War 2: கியாரா அத்வானி பிகினியை வச்சே ஓட்டிடுவோம்னு நினைச்சீங்களா.. வெளியான தரமான வார் 2 சம்பவம்!
மும்பை: ஹ்ரித்திக் ரோஷன் மற்றும் ஜூனியர் என்டிஆர் நடிப்பில் உருவாகியுள்ள வார் 2 திரைப்படத்திற்கான ப்ரோமோஷன்களில் இதுவரை நடிகை கியாரா அத்வானியின் கவர்ச்சியை காட்டி மட்டுமே படக்குழு விளம்பரம் செய்து வருவதாக ஏகப்பட்ட ட்ரோல்கள் குவிந்து வந்த நிலையில், தற்போது தரமான சம்பவத்தை ஜூனியர் என்டிஆர் தனது ட்விட்டர் பக்கத்தில் இறக்கியுள்ளார்.
வார் 2 படத்தின் டீசர் மற்றும் டிரைலரை தாண்டி சமீபத்தில் கூட கியாரா அத்வானியின் பிகினி போர்ஷன் மேக்கிங் வீடியோவை மட்டுமே வார் 2 படக்குழுவினர் வெளியிட்டு இருந்தனர். இதை பார்த்த பாலிவுட் ரசிகர்களே என்னப்பா இந்த படத்தில் வேற எதுவுமில்லையா என கேட்க ஆரம்பித்து விட்டனர்.

இந்நிலையில், நாட்டு கூத்து ஸ்டைலில் இன்னொரு நச்சென இந்தியாவின் இரண்டு பிரபல டான்ஸர்கள் ஆடிய பாடல் ப்ரோமோ வீடியோ வெளியாகி உள்ளது.
இட்லி துணியில் கியாரா அத்வானி: திருமணமாகி குழந்தையை பெற்ற பின்னரும் தன்னால் பிகினி அணிந்துக் கொண்டு கவர்ச்சி குயினாக திரையில் ஹ்ரித்திக் ரோஷன் மற்றும் ஜூனியர் என்டிஆரை தாண்டி ரசிகர்களை வசீகரிக்க வைத்து ஜொள்ளு விட வைக்க முடியும் என்பதை நிரூபித்துக் காட்டியுள்ளார். இந்த ஆண்டு ராம் சரண் உடன் இணைந்து கியாரா அத்வானி நடித்த கேம் சேஞ்சர் படத்தின் கேம் மொத்தமாக முடிந்த நிலையில், ஜூனியர் என்டிஆர் மற்றும் ஹ்ரித்திக் ரோஷனுடன் இணைந்து நடித்துள்ள வார் 2 படத்துக்கு அவர் தாராளம் காட்டிய பிகினி சீன் மேக்கிங் வீடியோவை படக்குழு வெளியிட்டு பக்கா ப்ரோமோஷன் பண்ணியிருந்தனர்.
நாட்டுக்கூத்துக்கு மேல இருக்குமா?: இந்திய நடிகர்களில் ஹ்ரித்திக் ரோஷன், விஜய், ஜூனியர் என்டிஆர், அல்லு அர்ஜுன், சிம்பு எல்லாம் செம டான்ஸர்கள் என்பது அனைத்து ரசிகர்களுக்கும் தெரிந்த விஷயம் தான். ஜூனியர் என்டிஆர் டான்ஸ் ஆடிய நாட்டுக்கூத்து பாடல் ஆஸ்கர் விருதையே தட்டித்தூக்கியது. இந்நிலையில், ஹ்ரித்திக் ரோஷன் உடன் அவர் இணைந்து ஆடியுள்ள Janaab-e-Aali போட்டா போட்டி பாடலின் ப்ரோமோ வீடியோவை தனது ட்விட்டர் பக்கத்தில் தற்போது வெளியிட்டுள்ளார் ஜூனியர் என்டிஆர். முழு வீடியோ பாடலை ரசிகர்கள் தியேட்டருக்கு ஆகஸ்ட் 14ம் தேதி வந்து தான் பார்க்க வேண்டும் என்றும் கட் அண்ட் ரைட்டாக சொல்லிவிட்டார்.
கூலிக்கு சரியான போட்டி: இந்தி, தெலுங்கு மற்றும் ஓவர்சீஸில் கூலி படத்துக்கு சரியான போட்டியாக வார் 2 படத்தின் ரிலீஸ் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. சுதந்திர தினத்துக்கான சரியான படமாக வார் 2 திரைப்படத்தை இயக்குநர் அயன் முகர்ஜி இயக்கியுள்ள நிலையில், இரண்டு படங்களில் பாக்ஸ் ஆபீஸ் போட்டியில் எந்த படம் அதிக வசூலை ஈட்டும் என்கிற போட்டியும் நிலவி வருகிறது. ரஜினிகாந்தின் கூலி படத்துக்கு ஒரு கூட்டமும், வார் 2 படத்துக்கு ஒரு கூட்டமும் சப்போர்ட் செய்து வரும் நிலையில், 2 படங்களுமே பெரியளவில் பாக்ஸ் ஆபீஸில் கல்லா கட்டும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. அதிக வசூலை யார் வெல்லுவார் என்பது அந்த அந்த படங்களின் கன்டென்ட்டை பொறுத்து தான் சொல்ல முடியும் என்கின்றனர்.


Click it and Unblock the Notifications











