160 நாட்கள் ஷூட்டிங் போகவில்லை.. சிம்பு பற்றி பிரபலம் இப்படி சொல்லிட்டாரே?

சென்னை: நடிகர் சிம்பு தற்போது கமல் ஹாசன் தயாரிப்பில் தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் தனது 48ஆவது படத்தில் நடித்துவருகிறார். படத்தின் ஃபர்ஸ்ட் லுக் சமீபத்தில் வெளியானது. இரட்டை வேடங்களில் நடிக்கும் சிலம்பரசன் கண்டிப்பாக இந்தப் படத்தின் மூலம் மெகா ப்ளாக்பஸ்டரை கொடுப்பார் என்று அவரது ரசிகர்கள் எதிர்பார்த்திருக்கின்றனர். இந்தச் சூழலில் சிம்பு குறித்து பத்திரிகையாளர் அந்தணன் பல விஷயங்களை ஓபனாக பேசியிருப்பது ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்திருக்கிறது.

எஸ்டிஆர், அட்மேன் என ரசிகர்களால் அழைக்கப்படும் சிம்பு சில காரணங்களால் சினிமாவிலிருந்து ஒதுங்கியிருந்தார். பிறகு உடல் எடையை குறைத்து எண்ணங்களை ஒருநிலைப்படுத்தி ஈஸ்வரன் படத்தின் மூலம் ரீ என்ட்ரி கொடுத்தார். ஆனால் படம் சரியாக போகவில்லை. அடுத்ததாக வெங்கட் பிரபு இயக்கத்தில் மாநாடு படத்தில் நடித்தார். அந்தப் படம் மெகா ப்ளாக்பஸ்டர் ஆனது. சிம்புவின் நடிப்பும், வெங்கட் பிரபுவின் மேக்கிங்கும் ரசிகர்களுக்கு ரொம்பவே பிடித்துப்போக படமானது நூறு கோடி ரூபாய் வசூலித்து கெத்து காட்டியது.

simbu anthanan thug life

அடுத்தடுத்த ஹிட்: மாநாடு வெற்றிக்கு பிறகு சிம்பு வெந்து தணிந்தது காடு, பத்து தல ஆகிய படங்களில் நடித்தார். இவற்றில் வெந்து தணிந்தது காடு படம் சூப்பர் ஹிட்டானது. அதில் சிம்புவின் நடிப்பு பெரியளவு பேசப்பட்டது. அடுத்து நடித்த பத்து தல திரைப்படம் சரியாக போகவில்லை. சூழல் இப்படி இருக்க கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தின் இயக்குநர் தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் தனது 48ஆவது படத்தில் நடிக்க கமிட்டாகியிருக்கிறார் சிலம்பரசன்.

எஸ்டிஆர் 48: இந்தப் படத்தை கமல் ஹாசனின் ராஜ்கமல் நிறுவனம் தயாரிக்கிறது. தேசிங்கு பெரியசாமி இயக்கம் என்பதால் கண்டிப்பாக இந்தப் படம் ஹிட்டாகும் என்ற நம்பிக்கை எஸ்டிஆர் ரசிகர்களிடம் இருக்கிறது. இப்படத்துக்காக சிம்பு செம ஃபிட்னெஸ்ஸோடு இருக்கிறார். அதுமட்டுமின்றி மார்ஷியல் ஆர்ட்ஸ் உள்ளிட்ட கலைகளையும் அவர் கற்றுக்கொண்டதாக தெரிகிறது. இதற்காக அவர் தாய்லாந்து, லண்டன் உள்ளிட்ட நாடுகளுக்கு சென்றிருந்தது குறிப்பிடத்தக்கது. மேலும் தக் லைஃப் படத்திலும் நடித்துவருகிறார்.

அந்தணன் பேட்டி: இதற்கிடையே சிம்பு ஷூட்டிங்கிற்கு நேரத்திற்கு வரமாட்டார் என்ற குற்றச்சாட்டு காலங்காலமாக இருந்தது. அதுகுறித்து பேசியிருக்கும் பத்திரிகையாளர் அந்தணன், "கோலிவுட்டில் பெரும்பாலான இயக்குநர்கள் காலை 7 மணிக்கே முதல் ஷாட்டை எடுத்துவிடுவார்கள். ஆனால் சிம்புவுக்கு அப்படி போவது செட் ஆகாது. இதனால் ஷூட்டிங் நடக்கும் நாட்கள் திட்டமிட்டிருந்ததைவிடவும் அதிகரித்துக்கொண்டே செல்லும்,

அதிக செலவு: இதனால் தயாரிப்பாளருக்கு அதிக செலவாகும். ஆனால் சிம்பு கண்டுகொள்ளமாட்டார். பெரிய இயக்குநர்கள் என்றால் வாலை சுருட்டிக்கொண்டு போவார். சின்ன இயக்குநர்கள் என்றால் கதறவிட்டுவிடுவார். அதனால்தான் திறமை இருந்தும் அவர் தொட வேண்டிய உச்சத்தை தொடாமல் இருக்கிறார். மாநாடு படத்துக்குக்கூட அட்வான்ஸ் வாங்கி 7 மாதங்கள் கழித்துதான் ஷூட்டிங்கிற்கு சென்றார்.

160 நாட்கள் போகவில்லை: சிம்பு நடித்த வல்லவன் படத்தை தயாரித்தவர் தேனப்பன். அந்தப் படத்தை இயக்கியதும் சிம்புதான். இதன் ஷூட்டிங் நடக்கும்போது கிட்டத்தட்ட 160 நாட்கள்வரை ஷூட்டிங்கிற்கு சிம்பு செல்லவில்லை. எல்லோரும் படப்பிடிப்புக்கு வந்தாலும் சிம்பு வரமாட்டார்" என்றார். ஆனால் இப்போது இரண்டாவது இன்னிங்ஸை ஆரம்பித்திருக்கும் சிம்பு நேரம் தவறாமையை கடைப்பிடிக்கிறார் என்று திரைத்துறையினர் கூறுவது கவனிக்கத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X