குட் பேட் அக்லிக்கு அஞ்சாத இட்லி கடை.. தனுஷுக்கு இருக்கும் துணிச்சல்.. பிஸ்மி சொன்ன சூப்பர் மேட்டர்!
சென்னை: பொதுவாக பெரிய நடிகர்களின் படங்கள் வருகிறது என்றாலே மற்ற போட்டி நடிகர்களின் படங்கள் தொடங்கி சிறு பட்ஜெட் படங்கள் என பல படங்கள் பின் வாங்கிவிடும். வேட்டையன் படத்தின் ரிலீஸ் தேதி காரணமாக கடந்த ஆண்டு சூர்யாவின் கங்குவா படமே பின் வாங்கியது. இந்த ஆண்டு அஜித்தின் விடாமுயற்சி படம் வெளியாகாத நிலையில், ஏகப்பட்ட படங்கள் ஜனவரி மாதமே வெளியானதையும் பார்த்திருப்போம்.
இந்நிலையில், அஜித்தின் குட் பேட் அக்லி படத்துக்குப் போட்டியாக தனுஷின் இட்லி கடை படம் ஒரே நாளில் மோதுவதாக அறிவிக்கப்பட்டு இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், தனுஷுக்கு அஜித்தை பார்த்து எந்தவொரு பயமும் இல்லை என பிஸ்மி பேசியுள்ளதை தனுஷ் ரசிகர்கள் சோஷியல் மீடியாவில் அதிகம் ஷேர் செய்து வருகின்றனர்.

அதற்கு ஒரு முக்கிய காரணமும் இருப்பதாகவும் தனது பேட்டியில் பிஸ்மி தெளிவான சில விஷயங்களையும் எடுத்து வைத்திருக்கிறார்.
அஜித்துடன் மோதும் தனுஷ்: விடாமுயற்சி படத்தை விட இந்த ஆண்டு அஜித் ரசிகர்கள் ரொம்பவே நம்பியிருக்கும் படமாக இருக்கும் குட் பேட் அக்லி படத்தை கண்டு தனுஷ் கொஞ்சம் கூட பயப்படாமல் தனது இட்லி கடை படத்தை அதே ஏப்ரல் 10ம் தேதி ரிலீஸ் செய்யப்போவதாக அறிவித்துள்ளது கோலிவுட்டையே வியப்பில் ஆழ்த்தியுள்ளது. இந்நிலையில், அஜித்தை பார்த்து எல்லாம் தனுஷ் ஒரு போதும் பயப்படமாட்டார் என்றும் அதற்கு ஒரு காரணம் உண்டு என பிஸ்மி பேசியுள்ள வீடியோ தீயாக பரவி வருகிறது.
இட்லி கடை வெல்லும்: அஜித்தின் குட் பேட் அக்லி படம் கமர்ஷியலாக எப்படி வந்தாலும், இந்த 2025ல் இட்லி கடை என்கிற டைட்டிலில் தனுஷ் ஒரு படம் பண்ணுகிறார் என்றால் அந்த கன்டென்ட் மீது அவர் வைத்திருக்கும் மிகப்பெரிய நம்பிக்கை தான் காரணம் என பிஸ்மி வெளிப்படையாக கூறியுள்ளார். குட் பேட் அக்லி படத்துடன் தனுஷின் இட்லி கடை மோதினால் வசூல் பாதிக்கும் என அஜித் ரசிகர்கள் சொல்லி வரும் நிலையில், தில்லாக தனுஷ் தனது படத்தை இயக்குகிறார் என்றால் நிச்சயம் அந்த படம் மிகப்பெரிய படமாக இருக்கும் என்கிறார் பிஸ்மி.
அக்கா மகனுக்காக பின் வாங்கிய தனுஷ்: ஆனால், அதே தனுஷ் தனது இயக்கத்தில் தனது அக்கா மகன் பவிஷை அறிமுகப்படுத்தவுள்ள நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் படத்தின் ரிலீஸை பிப்ரவரி 14ம் தேதிக்கு பதிலாக பிப்ரவரி 21ம் தேதிக்கு தள்ளி வைத்திருக்கிறார். பிரதீப் ரங்கநாதனின் டிராகன் படத்துடன் நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் வெளியாகவுள்ள நிலையில், தனுஷ் இயக்கிய படம் வெற்றி பெறுமா? என்கிற கேள்விகளும் எழுந்துள்ளன.
விடாமுயற்சி வெற்றிக்குப் பின் மாறலாம்: வரும் பிப்ரவரி 6ம் தேதி வெளியாகும் அஜித்தின் விடாமுயற்சி திரைப்படம் பாக்ஸ் ஆபீஸில் மிகப்பெரிய வசூல் வேட்டை நடத்தினால், அதன் பின்னர் தனுஷ் தனது இட்லி கடை படத்தின் ரிலீஸ் தேதியை மாற்றும் நிலையும் உருவாகலாம் என அஜித் ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர். அப்படி இல்லை என்றால் அந்த படத்தின் வசூலும் நிச்சயம் பாதிக்கப்படுவது உறுதி என்றும் கூறி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











