Ajith - அஜித் ஒதுங்கியிருப்பதற்கு இதுதான் காரணம்.. பல வருட சீக்ரெட்டை உடைத்த பத்திரிகையாளர்

சென்னை: Ajith (அஜித்) அஜித் பத்திரிகையாளர் சந்திப்பு நடத்தாததற்கு என்ன காரணம் என்பது குறித்து பத்திரிகையாளரும், அஜித்துக்கு நெருக்கமாக இருந்தவருமான வி.கே.சுந்தர் தெரிவித்திருக்கிறார்.

கோலிவுட்டின் டாப் நடிகர்களில் ஒருவரான அஜித் இதுவரை 61 படங்களில் நடித்திருக்கிறார். அவரது நடிப்பில் கடைசியாக வெளியான துணிவு திரைப்படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது. அந்தப் படத்தில் நடித்துக்கொண்டிருந்தபோதே தன்னுடைய 62ஆவது படத்தில் நடிக்க கமிட்டானார் அஜித். அதனை முதலில் விக்னேஷ் சிவன் இயக்குவதாக இருந்து பிறகு மகிழ் திருமேனி உள்ளே வந்தார்.

Journalist VK Sundar Reveals Why Ajith Did Not Met Journalists

விடாமுயற்சி: அஜித்தின் பிறந்தநாளை முன்னிட்டு கடந்த மே மாதம் படத்தின் பெயர் விடாமுயற்சி என அறிவிக்கப்பட்டது. அதற்கு பிறகு எந்த அப்டேட்டும் படத்திலிருந்து வரவில்லை. இருந்தாலும் படத்தின் ஷூட்டிங் அஜர்பைஜானில் ஜரூராக நடந்துவருகிறது. அனிருத் இசையமைக்கிறார். முதல் ஷெட்யூல் ஷூட்டிங் முடிந்து தற்போது இரண்டாம் ஷெட்யூல் நடந்துவருகிறது.

நட்சத்திர பட்டாளம்: இப்படத்தில் அஜித்துடன் அர்ஜுன், ஆரவ், திரிஷா, ரெஜினா உள்ளிட்டோர் நடிக்கின்றனர். மங்காத்தாவுக்கு பிறகு மீண்டும் அஜித்துடன் அர்ஜுன் இணைந்திருப்பதால் கண்டிப்பாக வேற லெவலில் இருக்கும் என ரசிகர்கள் உற்சாகமடைந்திருக்கின்றனர். சமீபத்தில்கூட ஷூட்டிங் ஸ்பாட்டில் வைத்து அஜித் எடுத்த புகைப்படங்கள் வெளியாகி ட்ரெண்டாகின.

ஒதுங்கிய அஜித்: அஜித்தை பொறுத்தவரை தன்னுடைய வேலை படத்தில் நடிப்பது மட்டும்தான். அதை தவிர்த்து ப்ரோமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளமாட்டேன் என்பதுதான் அவருடைய நிலைப்பாடு. அதேபோல் பத்திரிகையாளர் சந்திப்பிலும் அவர் ஈடுபடுவதில்லை. கடைசியாக அவர் அசல் படத்துக்காக பத்திரிகையாளர்களை சந்தித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஏன் சந்திக்கவில்லை?: இந்நிலையில் அஜித்குமார் ஏன் பத்திரிகையாளர்களை சந்திக்காததற்கான காரணம் குறித்து அவருடன் நெருங்கி பழகியவரும்; பத்திரிகையாளருமான வி.கே.சுந்தர் பேட்டி அளித்திருக்கிறார். தனியார் யூட்யூப் சேனல் ஒன்றுக்கு அவர் அளித்த பேட்டியில், "அமராவதியிலிருந்தே அஜித்துடன் நான் பழகிவருகிறேன். அவர் ஆரம்பத்தில் பத்திரிகையாளர்களை சந்தித்துதான் வந்தார்.

இதுதான் காரணம்?: அவருடைய பத்திரிகையாளர் சந்திப்பு எப்படி இருக்குமென்றால் பெரிய ரவுண்ட் டேபிள் போட்டு அனைவரும் அமர்ந்து ஜாலியாக பேசும்படிதான் இருக்கும். அதில் சாப்பாடு, ட்ரிங்ஸ் என எல்லாமும் இருக்கும். நம்முடன் அவரும் கலந்துகொண்டு பேசுவார். ஏதேனும் கேள்வி பதில் செஷன் எடுக்க வேண்டுமென்றால் அவருடைய ஆஃபிஸுக்கு வர சொல்வார்.

ஒருகட்டத்தில் மீடியாக்கள் நிறைய பெருகிவிட்டன. சம்பந்தமே இல்லாத கேள்விகள் எல்லாம் கேட்கப்பட்டன. அதனை அஜித் விரும்பவில்லை. அதனால்தான் அவர் பத்திரிகையாளர் சந்திப்பை நிறுத்திவிட்டார். அஜித்தின் மனநிலையில்தான் இப்போது மற்ற ஹீரோக்களும் இருக்கிறார்கள். என்ன ஒரு வித்தியாசம் அஜித் அதனை ஓபனாக சொல்லிவிட்டார். மற்றவர்கள் சொல்லவில்லை" என்றார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X