ரஜினிகாந்த்தின் விரக்தி.. ஐஸ்வர்யாவுடன் சேர தனுஷுக்கு ஆசை வந்திருக்கிறது.. பிரபலம் சொன்ன குட் நியூஸ்
சென்னை: நடிகர் தனுஷ் கோலிவுட்டின் டாப் 10 நடிகர்களில் ஒருவராக இருக்கிறார். அவரது நடிப்பில் கடைசியாக வெளியான ராயன் படம் விமர்சன ரீதியாக அப்படி இப்படி பேசப்பட்டாலும் வசூல் ரீதியாக நல்ல ரெஸ்பான்ஸையே பெற்றது. இப்போது சேகர் கம்முல்லா இயக்கத்தில் குபேரா படத்தில் நடித்துவரும் தனுஷ் ஹிந்தியிலும் கமிட்டாகியிருக்கிறார். மேலும் இட்லி கடை என்ற படத்தையும் இயக்கி நடிக்கவிருக்கிறார். இதற்கிடையே ரஜினியின் மூத்த மகள் ஐஸ்வர்யாவை திருமணம் செய்துகொண்ட அவர் இப்போது பிரிந்திருக்கிறார்.
தனுஷ் இப்போது கோலிவுட்டின் சிறந்த நடிகராக திகழ்ந்துவருகிறார். தமிழ் மட்டுமின்றி ஹிந்தி, ஹாலிவுட் ஆகியவைகளிலும் நடித்துவருகிறார். துள்ளுவதோ இளமை படத்தில் யாரெல்லாம் அவரை உருவ கேலி செய்தார்களோ அவர்கள் எல்லாம் இப்போது மூக்கின் மீது விரலை வைத்து பார்த்துவருகிறார்கள் தனுஷை. அந்த அளவுக்கு தனது திறமையை வளர்த்துக்கொண்டு தனக்கென்று தனி ரசிகர் பட்டாளத்தை உருவாக்கிவைத்திருக்கிறார். நடிப்பு, இயக்கம், பாடல் எழுதுவது, பாடல் பாடுவது என கலக்குகிறார் தனுஷ்.

ராயன்: தனுஷின் நடிப்பில் கடைசியாக ராயன் படம் வெளியானது. அந்தப் படத்தை அவரே இயக்கி நடித்திருந்தார். தங்கை செண்ட்டிமெண்ட் என்ற பழைய அஸ்திவாரத்தை வைத்து ராயனை கட்டியிருந்தார் தனுஷ். படம் விமர்சன ரீதியாக பெரிதாக கொண்டாடப்படவில்லை. அதேசமயம் வசூல் ரீதியாக நல்ல ரெஸ்பான்ஸை பெற்றுவிட்டதாக சொல்லப்படுகிறது.
வடசென்னை வாடை: குறிப்பாக படத்தின் ஸ்க்ரீன்ப்ளே ரொம்பவே சொதப்பிவிட்டதாக ரசிகர்கள் கூறுகிறார்கள். அதாவது படத்தின் பல இடங்களில் வடசென்னை படத்தின் வாடை ரொம்பவே அடித்ததாக குற்றஞ்சாட்டினர். அதேபோல் படத்தின் க்ளைமேக்ஸோ அப்படியே ஆடுகளம் படத்தின் க்ளைமேக்ஸை நினைவுப்படுத்தியதாகவும் கூறினார்கள். அதேசமயம் தனுஷ் ஒரு நடிகராக இதில் கலக்கிவிட்டார் என்று அவரது ரசிகர்கள் நிம்மதியடைந்திருக்கின்றனர். இதனையடுத்து அவரது நடிப்பில் குபேரா, இளையராஜா பயோபிக், இயக்கத்தில் நிலவுக்கு என் மேல் என்னடி கோபம், இட்லி கடை உள்ளிட்ட படங்கள் வருகின்றன.
பிரிந்த தனுஷ்: இதற்கிடையே ரஜினிகாந்த்தின் மூத்த மகள் ஐஸ்வர்யாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார் தனுஷ். அவர்களுக்கு இரண்டு மகன்கள் இருக்கிறார்கள். பல வருடங்கள் ஒன்றாக வாழ்ந்த அவர்கள் சில வருடங்களுக்கு பிரிந்தனர். அதற்கு காரணமாக பல யூகங்கள் சொல்லப்படுகின்றன. மேலும் இருவரையும் இணைத்து வைக்க இருவீட்டார் முயன்றுவருவதாக ஒருதரப்பினரும்; சட்டப்பூர்வமாக விவாகரத்துக்கு அப்ளை செய்திருக்கிறார்கள் என்று ஒருதரப்பினரும் கூறிவருகிறார்கள்.
தனுஷில் மாற்றம்: சூழல் இப்படி இருக்க சமீபகாலமாக தனுஷின் போக்கில் மாற்றம் தெரிவதாக கருதப்படுகிறது. ஒருமுறை ஐஸ்வர்யா தனது மகன்களுடன் இருக்கும் புகைப்படத்தை இன்ஸ்டாவில் பகிர்ந்திருந்தார். அதற்கு தனுஷ் லைக் செய்திருந்தார். ஆனால் மகன்களுக்காக அந்த லைக்கை அவர் போட்டிருப்பார் என்று பலர் கூறினார்கள். அடுத்ததாக தான் மட்டும் இருக்கும் புகைப்படத்தை ஐஸ்வர்யா பகிர்ந்தபோதும் தனுஷ் லைக்கிட்டிருந்தார். எனவே அவரது போக்கில் மாற்றம் ஏற்பட்டிருப்பதாக பேச ஆரம்பித்தார்கள்.
அந்தணன் பேட்டி: இந்நிலையில் பிரபல பத்திரிகையாளர் அந்தணன் தனுஷ் - ஐஸ்வர்யா விவகாரம் குறித்து தனியார் யூட்யூப் சேனல் ஒன்றில் பேசுகையில், "இந்த விஷயத்தில் ரஜினிகாந்த் கடைசியாக தனுஷ் தரப்பிடம் பேசியபோது அவர்கள் சொன்ன பதிலால் ரஜினி உச்சக்கட்ட விரக்தியில்தான் ஃபோனை வைத்ததாக நான் விசாரித்தவர்கள் சொன்னார்கள். தனுஷும், ஐஸ்வர்யாவும் இணைய வேண்டும் என்பதுதான் ரஜினியின் ஆசையாக இருக்கிறது. ஐஸ்வர்யா புகைப்படங்களுக்கு தனுஷ் லைக்கிடுவதே ஒரு மாற்றம்தானே. அவருடன் இணைய வேண்டும் என்ற ஆசை வந்திருக்கலாம். முதலில் தனுஷ் இறங்கி வந்திருக்கிறார். அடுத்து ஐஸ்வர்யா இறங்கி வர வேண்டும்" என்று குறிப்பிட்டிருக்கிறார்.


Click it and Unblock the Notifications











