சிவகார்த்திகேயன் இப்போது சுதா கொங்கரா இயக்கத்தில் பராசக்தி படத்தில் நடித்துவருகிறார். அதில் அவருடன் ரவி மோகன், அதர்வா, ஸ்ரீலீலா உள்ளிட்டோரும் நடிக்கிறார்கள். இந்தப் படம் தவிர்த்து ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் மதராஸி படத்தில் நடித்து முடித்திருக்கிறார். மேலும் வெங்கட் பிரபு இயக்கத்திலும் சிபி சக்கரவர்த்தி இயக்கத்திலும் ஒரு படத்தில் அவர் நடிக்க வாய்ப்புகள் அதிகம் இருப்பதாகவும் ஒரு தகவல் ஓடிக்கொண்டிருக்கிறது.

எஸ்கேவின் ரசிகர்கள் கருத்து: இதற்கிடையே விஜய் சினிமாவிலிருந்து ஒதுங்கவிருக்கிறார். அஜித்தும் கார் ரேஸில் கவனம் செலுத்தும் நேரத்தில் சினிமாவில் நடிக்கமாட்டேன் என்று தெரிவித்துவிட்டார். இதனால் விஜய் மற்றும் அஜித் ஆகியோரின் இடத்தை சிவா பிடித்துவிடுவார் என்று எஸ்கேவின் ரசிகர்களில் ஒருதரப்பினர் கூறுகிறார்கள். இது ஒருபக்கம் இருக்க அவரது ரசிகர்களில் இன்னொரு தரப்பினரோ, அஜித்துக்கு போட்டியாக சிவகார்த்திகேயன்தான் இனி விஜய் இடத்தில் இருப்பார் என்றும் சொல்ல ஆரம்பித்திருக்கிறார்கள்.

அந்தணன் விளாசல்: இந்நிலையில் இதுகுறித்து பிரபல பத்திரிகையாளர் அந்தணன் தனியார் யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், "அஜித் கிட்டக்கூட சிவகார்த்திகேயனால் வர முடியாது. அஜித்துக்கு இருக்கும் கூட்டத்தை யாராலும் குறைக்க முடியாது. முக்கியமாக அஜித்துக்கு போட்டி விஜய்தான். சிவாவெல்லாம் கிடையாது. அதேபோல் விடாமுயற்சி படம் தோல்வியடைந்தது உண்மைதான். ஆனால் குட் பேட் அக்லி ஹிட்டடித்தால் நிலைமையே வேறு. முடிந்தால் குட் பேட் அக்லி படத்தோடு போட்டிப்போட சொல்லுங்கள் பார்ப்போம்" என்றார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X