ஃபளாப் ஆன தேவரா.. அடுத்த படத்துக்காக பின்னாடியே இத்தனை பேக்ஸ் வச்சிருக்காரே ஜூனியர் என்டிஆர்!

ஹைதராபாத்: ராஜமெளலி இயக்கத்தில் ராம்சரண், ஜூனியர் என்டிஆர் நடித்த ஆர் ஆர் ஆர் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியடைந்தது. ஆஸ்கர் விருதையும் ராம்சரண், ஜூனியர் என்டிஆர் நடனமாடிய "நாட்டுக் கூத்து" பாடல் வென்று இமாலய சாதனையை படைத்தது.

ஆனால், அதன் பின்னர், ஜான்வி கபூர் உடன் இணைந்து ஜூனியர் என்டிஆர் டபுள் ஆக்‌ஷனில் நடித்த தேவரா திரைப்படம் மிகப்பெரிய ஃப்ளாப் ஆனது. இன்னமும் ஜூனியர் என்டிஆர் தனது அடுத்த படத்தின் ஷூட்டிங்கை ஆரம்பிக்கவே இல்லை என்றும் பேச்சுக்கள் அடிபட்டு வந்தன.

Jr NTR s recent body transformation photo trending in social media
Photo Credit:

மேலும், பிரசாந்த் நீல் இயக்கத்தில் தாரக் நடிக்கப் போவதாக அறிவிக்கப்பட்ட டிராகன் திரைப்படம் கைவிடப்பட்டதாக வதந்திகள் கிளம்பிய நிலையில், படக்குழு அதனை மறுத்தது. இந்நிலையில், முதுகில் ஏகப்பட்ட பேக்ஸ் வைத்த போட்டோவை ஜூனியர் என்டிஆர் வெளியிட்டு தனது புதிய டிரான்ஃபர்மேஷனை காட்டியுள்ளார்.

டோட்டல் டிரான்ஸ்ஃபர்மேஷன்: ஜூனியர் என்டிஆர் ஆரம்பத்தில் பருமனான உடல் எடையுடன் தான் தெலுங்கு சினிமாவில் நடிக்க ஆரம்பித்தார். அதற்காக அவர் ஏகப்பட்ட ட்ரோல்களையும் சந்தித்தார். ஆனால், ஒரு கட்டத்தில் உடம்பை மாற்றியமைக்க வேண்டும் என்கிற முடிவுடன் கடுமையாக ஜிம்மில் உடற்பயிற்சி செய்து ஆளே மாறினார். ராஜமெளலியின் ஆர் ஆர் ஆர் படத்திற்காக அவர் வைத்த சிக்ஸ்பேக் உடம்பும் வெறித்தனமாக இருந்தது. இந்நிலையில், தற்போது மீண்டும் தனது உடம்பை முறுக்கு கம்பி போல முறிக்கியுள்ளார்.

பேக் போஸே தெறிக்குதே: ஜிம்மில் எடுத்த ஜூனியர் என்டிஆரின் பேக் போஸ் புகைப்படம் மட்டுமே தற்போது வெளியாகி உள்ளது. க்ரோக்கிடம் கேட்டு ஜூனியர் என்டிஆர் திரும்பினால் எப்படி இருப்பார் என்பதையும் ரசிகர்கள் பார்த்து வருகின்றனர். ஆனால், ஒரிஜினல் போட்டோவை சீக்கிரம் இறக்குங்க தலைவா என ரசிகர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.

டிராகன் வேட்டைக்கு ரெடி: ராஜமெளலியின் பாகுபலி படத்துக்குப் பிறகு பிரபாஸ் நடித்த படங்கள் தொடர்ந்து சரிவை சந்தித்தன. அப்போது பிரசாந்த் நீல் இயக்கத்தில் சலார் படத்தில் நடித்து கம்பேக் கொடுத்தார். அதே போல தனக்கும் ஒரு வெற்றியை பிரசாந்த் நீல் கொடுப்பார் என ஜூனியர் என்டிஆர் நம்பிக்கையுடன் பிரசாந்த் நீலின் டிராகன் படத்தில் நடித்து வருகிறார். விரைவில், அந்த படத்தின் அப்டேட்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X