புட்டி, குட்டி சகவாசமா?.. விஷாலுக்கு வந்த பிரச்னை அதுதானாம்.. காது குத்துறாங்க.. எல்லை மீறிய பிரபலம்
சென்னை: சுந்தர்.சி இயக்கத்தில் கடந்த 2012ஆம் ஆண்டு விஷால் நடித்த திரைப்படம் மதகஜராஜா. அந்தப் படத்தில் அவருடன் அஞ்சலி, வரலட்சுமி, சந்தானம் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். ரிலீஸே ஆகாது என்று நினைத்த அந்தப் படம் இந்த வருட பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 14ஆம் தேதி ரிலீஸாகவிருக்கிறது. இதனையொட்டி படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சி நேற்று நடந்தது. அதில் கலந்துகொண்ட விஷால் கைகள் நடுங்கியபடி பேசியதை பார்த்து அவரது ரசிகர்கள் உச்சக்கட்ட ஷாக்காகினர்.
தமிழின் முன்னணி நடிகர்களில் ஒருவர் விஷால். இயக்குநராகும் ஆசையோடு சினிமாவுக்கு வந்த அவர்; நடிகராக செல்லமே படத்தில் அறிமுகமானார். அந்தப் படம் சூப்பர் டூப்பர் ஹிட்டடித்தது. தொடர்ந்து அவர் நடித்த படங்களும் ஹிட்டானதை அடுத்து தமிழின் முக்கியமான ஆக்ஷன் ஹீரோவாக உயர்ந்தார். நிச்சயம் இன்னும் பல வருடங்களுக்கு விஷால்தான் ஆக்ஷன் ஹீரோக்களில் முன்னணியில் இருப்பார் என்றும் ஆரூடம் கூறப்பட்டது. அதற்கேற்றபடிதான் அவருக்கு கிராஃபும் இருந்தது.

சறுக்கிய விஷால்: ஆனால் விஷாலின் கிராஃபோ திடீரென சறுக்க தொடங்கியது. அதற்கு காரணம் அவர் நடிப்பில் மட்டுமின்றி தயாரிப்பாளர் சங்கம், தென்னிந்திய நடிகர் சங்கம், நடிகர் சங்க கட்டடம் உள்ளிட்டவைகளின் மீது கவனம் திருப்பியதுதான் என்றும் பலர் கூறினார்கள். அதுமட்டுமின்றி ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில்கூட வேட்பு மனுத்தாக்கல் செய்ய முயன்று; அதற்கு அவர் தடுக்கப்பட்டதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும் ஸ்ரீரெட்டி விவகாரமும் பூதாகரம் ஆனது.
மார்க் ஆண்டனி: சூழல் இப்படி இருக்க ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் மார்க் ஆண்டனி படத்தில் நடித்தார் விஷால். அந்தப் படம் மிகப்பெரிய வெற்றியை பெற்று 100 கோடி ரூபாய் வசூலை ஈட்டியது. இதனால் விஷால் மீண்டும் ஃபார்முக்கு வந்துவிட்டார் என்று அவரது ரசிகர்கள் உற்சாகத்தோடு இருந்தனர். இந்தப் படத்துக்கு பிறகு ஹரி இயக்கத்தில் அவர் நடித்த ரத்னம் திரைப்படமும் தோல்வியடையாவிட்டாலும் ஓரளவுக்கு நல்ல வரவேற்பையே பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.
மதகஜராஜா: இதற்கிடையே சுந்தர்.சி இயக்கத்தில் 13 வருடங்களுக்கு முன்பு அவர் நடித்த மதகஜராஜா திரைப்படம் பொங்கலையொட்டி ஜனவரி 14ஆம் தேதி ரிலீஸாகவிருக்கிறது. எனவே அந்தப் படத்தின் ப்ரோமோஷன் நேற்று நடந்தது. அதில் கலந்துகொண்ட விஷால் உடல் ரொம்பவே தளர்ந்து, கைகள் நடுங்கியபடி மைக்கை பிடித்து பேசினார். நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய டிடி, 'விஷாலுக்கு வைரல் ஃபீவர். இருந்தாலும் இந்த நிகழ்ச்சிக்கு வந்திருக்கிறார்" என்று கூறினார்.
எல்லை மீறிய சேகுவேரா: ஆனால் விஷாலின் உடல்நிலை குறித்து பலரும் வழக்கம் போல் தங்கள் யூகங்களை கிளப்ப ஆரம்பித்திருக்கிறார்கள். அந்தவகையில் பத்திரிகையாளர் சேகுவேரா தனியார் யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், "விஷால் என்று நான் சொல்லவில்லை. பொதுவாக சொல்கிறேன். இந்த மாதிரி ஆட்கள் எல்லாம் புட்டி, குட்டி என்று எல்லை மீறி போயிருப்பார்கள். அதன் காரணமாக நாடி, நரம்பு எல்லாம் தளர்ந்து போயிருக்கும்.
காது குத்தாதீங்க: வைரல் ஃபீவர் வந்தால் யாருக்கு கைகள் நடுங்கும். நமக்கெல்லாம் வைரல் ஃபீவர் வந்ததில்லையா. குடி அதிகமாகியிருக்கும் என்று ரசிகர்களே சொல்கிறார்கள். சரி அவருக்கு வைரல் ஃபீவர் என்றே வைத்துக்கொள்வோம். பிறகு ஏன் இந்த நிகழ்ச்சிக்கு வர வேண்டும். இது வைரல் ஃபீவர் எல்லாம் இல்லை. டிடி காது குத்துகிறார். அவர் ஆங்க்கர் என்றால் ஆங்க்கராக மட்டும்தான் நடந்துகொள்ள வேண்டும். இப்படி காது குத்தும் வேலை எல்லாம் செய்யக்கூடாது" என்றார்.


Click it and Unblock the Notifications











