அந்த குணம் மட்டும் ரஜினியிடம் இல்லை.. பிரபல பத்திரிகையாளர் ஓபன் டாக்
சென்னை: வேட்டையன் படத்தில் நடித்து முடித்திருக்கும் ரஜினிகாந்த் இப்போது கூலி படத்தில் நடித்துவருகிறார். ஷூட்டிங்கில் தவறாமல் கலந்துகொண்ட அவர் திடீரென சமீபத்தில் சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு சில பரிசோதனைகளும், சிகிச்சைகளும் செய்யப்பட்டன. வேட்டையன் படம் பத்தாம் தேதி ரிலீஸாகவிருக்கும் நிலையில் ரஜினி குறித்து பிரபல பத்திரிகையாளர் பிஸ்மி சில விஷயங்களை பேசியிருக்கிறார்.
ஜெய்பீம் இயக்குநர் ஞானவேல் இயக்கத்தில் வேட்டையன் படத்தில் நடித்திருக்கிறார் ரஜினிகாந்த். அக்டோபர் 10ஆம் தேதி படம் ரிலீஸாகவிருக்கிறது. இன்று ட்ரெய்லர் ரிலீஸாகவிருக்கிறது. இதில் அவருடன் மிகபெரிய நட்சத்திர பட்டாளமே சேர்ந்து நடித்திருக்கிறது. முதன்முறையாக ஞானவேலுவுடன் ரஜினி இணைந்திருப்பதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்திருக்கிறது. ஆனால் படத்தின் டீசர் ரசிகர்களிடையே கலவையான விமர்சனத்தையே பெற்றுள்ளது.

கூலி: வேட்டையன் படத்தை முடித்த கையோடு கூலி படத்தில் நடிக்க ஆரம்பித்துவிட்டார் ரஜினி. இதனை லோகேஷ் கனகராஜ் இயக்க சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. நாகார்ஜுனா, சௌபின் சாஹிர், ஸ்ருதிஹாசன் உள்ளிட்டோர் நடித்துவருகிறார்கள். 73 வயதிலும் ரஜினிகாந்த் அடுத்தடுத்து படங்களில் நடித்துவருவது அவரது ரசிகர்களை மட்டுமின்றி ஒட்டுமொத்த திரைத்துறையினரையும் ஆச்சரியத்தில் மூழ்கடித்திருக்கிறது. மேலும் மீசை வைத்த குழந்தையப்பா என்று வைரமுத்து எழுதியது ரஜினிக்கு பக்காவாக பொருந்துகிறது என்றும் புகழ்ந்து வருகிறார்கள்.
மருத்துவமனையில் அனுமதி: நிலைமை இப்படி இருக்க ரஜினிகாந்த் சென்னை அப்போலோ மருத்துவமனையில் சமீபத்தில் அனுமதிக்கப்பட்டார். நன்றாக இருந்தவர் ஏன் திடீரென மருத்துவமனையில் அட்மிட் ஆனார் என்று அவரது ரசிகர்கள் உச்சக்கட்ட அதிர்ச்சியடைந்தனர். ஆனால் ரஜினிகாந்த்தின் உடல்நிலை சீராக இருக்கிறது என்று குடும்பத்தினர் தெரிவித்தனர். மேலும் அங்கு வைத்து அவருக்கு சிறுநீரக சம்பந்தமான பரிசோதனைகள் செய்யப்பட்டன. மேலும் அடிவயிற்று ரத்த நாளத்தில் வீக்கம் ஏற்பட்டதால் அதற்கான சிகிச்சையும் செய்யப்பட்டது.
ரஜினிகாந்த்தின் நன்றி: மருத்துவமனையில் இருந்தபோது தான் நலம் பெற வேண்டிய அனைவருக்கும் ரஜினிகாந்த் நன்றியும் தெரிவித்திருந்தார். இதற்கிடையே இந்த உடல்நிலை மோசமானதற்கு காரணமாக லோகேஷ் கனகராஜையும் சிலர் சொல்ல ஆரம்பித்தார்கள். ஆனால் அதனை திட்டவட்டமாக மறுத்த லோகி; இந்த விஷயம் குறித்து ரஜினி என்னிடம் ஏற்கனவே கூறியிருந்தார் என தெரிவித்திருந்தார்.
பிஸ்மி பேட்டி: இந்நிலையில் பிரபல பத்திரிகையாளர் பிஸ்மி தனியார் யூட்யூப் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், “ரஜினியைப் பொறுத்தவரை இன்றைய இளம் தலைமுறைகளோடு இணைந்து பணியாற்றும் நிலையில்தான் இருக்கிறார்.முக்கியமாக இவங்க எல்லாம் சின்ன பசங்க நான் ஒரு சீனியர் ஸ்டார் என்ற ஆட்டிட்டியூடே அவரிடம் இருக்காது. அவர்களின் சம வயதுக்காரராக மாறிடுவார். சமீபத்தில்கூட கூலி படத்தின் செட்டில் மனசிலாயோ பாடலுக்கு ஆடியது நன்றாக இருந்தது” என்றார்.


Click it and Unblock the Notifications











