சூர்யாவுக்கு திமிரு அதிகமாகிவிட்டது.. விட்டு விளாசிய பிரபல பத்திரிகையாளர்
சென்னை: சூர்யா நடிப்பில் கடைசியாக எதற்கும் துணிந்தவன் திரைப்படம் வெளியானது. அந்தப் படம் உண்மை கதையை மையப்படுத்தி எடுக்கப்பட்டாலும் எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை. படத்தை பாண்டிராஜ் இயக்கியிருந்தார். இதனையடுத்து வணங்கான் படத்தில் கமிட்டான சூர்யா; அதிலிருந்து விலகினார். இப்போது கங்குவா படத்தில் நடித்து முடித்திருக்கிறார். அடுத்ததாக கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனது 44ஆவது படத்தில் நடித்து வருகிறார் அவர். இந்தச் சூழலில் சூர்யா குறித்து பிரபல பத்திரிகையாளர் பிஸ்மி காட்டமாக பேசியிருக்கிறார்.
கோலிவுட்டின் திறமை வாய்ந்த நடிகர்களில் ஒருவராக இருப்பவர் சூர்யா. சிவக்குமாரின் மகன் என்ற அடையாளத்தோடு அவர் சினிமாவில் அறிமுகமானாலும் ஆரம்பத்தில் கேலிகளையும், கிண்டல்களையும் சந்தித்தார். முக்கியமாக நடனமே ஆட வரவில்லை; முகத்தில் எக்ஸ்பிரெஷனே இல்லை என்றெல்லாம் ஏகப்பட்ட கல்லடிகளை நேருக்கு நேர் படத்தில் வாங்கினார். ஆனால் திறமையை வளர்த்துக்கொண்டு படிப்படியாக வளர்ந்தார். அவருக்கு திருப்புமுனையாக அமைந்த படங்கள் என்றால் நந்தா, காக்க காக்க.

டாப் ஹீரோ: பிறகு தொடர்ந்து ஹிட் படங்களில் நடித்த அவர்; இதுவரை 43 படங்களில் நடித்து முடித்திருக்கிறார். கடைசியாக எதற்கும் துணிந்தவன் திரைப்படத்தில் நடித்தார். இப்போது சிவா இயக்கத்தில் கங்குவா படத்தில் நடித்து முடித்திருக்கிறார். இதற்கிடையே பாலா இயக்கத்தில் வணங்கான் படத்தில் நடிக்க கமிட்டாகி ஒரு ஷெட்யூலும் நடித்தார். ஆனால் சில காரணங்களால் அந்தப் படத்திலிருந்து விலகினார். கடைசி இரண்டு வருடங்களாக சூர்யா நடிப்பில் எந்தப் படமும் வெளியாகாததால் கங்குவா மீது அவரது ரசிகர்கள் எதிர்பார்ப்பை வைத்திருக்கிறார்கள்.
கங்குவா: கங்குவா படம் சூர்யாவுக்கும், சிவாவுக்கும் முக்கியமான படமாக பார்க்கப்படுகிறது. ஏனெனில் சிவா கடைசியாக இயக்கிய அண்ணாத்த திரைப்படம் மிகப்பெரிய தோல்வி படமாக அமைந்தது. எனவே தன்னை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார் சிவா. படத்தை ஞானவேல் ராஜா பெரிய பொருட்செலவில் தயாரித்திருக்கிறார். பல மொழிகளில் இந்தப் படம் வெளியாகவிருக்கிறது. சூர்யாவின் கரியரிலேயே இதுதான் ஹை பட்ஜெட் படம் என்பது குறிப்பிடத்தக்கது.
எப்போது ரிலீஸ்: படத்திலிருந்து டீசர், போஸ்டர்கள் எல்லாம் வெளியாகி பலத்த வரவேற்பை பெற்றிருக்கின்றன. சூர்யா இதில் டபுள் ஆக்ஷனில் நடித்திருக்கிறார். பீரியட் காலத்திலும், இப்போதைய காலத்திலும் நடக்கும்படியாக கதையை சிவா அமைத்திருப்பதாகவும்; இதனை இரண்டு பாகங்களாக வெளியிட படக்குழு திட்டமிட்டிருப்பதாகவும் கடந்த சில மாதங்களாகவே ஒரு தகவல் ஓடிக்கொண்டிருப்பது கவனிக்கத்தக்கது. அக்டோபர் 10ஆம் தேதி படம் ரிலீஸகாவிருக்கிறது.
அடுத்த படம்: கங்குவா படத்தில் நடித்து முடித்திருக்கும் சூர்யா; அடுத்ததாக கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனது 44ஆவது படத்தில் நடிக்கவிருக்கிறார். இதில் பூஜா ஹெக்டே ஹீரோயினாக நடிக்கிறார். சமீபத்தில்தான் படத்தின் ஷூட்டிங் ஆரம்பித்ததற்கான அறிவிப்பை க்ளிம்ப்ஸ் வீடியோவுடன் படக்குழு வெளியிட்டது. அதில் சூர்யாவின் லுக்கை பார்த்த ரசிகர்கள் மிரண்டு போயினர். கண்டிப்பாக இந்தப் படத்தில் தரமான சம்பவம் இருக்கும் என்று ஃபேன்ஸ் காத்திருக்கிறார்கள்.
பிஸ்மி பேட்டி: இந்நிலையில் சூர்யா குறித்து பத்திரிகையாளர் பிஸ்மி ஒரு பேட்டியில் பேசுகையில், "பொதுவாக பெரிய ஹீரோக்களிடம் பெரும்பாலான இயக்குநர்கள் கதை சொல்லும்போது லைனைத்தான் சொல்வார்கள். அப்படித்தான் பாலாவும், சுதா கொங்கராவும் சொல்லியிருப்பார்கள். ஆனால் வணங்கானிலிருந்து வெளியேற அதுவே காரணமாக இருக்கலாம். அவரது ஆட்டிட்யூட் ரொம்பவே மாறிவிட்டதாக பலரும் சொல்கிறார்கள். அவர் தன்னை ஒரு விஜய், அஜித் மாதிரி நினைத்துக்கொள்கிறார். அதுதான் பிரச்னையே. சினிமாவை செருப்பு மாதிரி வைத்திருக்க வேண்டும். எந்த இடத்தில் கழற்றிவிட வேண்டுமோ அங்கு விட்டுவிட வேண்டும்" என்றார்.


Click it and Unblock the Notifications











