சிவகார்த்திகேயனை நம்பினால் நடுரோடுதான்.. இவர் என்ன இப்படி சொல்லிட்டாரு.. புது பஞ்சாயத்து
சென்னை: சிவகார்த்திகேயன் நடிப்பில் கடந்த அக்டோபர் 31ஆம் தேதி அமரன் திரைப்படம் வெளியானது. மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கை வரலாறை மையமாக வைத்து எடுக்கப்பட்டிருந்த படத்தை ராஜ்குமார் பெரியசாமி இயக்கியிருந்தார். சாய் பல்லவி ஹீரோயினாக நடித்திருந்தார். மிகப்பெரிய வெற்றியை படம் பெற்றிருக்கிறது. சிவாவுக்கு இது ஹாட்ரிக் வெற்றியாகும். இந்தச் சூழலில் சிவகார்த்திகேயனை கடுமையாக விமர்சித்து பத்திரிகையாளர் சுபைர் சமூக வலைதளத்தில் பதிவு செய்திருக்கிறார்.
சிவகார்த்திகேயன் இப்போது டாப் ஹீரோக்களில் ஒருவர். அவரது நடிப்பில் வெளியான பிரின்ஸ் படம் படுதோல்வியடைந்தது. அதனையடுத்து அவர் அவ்வளவுதான் என்று பலரும் பேசினார்கள். ஆனால் சுதாரித்துக்கொண்ட அவர் மாவீரன், அயலான் ஆகிய படங்களில் மீண்டும் எழுந்தார். வரிசையாக இரண்டு ஹிட்டுகளை கொடுத்ததால் அடுத்ததாக அவர் நடிப்பில் வெளியான அமரன் திரைப்படம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

அமரன்: இந்திய ராணுவத்தில் பணியாற்றி தீவிரவாதிகளுடனான சண்டையில் உயிரிழந்த மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கையை மையமாக வைத்து இந்தப் படம் உருவாகியிருந்தது. ரங்கூன் படத்தை இயக்கிய ராஜ்குமார் பெரியசாமி இப்படத்தை இயக்கியிருந்தார். சாய் பல்லவி ஹீரோயினாக நடித்திருந்தார். தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கடந்த அக்டோபர் 31ஆம் தேதி படம் ரிலீஸானது. படத்துக்கு ரசிகர்கள் தங்களது அமோக வரவேற்பை கொடுத்திருக்கின்றனர்.
பக்கா எஸ்கே: படத்தில் சிவகார்த்திகேயனின் நடிப்பை ரசிகர்கள் ஏகத்துக்கும் கொண்டாடுகின்றனர். ராணுவ வீரராக அவரது உடலும், நடிப்பு, உடல் மொழியும் வேறு லெவலில் இருப்பதாகவும்; இந்தப் படம் கண்டிப்பாக சிவகார்த்திகேயனுக்கு மிகப்பெரிய பாய்ச்சல் என்றும் மகிழ்ச்சியுடன் பேசிவருகிறார்கள் எஸ்கே ரசிகர்கள். அதற்கேற்றபடிதான் சிவாவும் படத்தில் நடித்திருந்தார். சண்டை காட்சிகளிலும் சரி, சாய் பல்லவியுடனான காதல் காட்சிகளிலும் அவர் சிறப்பாகவே செய்திருந்தார்.
அதேபோல் சிவகார்த்திகேயனை தாண்டிய நடிப்பை சாய் பல்லவி கொடுத்திருந்தர். சின்ன சின்ன முக பாவனைகளிலிருந்து பெரிய எமோஷன் சீன் என அனைத்து ஏரியாக்களிலும் அடித்து ஆடியிருந்தார் பல்லவி. இப்படி படத்தின் அனைத்து ஜானர்களும் பக்காவாக கூடி வந்ததால் வசூல் ரீதியாகவும் படம் சக்கைப்போடு போடுகிறது. இதுவரை 150 கோடி ரூபாய்க்கும் மேல் வசூலித்திருப்பதாக பாக்ஸ் ஆஃபிஸ் வட்டாரம் தெரிவிக்கிறது. நேற்று படத்தின் சக்சஸ் மீட்டும் சென்னையில் நடந்தது.

எமோஷனல் ஆன சிவா: சக்சஸ் மீட்டில் சிவகார்த்திகேயன், சாய் பல்லவி, ராஜ்குமார் பெரியசாமி உள்ளிட்டோர் கலந்துகொண்டார்கள். அதில் கலந்துகொண்ட சிவகார்த்திகேயன் ரொம்பவே எமோஷனலாக பேசினார். அதிலும் தனது தந்தை தாஸ் குறித்து அவர் பேசுகையில் கண்ணும் கலங்கிவிட்டார். அந்த வீடியோ சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகியிருக்கிறது. சூழல் இப்படி இருக்க பத்திரிகையாளர் சுபைர் தனது முகநூல் பக்கத்தில் சிவா குறித்து கடுமையான விமர்சனத்தை முன்வைத்திருக்கிறார்.
நம்பினால் நடுரோடுதான்: அவர் தனது பதிவில், "சிவகார்த்திகேயன் ஒரு மிக சிறந்த வியாபாரி. எப்படியெல்லாம் எந்த இடத்தில் எல்லாம் ப்ரோமோட் செய்துகொள்வதில் வல்லவர். ஆனால் அவரை நம்பி போனவர்கள் நடுரோட்டில் நிற்பதுதான் உண்மை" என்று குறிப்பிட்டிருக்கிறார். இதனைப் பார்த்த எஸ்கேவின் ரசிகர்கள், சுபைருக்கு என்ன பிரச்னை. சிவாவின் வளர்ச்சியை பிடிக்காதவர் என்பதை இந்த பதிவின் மூலம் அவர் நிரூபித்துவிட்டார் என்று கூறிவருகின்றனர். அதேபோல் ப்ளூ சட்டை மாறன் சிவகார்த்திகேயனை விமர்சித்ததற்கும் நடிகர் கலையரசன் தனது கண்டனத்தை பதிவு செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











