ஆர்யாவிடம் நாம் சொல்ல நினைத்ததை தில்லாக சொன்ன கபிலன் வைரமுத்து
சென்னை: எங்க வீட்டு மாப்பிள்ளை 2 சீசன் நடந்தால் அதில் கலந்து கொள்ள வேண்டாம் என்று பாடல் ஆசிரியர் கபிலன் வைரமுத்து ஆர்யாவுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.
ஆர்யாவுக்கு பெண் தேட எங்க வீட்டு மாப்பிள்ளை என்ற டிவி நிகழ்ச்சியை நடத்தினார்கள். கடைசியில் யாரையும் திருமணம் செய்யாமல் எஸ்கேப் ஆனார் ஆர்யா.

இந்நிலையில் அவர் நடித்துள்ள கஜினிகாந்த் படத்தின் செய்தியாளர் சந்திப்பில் பாடல் ஆசிரியர் கபிலன் வைரமுத்து கலந்து கொண்டார். நிகழ்ச்சியில் கபிலன் கூறியதாவது,
எங்க வீட்டு மாப்பிள்ளை நிகழ்ச்சியின் சீசன் 2 நடத்தினால் அதில் கலந்து கொள்ள வேண்டாம் என்று ஆர்யாவை கேட்டுக் கொள்கிறேன். எங்க வீட்டு மாப்பிள்ளையாவதை விட ரசிகர்களின் செல்லப் பிள்ளையாக நீங்கள் இருப்பதை தான் நாங்கள் விரும்புகிறோம் என்றார்.
எங்க வீட்டு மாப்பிள்ளை நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைத்து பெண்களுடனும் ஆர்யா செமயாக கடலை போட்டுவிட்டு இறுதியில் யார் மனதையும் புண்படுத்த முடியாது என்று கூறி எந்த பெண்ணையும் திருமணம் செய்யவில்லை.


Click it and Unblock the Notifications











