சூர்யாவுக்கு மிகப்பெரிய மன உளைச்சலை கொடுத்துவிட்டாரா ஜோதிகா?.. அச்சச்சோ இதுவேறயா?

சென்னை: சூர்யா நடிப்பில் உருவாகியிருக்கும் கங்குவா திரைப்படம் கடந்த 14ஆம் தேதி உலகம் முழுவதும் 30 மொழிகளில் ரிலீஸானது. மொத்தம் 10,000 திரைகளில் படம் திரையிடப்பட்டிருப்பதாக தகவல்கள் வருகின்றன. சூர்யா நடிப்பில் படம் வெளியாகி கிட்டத்தட்ட மூன்று வருடங்கள் ஆகியிருப்பதால் மிகப்பெரிய எதிர்பார்ப்போடு அவரது ரசிகர்கள் படம் பார்ப்பதற்கு படையெடுத்தனர். ஆனால் படத்துக்கு எதிர்பார்த்த பாசிட்டிவ் விமர்சனம் கிடைக்கவில்லை.

அண்ணாத்த படத்தை இயக்கி படுதோல்வியை சந்தித்த சிவா; சூர்யாவை வைத்து கங்குவா படத்தை இயக்கியிருக்கிறார். ஞானவேல் ராஜா ஹை பட்ஜெட்டில் படத்தை தயாரிக்க; தேவிஸ்ரீ பிரசாத் இசையமைக்க திஷா பதானி, போஸ் வெங்கட், பாபி தியோல் உள்ளிட்டோர் படத்தில் நடித்திருக்கின்றனர். நிச்சயம் இந்தப் படம் சிவாவுக்கும், சூர்யாவுக்கும் மிகப்பெரிய வெற்றி படமாக அமையும் என்று அவரது ரசிகர்கள் ரொம்பவே எதிர்பார்த்திருந்தார்கள். மேலும் ஞானவேல் ராஜாவும் தன்னுடைய பேட்டிகளில் படத்துக்கு ஓவர் ஹைப் ஏற்றிக்கொண்டிருந்தார்.

kanguva suriya jyothika

2000 கோடி ரூபாய் வசூல்: முக்கியமாக ஞானவேல் ராஜா கொடுத்த சில பேட்டிகளில் இந்தப் படம் கண்டிப்பாக 2000 கோடி ரூபாய் வசூலிக்கும்; அதற்கான ஆதாரத்தை நான் ஸ்டூடியோ க்ரீன் ட்விட்டர் பக்கத்தில் வெளியிடுவேன் என்று ஓவர் கான்ஃபிடன்ஸில் பேசிக்கொண்டிருந்தார். அதுமட்டுமின்றி சூர்யாவோ, கங்குவாவை பார்க்கும்போது ரசிகர்கள் வாயை பிளந்து பார்ப்பார்கள் என்றும் ஒருபடி மேலே சென்று பேசினார். இதனால் படத்துக்கு ரசிகர்களிடையே ஆவல் அதிகரித்தாலும்; சொதப்பிவிடுமோ என்ற அச்சம் ஒருபக்கம் இருந்துகொண்டிருந்தது.

படம் ரிலீஸ்: படமானது கடந்த 14ஆம் தேதி உலக அளவில் ரிலீஸானது. மொத்தம் 30 மொழிகளில் 10,000 திரைகளில் படம் ரிலீஸானது. சூர்யாவின் நடிப்பில் படம் வெளியாகி மூன்று வருடங்கள் ஆகிவிட்டதால் அவரது ரசிகர்கள் மிகப்பெரிய எதிர்பார்ப்போடு படம் பார்க்க தியேட்டர்களுக்கு படையெடுத்தனர். கண்டிப்பாக சிவா சூர்யாவை வைத்து சிறப்பான சம்பவம் செய்திருப்பார் என்ற நம்பிக்கையும் அவர்களிடம் இருந்தது.

அய்யோ கங்குவா: படத்தின் ஆரம்பத்திலிருந்தே ரசிகர்கள் தங்களது இருக்கைகளில் நெளிய ஆரம்பித்தார்கள். வாயை பிளந்து பார்ப்பார்கள் என்று சூர்யா சொன்னதெல்லாம் பொய் என்றானது. குறிப்பாக சூர்யாவின் ரசிகர்களுக்கே படம் பிடிக்கவில்லை. படத்தின் தொடக்கத்திலிருந்தே என்னமோ செய்திருக்கிறார்கள் ஆனால் என்ன செய்திருக்கிறார்கள் என்றுதான் தெரியவில்லை என்று தியேட்டரிலேயே கமெண்ட்ஸை பறக்கவிட்டார்கள். முதல் பாதிதான் அப்படி என்றால் இரண்டாம் பாதி அதைவிட மோசம் என்றும் கூறினார்கள் ரசிகர்கள்.

மன உளைச்சலில் சூர்யா: இதற்கிடையே கங்குவா படத்துக்கு வேண்டுமென்றே நெகட்டிவ் விமர்சனங்களை கொடுப்பதாக கூறினார். அதனையடுத்து மீண்டும் கங்குவாவை கண்டம் செய்ய ஆரம்பித்தார்கள் ரசிகர்கள். இந்நிலையில் சமூக வலைதளங்களில் தீயாக ஒரு தகவல் பரவிவருகிறது. அதாவது, ஒழுங்காக கோலிவுட்டில் மட்டும் கவனம் செலுத்திவந்த சூர்யாவை பாலிவுட் பக்கமும் கவனம் செலுத்த சொன்னது ஜோதிகாதான். எனவே பான் இந்தியா அளவில் ஹிட் கொடுக்க வேண்டிய கட்டாயம் சூர்யாவுக்கு வந்துவிட்டது.

அதன் காரணமாகத்தான் கங்குவா படத்துக்கு இவ்வளவு ஹைப் ஏற்றினார் சூர்யா. ஆனால் அப்படி செய்திருக்கவேகூடாது என்று அவர் கவலையில் இருப்பதாகவும்; கங்குவாவை கொஞ்சம் விட்டுவைத்திருந்த ரசிகர்கள் ஜோதிகாவின் கருத்தால்தான் மீண்டும் படத்தை வெளுக்க ஆரம்பித்துவிட்டார்களோ என்ற மன உளைச்சலில் அவர் உள்ளதாகவும் கூறப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X