»   »  'ரிஸ்க்' ரித்தீஷ்!

'ரிஸ்க்' ரித்தீஷ்!

Posted By:
Subscribe to Oneindia Tamil
Click here for more images
'நாயகன்' படத்தில் ஜே.கே.ரித்தீஷ் படு அதிரடியாக நடித்துள்ளாராம். சண்டைக் காட்சிகளில் எல்லாம் டூப்பே போடாமல் துணிச்சலாக துவம்சம் செய்து கலக்கியுள்ளாராம்.

சின்னி ஜெயந்த் இயக்கத்தில் உருவான காணல் நீர் படத்தில் நடித்து நாயகன் ஆனவர் ரித்தீஷ். முதல் படத்தின் முழுத் தயாரிப்புச் செலவையும் ரித்தீஷ்தான் ஏற்றார். பெரும் பொருட் செலவில் படத்தை எடுத்ததோடு மட்டுமல்லாமல், அந்தப் படத்தை மதுரை பக்கம் திரையிட்டபோது தியேட்டர்களுக்கு ஆட்களைத் திரட்டுவதிலும் அசத்தி விட்டார் ரித்தீஷ்.

ரசிகர்களுக்கு, தலைக்கு ஒரு பிரியாணி பொட்டலம், ஆளுக்கு நூறு ரூபாய் ரொக்கம் என ஆட்களை படம் பார்க்க அனுப்பி அசத்தினார்.

ரித்தீஷின் இந்த ரிச்னஸைப் பார்த்து கோலிவுட்டில் பலரும் மூக்கின் மீது விரலை வைத்தனர். அமைச்சர் சுப.தங்கவேலனின் பேரனான ரித்தீஷ், சினிமாவில் தனக்கென தனி இடத்தைப் பெறாமல் ஓயப் போவதில்லை என்ற உறுதியுடன் உள்ளார்.

தற்போது நாயகன் என்ற படத்தில் நடித்து வருகிறார் ரித்தீஷ். முதலில் இப்படத்தில் 2வது நாயகனாகத்தான் ரித்தீஷ் ஒப்பந்தமானார். முதல் ஹீரோவாக இருந்தவர் முன்னாள் செகண்ட் ஹீரோ விஜய்பாபுவின் மகனான ரமணா.

ஆனால் ரித்தீஷ், சீனில் நுழைந்தவுடன் டோட்டல் செட்டப்பும் மாறி விட்டது. படத்தின் நாயகனாகவே மாறியுள்ளார் ரித்தீஷ். படத் தயாரிப்புச் செலவிலும் ஒரு பகுதியை அவர் ஏற்றுள்ளதாக தெரிகிறது. இதனால் ரித்தீஷின் காட்சிகளை படு ரிச்சாக எடுத்து வருகிறாராம் இயக்குநர் சரவண ஷக்தி.

இப்படத்தில் என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்ட்டாக நடிக்கும் ரித்தீஷ், சண்டைக் காட்சிகளில் ரிஸ்க் எடுத்து நடித்துள்ளாராம். அதாவது டூப் போடலாம் என்று டைரக்டர் சொன்னால் அதை அவர் கேட்பதில்லையாம். டூப்பா, நமக்கா, என்று கூறி தானே நடித்து அசத்துகிறாராம்.

நமக்கெல்லாம் ரிஸ்க் எடுப்பது ரஸ்க் சாப்பிடுவது மாதிரி என்று வடிவேலு ரேஞ்சுக்கு யூனிட்டாரை கலாய்க்கிறாராம்.

முதல் படத்தைப் பார்க்க ரசிகர்களுக்கு தலைக்கு ஒரு தலப்பா கட்டு பிரியாணியும், ரொக்கம் நூறும் கொடுத்து அசத்தினார். இரண்டாவது படத்துக்கு ரித்தீஷ் என்ன கொடுக்கப் போகிறாரோ?

Read more about: rithish

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil