twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    ஜோதிகா பாராட்டிய முதல் படம் 'சிங்கம் 2'தான்! - சூர்யா

    By Shankar
    |

    ஜோதிகா 12 ஆண்டுகளாக என் படத்தைப் பாராட்டியது இல்லை. அவர் பாராட்டிய முதல் படம் 'சிங்கம 2' தான், என்று சூர்யா கூறினார்.

    சூர்யாவின் முந்தைய வசூல் சாதனைகளை எல்லாம் முறியடித்திருக்கிறது சிங்கம் 2. சிங்கம் 2 வின் வெற்றி விழா சமீபத்தில் சென்னையில் நடந்தது.

    அதில் நீண்ட நேரம் பேசினார் சூர்யா. தனது முந்தைய இருபடங்களும் சரியாகப் போகவில்லை என்பதை வெளிப்படையாகச் சொன்னார்.

    அவர் கூறுகையில், "எனக்கு இப்போது ஒரு வெற்றி தேவைப்பட்டது. எனவே இந்த படத்தை நான் பெரிதும் எதிர்பார்த்திருந்தேன். நான் நினைத்ததை விடவும் பெரிய வெற்றியை தந்திருக்கிறார்கள். நன்றி.

    கவலையும் பயமும்

    கவலையும் பயமும்

    சிங்கம் 2 என்று தொடங்கியதுமே பலவாறாக பேசினார்கள். சிங்கத்தில் எல்லாம் வந்துவிட்டது. இனிமேல் என்ன இருக்கிறது? ஒரு படம் வெற்றி பெற்றால் போதாதா இன்னொன்று எதற்கு? சிங்கம் 2 க்கு என்ன கதை இருக்க போகிறது ஏதோ ஒப்பேற்றப் போகிறார்கள் என்றெல்லாம் பேசினார்கள்.

    ஒவ்வொரு நாள் படப்பிடிப்புக்கு போகும் போதும், படப்பிடிப்பின் போதும் எனக்கு பயமாக இருக்கும். நம்மை நம்பி ஆயிரம் பேர் திரையரங்கில் வந்து உட்கார்கிறார்கள். அவர்களை இந்தப் படம் திருப்தி செய்யுமா? இந்தக் கவலையும் பயமும் தினம் தினம் என்னை துரத்திக் கொண்டே இருந்தது. இப்போது நல்ல செய்தி கிடைத்து இருக்கிறது.

    அப்பாவின் பாராட்டு

    அப்பாவின் பாராட்டு

    இப்போது இதற்காக உழைத்த அனைவரையும் நினைத்துப் பார்க்கிறேன். எல்லோருமே இதை தன் சொந்தப் படம் போலவே நினைத்து உழைத்தார்கள். டைரக்டர் ஹரி சொன்ன மாதிரி இந்தப் படத்துக்கு பல பேருடைய வாழ்த்து, ஆசீர்வாதம் வந்து கொண்டே இருந்தது. அதுதான் படத்தை தூக்கி நிறுத்தி இருக்கிறது. பெயர் சொல்ல விரும்பவில்லை பல உயர் போலீஸ் அதிகாரிகள் படத்தைப் பாராட்டி கூறினார்கள். எங்களுக்கு பெருமையாக இருக்கிறது. எனக்கு பல பெருமைகளைத் தேடிக் கொடுத்திருக்கிறார் டைரக்டர் ஹரி சார். அவருக்கு நன்றி. என் அப்பாவிடமிருந்து ஒரு எஸ்.எம்.எஸ். வந்திருந்தது. அப்படி அப்பா சொன்னதே இல்லை. இத்தனை ஆண்டுகளில் இப்போதுதான் அப்பா "ரொம்ப பெருமையா இருக்குபா" என்று எனக்கு மெசேஜ் கொடுத்திருந்தார்.

    ஜோ பாராட்டு...

    ஜோ பாராட்டு...

    இது கொஞ்சம் பர்சனல்தான். ஆனாலும் சொல்லியாக வேண்டும். இந்த 12 ஆண்டுகளில் ஜோ என் படத்தை பெரிதாகப் பாராட்டியதில்லை. சிங்கம் 2 படத்தைப் பார்த்துவிட்டு கைத்தட்டி பாராட்டினார். நான்கு முறை பார்த்துவிட்டார்.

    ஹரி எனக்கு ஸ்பெஷல்

    ஹரி எனக்கு ஸ்பெஷல்

    இதை எல்லாம் பெற்றுக் கொடுத்தவர் டைரக்டர் ஹரி. நான் எத்தனையோ பேரிடம் பணியாற்றிய போதும் ஹரி எனக்கு ஸ்பெஷல்தான். ஒரு டைரக்டர் படத்தில் நடிப்பவர்கள் பற்றி எவ்வளவு பொறுப்பாக இருக்க முடியும். கால்ஷீட் தேதி குறிப்பிடும் போதே நடிகர்களின் சில முக்கியமான தேதிகளையும் குறித்து கொள்வார். இத்தனை பரபரப்பான படப்பிடிப்பு நேரங்களில் கூட என் குடும்பம் பற்றி புரிந்து என் பிறந்த நாள், என் திருமண நாள், குழந்தைகள் பிறந்த நாள் என்றைக்கு என்று பார்த்து விடுமுறை கொடுத்து அன்று ஊருக்குப் போய் வரச் சொல்வார்.

    என் சகோதரர்

    என் சகோதரர்

    இதை எல்லாம் பார்க்கும் போது அவர் மேல் எனக்கு மரியாதை இன்னமும் கூடுகிறது. ஒவ்வொரு நாளும் அவர் இந்தப் படத்துக்காக உழைத்த உழைப்பு, காட்டிய நேர்மை, நேர்த்தி வேகம் கொஞ்ச நஞ்சமல்ல.சில காலம் இந்தப் படத்தையே தன் உலகமாக வாழ்ந்தார். அதற்குதான் இப்போது வெற்றி கிடைத்திருக்கிறது.அவர் என்னை தன் சகோதரர் என்றார், அது பெருமையாக இருக்கிறது," என்றார்.

    இது ஆசீர்வாதம்

    இது ஆசீர்வாதம்

    இந்தப் படம் எடுக்க எங்கள் உழைப்பு மட்டுமல்ல பல பேருடைய ஆசீர்வாதமும் சேர்ந்துள்ளது. அந்த ஆசீர்வாதம் தான் இவ்வளவு பெரிய வெற்றியைத் தேடி கொடுத்திருக்கிறது.

    சூர்யா ஒரு படத்தில் நடிக்கும் போது நடிகராக இருந்தார். இரண்டாவது படத்தில் நடிக்கும் போது நண்பராக இருந்தார். மூன்றாவது படத்தில் சகோதரர் போலிருந்தார். நான்காவதாக இந்தப் படத்தில் நடிக்கும் போது சூர்யா என் சொந்த சகோதரர் ஆகிவிட்டார்.

    நான் அப்படித்தான்...

    நான் அப்படித்தான்...

    நான் நடிகர்கள் விஷயத்தில் அக்கறை எடுப்பது பற்றி பேசினார்கள். அப்படி எடுத்தாக வேண்டும். அப்போதுதான் நான் தயாரிப்பாளர்களின் டைரக்டராக இருக்க முடியும். இவ்வளவு செலவு செய்து எடுக்கப்படும் படத்தில் ஒரு நடிகர் மன வருத்தத்தில் படப்பிடிப்பிற்கு வருவது தாமதமானால் பாதிக்கப்படுவது தயாரிப்பாளர்தான். அதனால் எல்லாவற்றையும் கவனித்து ஆக வேண்டியது டைரக்டரின் கடமை. எவ்வளவு பேர் டைரக்டர்கள் நடிகர்கள் இருந்தாலும் முதலீடு செய்ய தயாரிப்பாளர்கள் வேண்டும். என்றைக்கும் முதலிடம் தயாரிப்பாளர்களுக்குதான் தர வேண்டும்.

    குறைகள் இருக்கின்றன...

    குறைகள் இருக்கின்றன...

    இந்தப் படத்தில் சில குறைகள் இருக்கின்றன. சிரிக்க வைக்க வேண்டும் என்று சில காட்சிகளில் லாஜிக் இல்லாமல் வைத்திருப்பேன். அதற்காக வருந்துகிறேன். மன்னிக்கவும். வேறு வழியில்லை. தியேட்டரில் சிரிக்கட்டுமே என்று வைத்தேன். தயாரிப்பாளரை மனதில் வைத்து பல சமரசங்களை செய்ய வேண்டியிருந்தது. தயாரிப்பாளர்களைக் காப்பாற்றாவிட்டால் நான் எப்படி தயாரிப்பாளர்களின் டைரக்டராக இருக்க முடியும்," என்றார் ஹரி.

    ஆறடி உயரமா?

    ஆறடி உயரமா?

    நாசர் பேசும் போது, "சூர்யாவின் உயரம் ஆறடி இருக்குமோ என்று வடக்கே இந்தியில் நடித்த போது ஒரு ஹீரோ கேட்டார்.இல்ல, சாதாரண உயரம் தான் என்றேன். அசந்துவிட்டார். படத்தில் பார்க்கும் போது மிரட்டலாக வந்து நிற்கிறாரே என்று வியந்தார். அந்த அளவுக்கு அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்திருக்கிறார் சூர்யா," என்றார்.

    English summary
    Actor Surya says that his wife Jyothika praised him for the first time after watched Singam 2.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X