தனுஷுக்கு ரெட் கார்டு?.. பல விஷயங்களை ஓபனாக சொன்ன பத்திரிகையாளர்
சென்னை: தனுஷ் கடைசியாக நடித்த கேப்டன் மில்லர் திரைப்படம் சுமாரான வரவேற்பை பெற்றது. இதனையடுத்து அவர் தனது 50ஆவது படமான ராயன் படத்தை இயக்கியும், நடித்தும் முடித்தார். படம் சுமாரான வரவேற்பை பெற்றது. அந்தப் படத்தை முடித்த கையோடு சேகர் கம்முல்லா இயக்கத்தில் நடிக்க கமிட்டானார். படத்துக்கு குபேரா என்று பெயர் வைக்கப்பட்டிருக்கிறது.
இந்திய அளவில் திறமை வாய்ந்த நடிகர்களில் ஒருவர் தனுஷ். எந்தக் கதாபாத்திரம் கொடுத்தாலும் அசால்ட்டாக சம்பவம் செய்யும் அவர் கடைசியாக கேப்டன் மில்லர் படத்தில் நடித்திருந்தார். அந்தப் படம் சரியாக போகாவிட்டாலும் வழக்கம்போல் தனுஷ் தனது கேரக்டரை மிகச்சிறப்பாக செய்தார். ஆனால் தனுஷ் ரசிகர்களுக்கு சோகம் என்னவென்றால்; போட்டியாக களமிறங்கிய அயலான் திரைப்படத்திடம் கேப்டன் மில்லர் தோற்றதுதான். இருந்தாலும் மில்லரில் விட்டதை அடுத்த படத்தில் அவர் பிடிப்பார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்திருக்கின்றனர்.

இயக்குநர் தனுஷ்: அதேபோல் தனுஷ் முதலில் இயக்கிய பவர்பாண்டி திரைப்படம் சூப்பர் டூப்பர் ஹிட்டடித்தது. எனவே ராயன் படத்திலும் இயக்குநராக தனுஷ் தனது முத்திரையை பதிப்பார் அவரது ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்திருந்தார்கள். தன் குடும்பத்தை அழித்தவர்களை டானாக மாறி தனுஷ் பழி வாங்குவதுதான் படத்தின் ஒன் லைன் ஆகும். சமீபத்தில் வெளியான ராயன் கலவையான விமர்சனங்களையே பெற்றது.
நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்: இதற்கிடையே நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் என்ற படத்தையும் இயக்கி முடித்திருக்கிறார். அதில் அனிகா, தனுஷின் உறவுக்கார பையன் உள்ளிட்டோர் நடித்திருக்கிறார்கள். ஜிவி பிரகாஷ் இசையமைத்திருக்கிறார். இந்தப் படமும் தனுஷின் முத்திரையை பதிக்கும் என்று அவரது ரசிகர்கள் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கிறார்கள். சூழல் இப்படி இருக்க தனுஷுக்கு ரெட் கார்டு கொடுக்கப்பட்டதாக கூறப்பட்டது. அது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
பிஸ்மி பேட்டி: இந்நிலையில் அந்த விவகாரம் குறித்து பேசியிருக்கும் பத்திரிகையாளர் பிஸ்மி, 'தனுஷ் விவகாரத்தில் அவர் என்னமோ பல தயாரிப்பாளர்களிடம் பணத்தை வங்கிக்கொண்டு ஏமாற்றியது மாதிரியான தோற்றத்தை ஏற்படுத்துகிறார்கள். அது பொய். அவர் இரண்டு தயாரிப்பாளர்களிடம் அட்வான்ஸ் வாங்கியிருக்கிறார். ஒருவர் கதிரேசன், இன்னொருவர் ராம நாராயணனின் மகன் முரளி. இதில் கதிரேசனிடம் அட்வான்ஸ் வாங்கினார். ஆனால் தனுஷ் தேதி கொடுக்காமல் இருப்பது உண்மைதான்.
நடந்ததே வேறு: அதேசமயம் முரளியிடம் அட்வான்ஸ் வாங்கிய விஷயத்தில் நடந்ததே வேறு. படத்தை இவருதான் ஃபர்ஸ்ட் காப்பியில் செய்தார். அவரிடம் இருந்து ஐந்து கோடி ரூபாய் வந்த பிறகு படத்தை ஸ்டார்ட் செய்தார். நாகார்ஜுனா அதில் நடித்தார். ஷூட்டிங் 70 சதவீதம் முடிந்தது. ஆனால் அடுத்த பேமெண்ட் வரவே இல்லை. சம்பளமும் வரவில்லை. எனவேதான் அந்தப் படத்தை அவர் ஸ்டாப் செய்தார். இதுதான் நடந்தது. இவை அனைத்தையும் மறைத்துவிட்டு தனுஷ் ஏமாற்றிவிட்டதுபோல் நடந்துகொள்வது தவறான விஷயம்" என்றார்.


Click it and Unblock the Notifications











