நடிகைகளுக்கு பாலியல் தொல்லை.. மூத்த நடிகர்கள் சிக்குகிறார்களா?.. பரபரப்பை பற்ற வைத்த பத்திரிகையாளர்
சென்னை: இந்திய திரையுலகையே அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறது ஹேமா கமிஷன் அறிக்கை. மலையாள திரையுலகில் நடிகைகள் முதல் பெண் ஊழியர்கள்வரை நடைபெறும் பாலியல் தொல்லைகள் குறித்து விசாரிக்க அமைக்கப்பட்ட ஹேமா கமிஷனின் அறிக்கையில் இருக்கும் அம்சங்கள் வெளியாகியிருக்கின்றன. அதன் காரணமாக கேரள திரையுலகில் பெரும் புயல் வீசிவருகிறது. இந்தச் சூழலில் பத்திரிகையாளர் சேகுவேரா பேசியிருக்கும் விஷயம் அதிர்ச்சியை கிளப்பியிருக்கிறது.
மலையாள சினிமாவில் முன்னணி நடிகை ஒருவர் சில வருடங்களுக்கு முன்பு ஷூட்டிங்கை முடித்துவிட்டு திரும்பிக்கொண்டிருந்தார். அப்போது அவரை கடத்தில் பாலியல் வன்கொடுமை செய்தார்கள் சிலர். அந்த விவகாரத்தில் பிரபல நடிகர் திலீப் கைது செய்யப்பட்டார். அதேபோல் சுனி என்பவரும் சைது செய்யப்பட்டார். அந்த விவகாரம் இந்திய திரையுலகில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது.

ஹேமா கமிஷன்: இந்த விவகாரத்தை அடுத்து மலையாள திரையுலகில் இருக்கும் பெண்களின் பாதுகாப்பு எப்படி இருக்கிறது ; அவர்களுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல்கள் குறித்து விசாரிக்க கமிஷன் அமைக்க வேண்டும் என்று மலையாள திரையுலகிலிருந்து சில நடிகைகள் கோரிக்கையை முன் வைத்தார்கள்.அதனை ஏற்றுக்கொண்ட அம்மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் ஓய்வு பெற்ற நீதிபதி ஹேமா தலைமையில் கடந்த 2018ஆம் ஆண்டு ஒரு கமிஷனை அமைத்தார்.
அந்த கமிஷனில் ஹேமா தவிர்த்து நடிகை சாரதா, ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி வல்சலகுமாரி ஆகியோரும் உறுப்பினர்களாக இருந்தனர். அவர்கள் தீவிரமாக விசாரித்து தங்களது அறிக்கையை 2019ஆம் ஆண்டு முதலமைச்சரிடம் சமர்ப்பித்தனர். ஆனால் அந்த அறிக்கையில் என்னவிருந்தது என்பது வெளியிடப்படாமலேயே இருந்தது. அதற்கு காரணம் பலர் தங்களுக்கு தனிப்பட்ட முறையில் நடந்த விஷயங்களை கூறியிருப்பதாக கூறப்பட்டது. அதேசமயம் அந்த விஷயத்தை தவிர்த்து பிற விஷயங்களை வெளியிட வேண்டும் என்று தகவல் உரிமை ஆணையம் தெரிவித்திருந்தது.
தள்ளுபடி செய்த நீதிமன்றம்: ஆனால் ஹேமா கமிஷன் அறிக்கையை வெளியிடவேக்கூடாது என்று தயாரிப்பாளர் ஒருவர் கேரளாவில் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த நீதிமன்றம் ஒருவரின் தனியுரிமையை பாதிக்காத வண்ணம் அறிக்கையை வெளியிடலாம் என்று தகவல் உரிமை ஆணையம் கூறியிருப்பதை குறிப்பிட்டு வழக்கை தள்ளுபடி செய்தது. இந்தச் சூழலில் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் கேரளாவை சேர்ந்த 5 பேர் ஹேமா கமிஷன் அறிக்கையை பெற்று வெளியிட்டிருக்கிறார்கள். அதில் பல திடுக்கிடும் தகவல்கள் இடம்பெற்றிருக்கின்றன.
மௌனம் காக்கும் மோகன் லால்: அந்த அறிக்கையில் பல நடிகைகள் தங்களுக்கு பாலியல் தொல்லைகள் நடந்திருப்பதாகவும்; அதை வெளியில் கூறினால் உயிருக்கு ஆபத்து ஏற்படும் என்ற அச்சத்தில் மூடி மறைத்துவிட்டதாகவும் கூறினார்கள். அதேசமயம் சில நடிகைகள் ரஞ்சித், சித்திக் உள்ளிட்டோர் மீது குற்றச்சாட்டை முன்வைத்தனர். இதன் காரணமாக அவர்கள் AMMAவில் வகித்துவந்த பொறுப்பிலிருந்து அவர்கள் விலகவும் செய்திருக்கிறார்கள். அதேசமயம் மோகன் லால் இந்த விஷயத்தில் இதுவரை மௌனம் காத்துவருகிறார்.
சேகுவேரா பேட்டி: இந்நிலையில் பிரபல பத்திரிகையாளர் சேகுவேரா தனியார் யூட்யூப் சேனலுக்கு அளித்த பேட்டியில், “இந்திய திரையுலகை பொறுத்தவரை கேரள நடிகை என்றாலே அவர்கள் அட்ஜெஸ்ட்மெண்ட் செய்துகொள்வார்கள் என்ற எண்ணம்தான் இருக்கிறது. சித்திக் மலையாள சினிமாவில் மூத்த நடிகர். அவர் மீது குற்றச்சாட்டு வைக்கப்பட்டதால் அவர் ராஜினாமா செய்திருக்கிறார்.மோகன் லால் இந்த விஷயத்தில் ஏன் வாய் திறக்கவில்லை. இந்த மாதிரியான குற்றச்சாட்டுக்கள் அவர் மீதும் இருக்கலாம்.
இந்த கமிட்டி அமைக்கப்பட்டது 2017. அறிக்கை சமர்ப்பித்தது 2019. ஆனால் இத்தனை வருடங்கள் ஏன் அது வெளியாகவில்லை. இப்போது வெளியான அறிக்கையிலும் சில பகுதிகள் மறைக்கப்பட்டிருக்கின்றன. ஹேமா தனது பணியை சிறப்பாக செய்துவிட்டார். ஆனால் அரசு அதனை கிடப்பில் போட்டது. ஏன் என்றால் முக்கிய நடிகர்களின் பெயர்களும் அதில் இருக்கின்றன. அதனால் முக்கிய நடிகர்கள் தரப்பிலிருந்து அரசுக்கு அழுத்தம் சென்றிருக்கலாம். அதனால் கிடப்பில் போட்டிருக்கலாம். மகள் வயது பெண் நடிக்க வந்தால்கூட வயதான நடிகரின் ஆசைக்கு இணங்க வேண்டும்” என்றார்.


Click it and Unblock the Notifications











