Dhanush - ஜிவி பிரகாஷுக்கு அப்படியொரு துரோகத்தை செய்தாரா தனுஷ்?.. பத்திரிகையாளர் பிஸ்மி கொடுத்த ஷாக்
சென்னை: தனுஷ் தமிழ் சினிமாவின் சிறந்த நடிகர்களில் ஒருவராக இருக்கிறார். அவர் தற்போது கேப்டன் மில்லர் படத்தில் நடித்திருக்கிறார். இந்த சூழலில் ஜிவி பிரகாஷுக்கு தனுஷ் துரோகம் செய்துவிட்டதாக பிஸ்மி பேசியிருக்கும் விஷயம் ஷாக்கை ஏற்படுத்தியுள்ளது. அதே சமயம் கேப்டன் மில்லர் படத்துக்கு ஜிவி பிரகாஷ்தான் இசையமைத்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
தனுஷ் நடிப்பில் கேப்டன் மில்லர் திரைப்படம் ஜனவரி 12ஆம் தேதி வெளியாகவிருக்கிறது. அருண் மாதேஸ்வரன் படத்தை இயக்கியிருக்கிறார். தனுஷுடன் சிவராஜ்குமார், பிரியங்கா மோகன் உள்ளிட்டோர் நடித்திருக்கின்றனர். சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் படத்தை தயாரிக்க ஜிவி பிரகாஷ் இசையமைத்திருக்கிறார். ஏற்கனவே தனுஷுடன் ஜிவி பிரகாஷ் பணியாற்றிய பொல்லாதவன், ஆடுகளம், அசுரன் உள்ளிட்ட படங்களின் பாடல்கள் எல்லாம் மெகா ஹிட்டாகின என்பது குறிப்பிடத்தக்கது.

இதற்கும் எதிர்பார்ப்பு: தற்போது நீண்ட வருடங்களுக்கு பிறகு தனுஷுடன் கேப்டன் மில்லர் படத்தில் ஜிவி பிரகாஷ் இணைந்திருப்பதால் இந்தப் படத்தின் பின்னணி இசைக்கு பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. பாடல்களுக்கு ஓரளவு டீசண்ட்டான வரவேற்பு கிடைத்துள்ளது. மேலும் அருண் மாதேஸ்வரனும் நல்ல இயக்குநர் என்பதால் கண்டிப்பாக ஜிவி பிரகாஷிடமிருந்து நல்ல இசையை வாங்கியிருப்பார் என்று ரசிகர்கள் நம்பிக்கையில் இருக்கின்றனர்.
பிஸ்மி பேட்டி: இந்நிலையில் தனுஷ் ஜிவி பிரகாஷுக்கு துரோகம் செய்துவிட்டார் என்று பத்திரிகையாளர் பிஸ்மி பேசியிருக்கும் விஷயம் உச்சக்கட்ட அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. தனியார் யூட்யூப் சேனல் ஒன்றுக்கு அவர் அளித்த பேட்டி ஒன்றில், "தனுஷும், ஜிவி பிரகாஷும் ஒருகாலத்தில் நெருங்கிய நண்பர்களாக இருந்தார்கள் என்பது உண்மைதான். ஆனால் அந்த நட்பு இப்போது அவர்களிடம் இல்லை.
காலி செய்த தனுஷ்: பல தயாரிப்பாளர்கள் ஜிவி பிரகாஷுக்கு அட்வான்ஸ் கொடுத்து புக் செய்யும் நினைப்பில் இருந்தார்கள். ஆனால் தனுஷோ நடுவில் புகுந்து அதை காலி செய்தார். ஜிவி பிரகாஷுக்கு பதில் அனிருத்தை அந்தப் படங்களில் போட செய்தார். இதை தெரிந்துகொண்ட ஜிவி பிரகாஷ் உச்சக்கட்ட கடுப்பில் சமூக வலைதளங்களிலேயே ஓபனாக குற்றச்சாட்டு வைத்த நிகழ்வெல்லாம் நடந்தது.
சிறந்த நடிகர்: சூழல் இப்படி இருக்க ஒரு பத்திரிகை ஒன்று விஜய்யை சிறந்த நடிகராக தேர்ந்தெடுத்தது. அதனையொட்டி அவரிடம் ஒரு பேட்டி எடுத்து முழு பக்கத்தில் போட திட்டமிட்டிருந்தது. எனவே விஜயை தொடர்புகொள்வதற்கு ஜிவி பிரகாஷிடம் தூது போனது அந்த பத்திரிகை குழு. ஆனால் ஜிவி பிரகாஷோ ஒரு வாரம் இழுத்தடித்துவிட்டு நீங்களே பார்த்துக்கொள்ளுங்கள் என சொல்லிவிட்டார். அதனைத் தொடர்ந்து அந்தப் பத்திரிகையில் பேட்டி ஒன்று வருகிறது.
தனுஷ்: அதில் சிறந்த நடிகர் தனுஷ் என்று சொல்லி பேட்டி இருந்தது. இதை பார்த்து காண்டான ஜிவி பிரகாஷ் விஜய்னுதானே என்னிடம் சொன்னீர்கள். இப்போ என்ன தனுஷ் இருக்கிறார் என்று நேரடியாகவே பேசிவிட்டார். அந்த அளவுக்கு இருவருக்கும் மனஸ்தாபம் இருந்தது. இந்த சமயத்தில் அனிருத்துக்கும், தனுஷுக்குமே கருத்துவேறுபாடு வந்துவிட்டது. இதனையடுத்து அந்தக் கூட்டணி பிரிந்த பிறகுதான் தனுஷ் ஜிவி பிரகாஷ் பக்கம் வந்திருக்கிறார். இரண்டு பேரின் சண்டையை வெற்றிமாறன் தீர்த்து வைத்தார். அதனால் மீண்டும் இரண்டு பேரும் பழகி வருகிறார்கள்" என்றார்.


Click it and Unblock the Notifications











