திரிஷாவால்தான் சிக்கலாம்.. சங்கீதாவுக்கு பிடிக்கவில்லையாம்.. விஜய் பற்றி இஷ்டத்துக்கு பேசும் பிரபலம்
சென்னை: விஜய்யும், திரிஷாவும் கோலிவுட்டின் ரீல் ஜோடிகளில் ரசிகர்களுக்கு ஃபேவரைட். இதுவரை ஐந்து படங்களில் சேர்ந்து நடித்திருக்கிறார்கள். கடந்த மாதம் விஜய்யின் பிறந்தநாளுக்கு திரிஷா ஒரு புகைப்படத்தை பகிர்ந்திருந்தார். அந்த புகைப்படங்களை வைத்து பலரும் பல விதமான வதந்திகளை பரப்பினார்கள். இந்தச் சூழலில் பத்திரிகையாளர் சேகுவேரா விஜய் - திரிஷா குறித்து ஒரு விஷயத்தை பேசியிருக்கிறார்.
விஜய் இப்போது GOAT படத்தில் நடித்து முடித்திருக்கிறார். அடுத்ததாக ஒரே ஒரு படத்தில் மட்டும் நடிக்கவிருக்கும் அவர்; அதற்கு பிறகு முழுக்க முழுக்க அரசியலில் கவனம் செலுத்தவிருக்கிறார். இப்போது கோலிவுட்டில் அதிகம் வியாபாரம் நடக்கும் ஹீரோக்களில் விஜய்தான் முதல் இரண்டு இடங்களுக்குள் இருக்கிறார். எனவே இப்படிப்பட்ட வியாபாரத்தை விட்டுவிட்டு அரசியலுக்கு அவர் வருவதை பலரும் பாராட்டிவருகிறார்கள். அவரது தமிழக வெற்றிக் கழகம் கட்சி 2026ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடவிருப்பது குறிப்பிடத்தக்கது.

கடைசி படம்: விஜய் இன்னும் ஒரே ஒரு படத்தில் மட்டும் நடிக்கவிருப்பதாக கூறப்படுகிறது. அந்தப் படத்தை ஹெச்.வினோத் இயக்குகிறார். அதேசமயம் தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் தனது மனக்கணக்கு பலிக்கவில்லை என்றால் கண்டிப்பாக விஜய் மீண்டும் சினிமாவில் நடிக்க வந்துவிடுவார் என்று ஒருதரப்பினர் ஆணித்தரமாக சொல்கிறார்கள்.
இப்போதே களத்தில்: இருந்தாலும் சட்டப்பேரவைத் தேர்தலில் தன்னுடைய தாக்கத்தை வீரியமாக காட்ட வேண்டும் என்ற முடிவில் இருக்கிறார் விஜய். அதற்கான முன்னெடுப்புகளில் விஜய் இப்போது தீவிரமாக களமாட ஆரம்பித்திருக்கிறார். நேற்று தமிழக வெற்றிக் கழகத்தின் கொடியும், பாடலும் அறிமுகப்படுத்தப்பட்டது. அது விஜய் ரசிகர்களை உற்சாகமடைய செய்திருக்கிறது. இதற்கிடையே கடந்த சில மாதமாகவே விஜய் - திரிஷாவை இணைத்து ஏகப்பட்ட கிசுகிசுக்கள் பரவ ஆரம்பித்தன.
விஜய் - திரிஷா: அதாவது கடந்த மாதம் விஜய் தனது பிறந்தநாளை கொண்டாடினார். அதனையொட்டி திரிஷா தானும், விஜய்யும் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்தார். அது பெரும் வதந்திக்கு வழி வகுத்தது. ஆனால் அது விஜய்யின் அரசியல் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு திட்டமிட்டு பரப்பப்படும் அவதூறு என்று விஜய்யின் ரசிகர்கள் தொடர்ந்து கூறிவருகிறார்கள்.
சேகுவேரா பேட்டி: இந்நிலையில் பிரபல பத்திரிகையாளர் சேகுவேரா இந்த விவகாரம் குறித்து தனியார் யூட்யூப் சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்தார். அந்தப் பேட்டியில் பேசிய அவர், "விஜய் - திரிஷா விவகாரத்தில் திரிஷாவால்தான் சிக்கல். இருவருமே மறுப்பு தெரிவிக்கவில்லை என்பது ஒருபக்கம் இருக்கட்டும். ஆனால் திரிஷா கண்டிப்பாக மறுப்பு தெரிவித்திருக்க வேண்டும். அதைத்தான் சிக்கல் என்று சொல்கிறேன். விஜய் அரசியல் கட்சி தொடங்கியிருக்கிறார். அவர் தரப்பை பொறுத்தவரை விஜய் அரசியலுக்கு வருவது சங்கீதாவுக்கு பிடிக்கவே இல்லை. அந்தப் பிரச்னை வேறு அங்கு ஓடிக்கொண்டிருக்கிறது" என்றார். முன்னதாக நேற்று நடந்த தவெக கொடி அறிமுக விழாவுக்கு விஜய்யின் மனைவி சங்கீதா வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











