சிவகார்த்திகேயன் சரியான சந்தர்ப்பவாதி.. விஜய்யின் ஜன நாயகன் அவ்வளவுதானா?.. ஓபனாக பேசிய பிஸ்மி

சென்னை: சிவகார்த்திகேயன் இப்போது சுதா கொங்கரா இயக்கத்தில் பராசக்தி படத்தில் நடித்துவருகிறார். இதற்கு முன்னர் அவர் நடித்த அமரன் திரைப்படம் மெகா ப்ளாக் பஸ்டர் ஆகியிருப்பதால் இந்தப் படத்தின் மீது உச்சக்கட்ட எதிர்பார்ப்பு எழுந்திருக்கிறது. இதற்கிடையே ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் மதராஸி படத்திலும் நடித்து முடித்திருக்கிறார் அவர். சூழல் இப்படி இருக்க சிவகார்த்திகேயன் பற்றி பிரபல பத்திரிகையாளரான பிஸ்மி காட்டமான கருத்தினை முன்வைத்திருக்கிறார்.

சிவகார்த்திகேயனின் மார்க்கெட் அமரன் படத்தின் வெற்றிக்கு பிறகு எங்கேயோ சென்றுவிட்டது. அந்தப் படம் உலகம் முழுவதும் 350 கோடி ரூபாய்வரை வசூல் செய்து பட்டையை கிளப்பியது. இதன் காரணமாக அவரது மவுசும், மாஸும், சம்பளமும் அதிகரித்திருப்பதாக திரைத்துறையில் இருப்பவர்கள் கூற ஆரம்பித்திருக்கிறார்கள். கண்டிப்பாக தமிழ் சினிமாவின் அடுத்த சக்சஸ்ஃபுல் கமர்ஷியல் ஹீரோ சிவாவாகத்தான் இருப்பார் என்று அவரது ரசிகர்கள் இப்போது உறுதியோடு சொல்ல தொடங்கியிருக்கிறார்கள்.

விஜய் கொடுத்த துப்பாக்கி: சூழல் இப்படி இருக்க விஜய் நடித்த கோட் படத்தில் சிவகார்த்திகேயன் கெஸ்ட் ரோலில் நடித்திருந்தார். அந்தப் படத்தில் சிவாவிடம் கையில் துப்பாக்கியை கொடுத்து விஜய் பேசும் வசனம் அவ்வளவு அப்ளாஸை அள்ளின. முக்கியமாக விஜய்யும் சினிமாவிலிருந்து ஒதுங்கவிருப்பதால் தன்னுடைய இடத்துக்கு அடுத்ததாக சிவகார்த்திகேயன்தான் வருவார் என்று பூடகமாக அந்த வசனத்தின் மூலம் சொல்லிவிட்டதாக அப்போது பலரும் பேசினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

விஜய்யின் கடைசி படம்: இந்நிலையில் விஜய் தற்போது ஜன நாயகன் படத்தில் நடித்துவருகிறார். சிவகார்த்திகேயன் இப்போது பராசக்தி படத்தில் நடித்துவருகிறார். விஜய்க்கு இது கடைசி படம் என்பதால் கண்டிப்பாக இந்தப் படம் மெகா ஹிட்டாக வேண்டும் என்று அவரும், அவரது ரசிகர்களும் ஆவலோடு இருக்கிறார்கள். அதேபோல் அமரன் கொடுத்த மெகா ஹிட்டையும், மாஸையும் பராசக்தி படத்தை ஹிட்டாக கொடுத்து தக்க வைத்துக்கொள்ள வேண்டும் என்பதில் எஸ்கேவும் அவரது ரசிகர்களும் தீர்க்கமாக இருக்கிறார்கள்.

Journalist Bismi Slams Sivakarthikeyan For Vijay

விஜய்யுடன் மோதும் சிவகார்த்திகேயன்?: விஜய்யின் ஜன நாயகன் திரைப்படம் அடுத்த வருடம் பொங்கலையொட்டி ஜனவரி 9ஆம் தேதி ரிலீஸாகவிருக்கிறது. அதே நாளில் சிவகார்த்திகேயனின் பராசக்தி படமும் வெளியாக வாய்ப்புகள் இருப்பதாக சமீபமாக தகவல்கள் பரவிக்கொண்டிருக்கின்றன. இதனை கேள்விப்பட்ட ரசிகர்களோ இனிமேல் தமிழ் சினிமாவில் தனக்கு அடுத்த இடத்தில் இருப்பது நீங்கள்தான் என்பதை விஜய் பிரகடனப்படுத்தினார். ஆனால் இப்போது அந்த விஜய்யையே சிவா எதிர்க்க துணிந்துவிட்டாரா என்று கேள்விகள் எழுப்ப தொடங்கியிருக்கிறார்கள்.

பிஸ்மி கருத்து: மேலும் அப்படி ஏதேனும் பராசக்தி ஜனநாயகன் படத்துக்கு போட்டியாக களமிறங்கினால் கண்டிப்பாக பராசக்தி தோல்வியைத்தான் சந்திக்கும். அந்த ரிஸ்க்கை எஸ்கே எடுக்கமாட்டார் என்றும் ஒரு தரப்பினர் கூறுகிறார்கள். இந்நிலையில் பிரபல பத்திரிகையாளரான பிஸ்மி இதுகுறித்து ஒரு வீடியோவில் பேசுகையில், "சிவகார்த்திகேயன் சரியான சந்தர்ப்பவாதி. தன்னுடைய சுயநலத்துக்காக எதை வேண்டுமானாலும் செய்வார்.பராசக்தி படத்துக்கு ரெட் ஜெயன்ட் நிறுவனம் அதிக தியேட்டர்களை ஒதுக்குவார்கள். அதனை பயன்படுத்திக்கொள்ள பார்க்கிறார் அவர். மேலும் அப்படி நடந்தால் ஜன நாயகன் முதல் நாள் வசூல் டல்லடிக்க வாய்ப்பு இருக்கிறது" என்றார். பிஸ்மியின் இந்தப் பேட்டி விஜய் ரசிகர்களிடையே கவனத்தை ஈர்க்க ஆரம்பித்திருக்கிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X