விவாகரத்தான நடிகருடன் நெருக்கம்.. கட்டிப்பிடித்திருக்கும் போட்டோவை போட்டு பீலிங்ஸ் காட்டும் பிரபலம்!

சென்னை: விவாகரத்தான பிரபல நடிகருடன் ரொம்பவே நெருக்கமாக உள்ள பிரபலம் ஒருவர் இருவரும் கட்டிப்பிடித்திருக்கும் போட்டோவை போட்டு பீலிங்ஸ் காட்டியிருக்கிறார்.

Recommended Video

காதலர் தினத்தில் காதலியுடன் ஜாலி | Valentine's day | Vishnu vishal | Filmibeat Tamil

வெண்ணிலா கபடி குழு படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு நடிகராக அறிமுகமானவர் விஷ்ணு விஷால். கிரிக்கெட் வீரரான இவர் நடிப்பு மீது கொண்ட ஆர்வத்தால் திரைத்துறையில் கால்பதித்தார்.

தொடர்ந்து பலே பாண்டியா, குள்ள நரி கூட்டம், முண்டாசுப்பட்டி, இன்று நேற்று நாளை, வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன், கதாநாயகன், ராட்சசன், சிலுக்குவார்பட்டி சிங்கம் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.

காடன்

காடன்

விஷ்ணு விஷால் நடிகராக மட்டுமின்றி தயாரிப்பாளராகவும் உள்ளார். விஷ்ணு விஷாலின் ராட்சசன் திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. தொடர்ந்து, உலகளவிலும் பல விருதுகளை குவித்துள்ளது. விஷ்ணு விஷால் நடிப்பில் காடன் திரைப்படம் ரிலீஸ்க்கு தயாராக உள்ளது.

அடிக்கடி செய்திகளில்

அடிக்கடி செய்திகளில்

நடிகர் ராணா டக்குபதி லீடிங் ரோலில் நடித்திருக்கும் இப்படம் இந்தி, தமிழ், தெலுங்கு உள்ளிட்ட 5 மொழிகளில் உருவாகியிருக்கிறது. தற்போது ஜகஜால கில்லாடி, எஃப்ஐஆர் ஆகிய படங்களிலும் நடித்து வருகிறார் விஷ்ணு விஷால். கடந்த சில நாட்களாக அடிக்கடி செய்திகளில் அடிபட்டு வருகிறார்.

மனைவி விவாகரத்து

மனைவி விவாகரத்து

நடிகர் விஷ்ணு விஷால் கடந்த 2011-ம் ஆண்டு தனது கல்லூரி தோழியான ரஜினி நட்ராஜை காதலித்து திருமணம் செய்து கொண்டார். விஷ்ணு விஷாலுக்கு ஆர்யன் என்ற மகன் உள்ளார். கடந்த 2018ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் தானும், தனது மனைவியும் விவாகரத்து பெற்று பிரிந்து விட்டதாக தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்தார் விஷ்ணு விஷால்.

ஜுவாலா கட்டா

ஜுவாலா கட்டா

தனது மனைவிக்கு இருந்த சந்தேகம்தான் தங்களின் திருமண வாழ்க்கையில் பிரச்சனை ஏற்பட காரணம் என கூறியிருந்தார். இந்நிலையில்தான் நடிகர் விஷ்ணு விஷால், பிரபல பேட்மிண்டன் வீராங்கனையான ஜுவாலா கட்டாவுடன் நெருக்கமாக உள்ளதாக தகவல் வெளியானது. இருவரும் நெருக்கமாக இருக்கும் போட்டோக்களும் லீக்காகி வைரலானது.

இரண்டு போட்டோக்கள்

இருவரும் விரைவில் திருமணம் செய்து கொள்ள போவதாகவும் தகவல் பரவியது. ஆனால நடிகர் விஷ்ணு விஷால், மீண்டும் ஒரு காதல் செய்யும் எண்ணமில்லை என்று கூறி, அதுதொடர்பான தகவலை மறுத்தார். இந்நிலையில் ஜுவாலா கட்டா தற்போது தனது டிவிட்டர் பக்கத்தில் இரண்டு போட்டோக்களை பதிவிட்டுள்ளார்.

கட்டிப்பிடித்து

அதில் நடிகர் விஷ்ணு விஷாலை கட்டிப்பிடித்திருக்கிறார் ஜவாலா கட்டா. மேலும் மிஸ்ஸிங் மை பூ என்று சோகமான ஈமோஜியை போட்டு பீலிங்ஸ் காட்டியிருக்கிறார். இந்த போட்டோக்களை பார்த்த நெட்டிசன்கள், இதனலாதான் விவாகரத்து ஆயிடுச்சா என கேட்டுள்ளனர். இருவரும் நெருக்கமாக உள்ள இந்த போட்டோக்கள் வைரலாகி வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X