Bala - வயிறு வலிக்குதுனு சொன்ன சூர்யா?.. பீரியட்ஸானு கேட்டாரா பாலா?.. அய்யயோ இதுதான் வணங்கான் பஞ்சாயத்தா?
சென்னை: இயக்குநர் பாலா சூர்யாவை வைத்து வணங்கான் படத்தை தொடங்கினார். முதல் இரண்டு ஷெட்யூல்களில் நடித்த சூர்யா என்ன காரணத்தாலோ படத்திலிருந்து விலகிவிட்டார். அவரைத் தொடர்ந்து அருண் விஜய்யை ஹீரோவாக வைத்து வணங்கான் படத்தின் ஷூட்டிங்கை முடித்திருக்கிறார் இயக்குநர் பாலா.
சேது படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் பாலா. விக்ரம், அபிதா, ஸ்ரீமன், சிவகுமார் உள்ளிட்ட பலர் நடித்திருந்த அந்தப் படம் மிகப்பெரிய ஹிட்டடித்தது. குறிப்பாக சியான் விக்ரமுக்கு சினிமாவில் நிலையான இடத்தை பெற்றுக்கொடுத்தது. அந்தப் படம்தான் பாலாவுக்கும் சரி விக்ரமுக்கும் நல்ல வாழ்க்கைக்கான கதவை திறந்துவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

நந்தா: சேது படத்தை குறிஞ்சி மலர் என்று ஏகத்துக்கும் கொண்டாடினார்கள் விமர்சகர்களும், ரசிகர்களும். ஒரே படத்தில் புகழின் உச்சிக்கு சென்ற அவருக்கு இரண்டாவது பட வாய்ப்பும் உடனடியாக கிடைத்தது. அதன்படி அபராஜித் பிலிம்ஸ் தயாரிப்பில் சூர்யாவை வைத்து நந்தா படத்தை இயக்கினார். அந்தப் படமும் நல்ல ஹிட்டாகி காலங்கடந்து பேசப்படும் படைப்பாக மாறி நிற்கிறது. சூர்யாவுக்கும் நல்ல பெயரை அந்தப் படம்தான் பெற்றுக்கொடுத்தது.
என்ன வேண்டுமானாலும் செய்வார்கள்: முதல் இரண்டு படங்களிலேயே முக்கியமான இயக்குநர் என்று பாலா பெயர் எடுத்தார். அடுத்தடுத்து அவர் இயக்கிய பிதாமகன், நான் கடவுள் உள்ளிட்ட படங்களும் மிகச்சிறந்த படைப்பாக இருக்கின்றனர். அதிலும் பாலா சொன்னால் நடிகர்கள் என்ன வேண்டுமானாலும் செய்வார்கள் என்ற நிலைதான் சினிமாவில் இருந்தது. அவரது இயக்கத்தில் ஓரிரு காட்சிகளிலாவது தோன்றிட வேண்டும் என நடிகர்கள் தவம் இருந்தார்கள் என்றுதான் சொல்ல வேண்டும்.
வணங்கான்: ஃபுல் ஃபார்மில் இருந்த பாலா கடந்த சில வருடங்களாகவே ஃபார்ம் அவுட்டில் இருக்கிறார். அவர் இயக்கிய வர்மா படம் கிடப்பில் போடப்பட்டது, தனது மனைவி மலருடனான விவாகரத்து என பாலாவுக்கு கொஞ்சம் போதாத காலம்தான் இப்போது. அதற்கெல்லாம் மருந்தாக வணங்கான் இருந்தது. சூர்யாவே தயாரித்து நடிக்கவும் கமிட்டானார்.இதன் மூலம் பாலா தரமான கம்பேக் கொடுப்பார் என்று அவரது ரசிகர்கள் தெரிவித்தனர்.
வெளியேறிய சூர்யா: ஆனால் யாரும் எதிர்பாராத விதமாக வணங்கான் படத்திலிருந்து சூர்யா வெளியேறினார். அதற்கான எந்த காரணமும் தெரியவில்லை. அது பாலாவுக்கு மேற்கொண்டு பின்னடைவை ஏற்படுத்தியது. இருந்தாலும் மனம் தளராத அவர் அருண் விஜய்யை வைத்து வணங்கான் படத்தை தொடங்கி தற்போது ஷூட்டிங் முடித்து டப்பிங் பணியையும் செய்துகொண்டிருக்கிறார்.
சுபைர் பேட்டி: இந்நிலையில் வணங்கானில் பாலாவுக்கும், சூர்யாவுக்கும் என்ன பிரச்னை ஏற்பட்டது என்பது குறித்து பத்திரிகையாளர் சுபைர் தெரிவித்திருக்கிறார். அவர் தனியார் யூட்யூப் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், "சூர்யா இப்போது வளர்ந்துவிட்டார். ஆனால் பாலாவோ சூர்யாவை நந்தா பட சூர்யா என்றே நினைத்திருக்கிறார். இன்றைய எதார்த்தத்தை அவர் புரிந்துகொள்ளவில்லை.
இதுதான் பிரச்னையா?: பாலாவுக்கு இந்தப் படம் வாழ்வா சாவா என்பது போன்ற படம்தான். ஷூட்டிங் ஸ்பாட்டில் சூர்யாவை தொடர்ந்து ஓடவிட்டுக்கொண்டே இருந்தார் அதனால்தான் பிரச்னை என்றார்கள். ஆனால் இன்னொன்றும் சொல்கிறார்கள். அதாவது ஒருமுறை சூர்யா பாலாவிடம் தனக்கு வயிற்று வலி என்று சொன்னதாகவும் அதற்கு பாலாவோ ஏன் பீரியட்ஸா என்று கேட்டுவிட்டார். அதனாலும் சூர்யா பாலாவிடமிருந்து ஒதுங்க முடிவெடுத்தார்” என்றார்.


Click it and Unblock the Notifications











