»   »  காதலில் சிம்புவும் தனுஷும்: உண்மை தான் நம்புங்க!

காதலில் சிம்புவும் தனுஷும்: உண்மை தான் நம்புங்க!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: என்னது சிம்புவும், தனுஷும் காதலிலா என்று வியப்படைய வேண்டாம். புதுப் படத்திற்கு தான் அப்படி பெயர் வைத்துள்ளார்கள்.

ஒரு காலத்தில் எதிரிகளாக இருந்து தற்போது நண்பேன்டாக்களாக உள்ள சிம்பு மற்றும் தனுஷின் பெயரை புதுப் படத்திற்கு வைத்துள்ளனர். காதலில் சிம்புவும் தனுஷும் படத்தில் புதுமுகங்கள் நடித்து வருகிறார்கள்.

Kadhalil Simbuvum Dhanushum

படத்தில் ராஜா, லோகேஷ் என்ற இருபுதுமுகங்களின் பெயர் சிம்பு, தனுஷ். படத்தில் சிம்பு மற்றும் தனுஷின் பன்ச் வசனங்களும் உள்ளதாம். பன்ச் மட்டும் அல்ல அவர்களின் பாடல்களும் உள்ளன.

சிம்புவின் கலக்குவேன் கலக்குவேன் பாடலுக்கும், தனுஷின் வாட் எ கருவாட் பாடலுக்கும் ஹீரோக்கள் ஆடுகிறார்களாம். படத்தில் அப்புக்குட்டி, கஞ்சா கருப்பு உள்ளிட்டோரும் நடிக்கிறார்கள்.

தனது பெயரில் உருவாகும் இந்த படத்தில் ஒரு பாட்டு பாட சிம்பு ஒப்புக் கொண்டுள்ளாராம்.

English summary
An upcoming movie with new comers is titled 'Kadhalil Simbuvum Dhanushum'. The leading characters are named Simbu and Dhanush.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil