அஜித்துக்கு இன்னொரு ஆபரேஷனா?.. பத்திரிகையாளர் சொன்ன விஷயம்.. ரசிகர்கள் அதிர்ச்சி

சென்னை: அஜித் இப்போது விடாமுயற்சி படத்தில் நடித்துவருகிறார். படத்தின் ஷூட்டிங் மீண்டும் தொடங்குமா தொடங்காதா என்ற கேள்வி ரசிகர்களிடம் எழுந்திருந்த சூழலில் சத்தமே இல்லாமல் ஷூட்டிங் தொடங்கி அஜர்பைஜான் ஷெட்யூலும் முடிந்துவிட்டது. மேலும் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் குட் பேட் அக்லி படத்திலும் நடிக்க கமிட்டாகியிருக்கிறார் அவர். இந்தச் சூழலில் அவர் குறித்து பத்திரிகையாளர் அந்தணன் சொல்லியிருக்கும் விஷயம் அதிர்ச்சி தருவதாக இருக்கிறது.

கோலிவுட்டின் டாப் ஹீரோக்களில் ஒருவரான அஜித் கையில் இப்போது விடாமுயற்சி, குட் பேட் அக்லி ஆகிய இரண்டு படங்கள் இருக்கின்றன. விடாமுயற்சி படத்திலிருந்து எந்த அப்டேட்டும் வெளியாகாமல் இருக்கிறது. அஜர்பைஜானில் முதல் ஷெட்யூல் ஷூட்டிங் முடித்த கையோடு சென்னை திரும்பிய அஜித் முழு உடல் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு சென்றபோது அங்கு அவருக்கு சிறிய அளவிலான அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. காதிலிருந்து மூளைக்கு செல்லும் நரம்பில் சிறு கட்டி இருந்ததால் அந்த ஆபரேஷன் நடந்தது.

Ajith Anthanan Vidaamuyarchi

பைக் டூர்: அறுவை சிகிச்சைக்கு பிறகு உடல்நலம் தேறிய அஜித்குமார் தனது மகனின் பள்ளிக்கூடத்தில் நடந்த விழா, தனது மகனுடன் ஃபுட்பால் விளையாடியது என இருந்தார். இதனையடுத்து வழக்கமாக அவர் செய்யும் பைக் டூரையும் மீண்டும் தொடங்கினார். அதுதொடர்பான வீடியோக்களும், புகைப்படங்களும் வெளியாகி சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகின.

மீண்டும் ஷூட்டிங்: சூழல் இப்படி இருக்க விடாமுயற்சி படத்தின் ஷூட்டிங் மீண்டும் அஜர்பைஜானில் தொடங்கியது. சில நாட்களுக்கு முன்புதான் அந்த ஷெட்யூல் முடிந்தது. அதனை சுரேஷ் சந்திராவும் உறுதிப்படுத்தியிருந்தார். மேலும் சென்னை திரும்பியிருக்கும் படக்குழு இன்னும் சில காட்சிகளை சென்னையில் வைத்தோ அல்லது வேறு மாநிலத்தில் வைத்தோ படமாக்க திட்டமிட்டிருப்பதாக சொல்லப்படுகிறது.

செம லுக்கில் அஜித்: அதேபோல் விடாமுயற்சி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் கடுமையான ட்ரோலை சந்தித்தது. அதற்கெல்லாம் பதிலடி தரும் விதமாக அமைந்திருந்தது படத்திலிருந்து வெளியான அடுத்த போஸ்டர். அதில் அஜித் படு ஸ்மார்ட்டாக தலைமுடிக்கு டை அடித்துக்கொண்டு திரிஷாவின் பின்னால் நின்றுகொண்டிருந்தார். அதனைப் பார்த்த ரசிகர்கள் அட இந்த லுக்கிற்காகவே இன்னும் எத்தனை காலம் வேண்டுமானாலும் விடாமுயற்சிக்கு காத்திருக்கலாம் என்று கமெண்ட்ஸ் செய்தனர். அதேபோல் அர்ஜுனின் லுக்கும் வெளியானது.

குட் பேட் அக்லி: இதற்கிடையே ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகும் குட் பேட் அக்லி படத்தின் போஸ்டர்களும் வெளியாகி சக்கைப்போடு போட்டன. இந்தப் படமானது அடுத்த வருட பொங்கலுக்கு ரிலீஸாகிறது. இந்தப் படத்தில் ஒரு குத்து பாட்டுக்கு அஜித் அருமையாக நடனம் ஆடியிருக்கிறார் என்று சமீபத்தில்கூட இசையமைப்பாளர் தேவிஸ்ரீ பிரசாந்த் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

அந்தணன் பேட்டி: இந்நிலையில் பத்திரிகையாளர் அந்தணன் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில், "அஜித் ஏற்கனவே ஒரு அறுவை சிகிச்சை செய்திருந்தார். அதிலிருந்து அவர் முழுமையாக குணமடைய வேண்டும் என்றால் இன்னொரு அறுவை சிகிச்சையையும் அவர் செய்துகொள்ள வேண்டும். எனவே குட் பேட் அக்லி படத்தின் ஷூட்டிங்கை முடித்துவிட்டு அந்த ஆபரேஷனை செய்யவிருக்கிறார். அதற்கு பிறகு ஒரு வருடம் ஓய்வில் இருப்பார்" என்றார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X