விஜய் சேதுபதி மகன் சூர்யாவுக்கு தலைக்கனம் இருக்கா?.. மனம் திறந்த காக்கா முட்டை விக்னேஷ்

சென்னை: விஜய் சேதுபதியின் மகன் சூர்யா ஃபீனிக்ஸ் என்ற திரைப்படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமாகியிருக்கிறார். படத்தை ஸ்டண்ட் மாஸ்டர் அனல் அரசு இயக்கியிருக்கிறார். வரலட்சுமி உள்ளிட்டோர் நடித்திருக்கிறார்கள். சமீபத்தில் வெளியான அந்தப் படம் சுமாரான வரவேற்பைதான் பெற்றது. இந்நிலையில் சூர்யா குறித்து காக்கா முட்டை விக்னேஷ் மனம் திறந்து பேசியிருக்கிறார்.

சினிமாவில் வெல்ல வேண்டும் என்ற வெறியோடு உழைத்து இன்று பெரிய இடத்தில் இருப்பவர் விஜய் சேதுபதி. நடிப்பில் எப்படி அவர் எதார்த்தமோ அதேபோல்தான் நேரில் பழகுவதற்கும். யாரிடமும் ஈகோ எதுவும் இல்லாமல் பழகும் அவர் வாழ்க்கையையும், மனிதர்களையும் வேறு ஒரு கோணத்திலிருந்து அணுகுபவர். அதன் காரணமாகவே அவருக்கென்று தனி ரசிகர் பட்டாளம் இருப்பதும் குறிப்பிடத்தக்கது.

விஜய் சேதுபதியின் மகன்: விஜய் சேதுபதிக்கு ஒரு மகள், ஒரு மகன் இருக்கிறார்கள். மகன் சூர்யா சேதுபதி நானும் ரௌடிதான் படத்தில் சிறு வேடத்தில் தலை காட்டி பிறகு தந்தையுடன் சிந்துபாத் படத்தில் நடித்தார். அதனையடுத்து திரையிலிருந்து காணாமல் போன அவர் ஹீரோவாக அறிமுகமாவதாக அறிவிப்பு வெளியானது. அதன்படி அனல் அரசு இயக்கத்தில் ஃபீனிக்ஸ் படத்தில் நடித்திருக்கிறார் அவர். இதில் வரலட்சுமி உள்ளிட்டோர் எல்லாம் நடித்திருக்கிறார்கள்.

தன்னம்பிக்கைதான்; இருந்தாலும்: இந்தப் படத்தின்

Kaka Muttai Vignesh Talks about Vijay Sethupathi Son Suriya
Photo Credit:
பூஜையிலிருந்தே சூர்யாவை சுற்றி நெகட்டிவிட்டிதான் பரவியது. அந்த விழாவில் பேசிய சூர்யா; 'அப்பா வேற நான் வேற' என்று பேசியிருந்தார். இதனை அவர் தன்னம்பிக்கையின் உச்சத்தில்தான் சொன்னார். ஆனால் அவர் தலைக்கனத்தின் உச்சத்தில் சொல்லிவிட்டதாக நெட்டிசன்களில் ஒருதரப்பினர் கூற ஆரம்பித்து கடுமையாக ட்ரோல் செய்ய ஆரம்பித்தார்கள். ஆனால் சூர்யாவோ அமைதியாகத்தான் இருந்தார்.

உருக்கமான சூர்யா: கண்டிப்பாக இந்த சிறு வயதில் அதுவும் முதல் படத்தின்போதே இவ்வளவு பெரிய ட்ரோல்களையும் விமர்சனத்தையும் சந்திப்போம் என்று அவர் எதிர்பார்த்திருக்கமாட்டார்தான். ஆனால் அது நடந்துவிட்டது.ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் பேசிய அவர், "எப்போதுமே என்னை நான் ரொம்பவே வீக்காகத்தான் நினைத்திருக்கிறேன். அந்த சர்ச்சைகள் வந்த பிறகு ஸ்ட்ராங்காக நடித்துவிடுவோமா என்ற குழப்பமும் இருந்தது. உள்ளே நான் வீக்காக ஃபீல் செய்தாலும் அதனை வெளியே யாரிடமும் காட்டிக்கொள்ளமட்டேன்அந்த சர்ச்சைகள் நடக்கும்போது தயாரிப்பாளர் ராஜலட்சுமியும் உறுதியாக என்னுடன் இருந்தார்" என்று உருக்கமாக பேசியிருந்தார்.

காக்கா முட்டை விக்னேஷ்: படமானது அண்மையில் வெளியாகி சுமாரான வரவேற்பை பெற்றது. இந்நிலையில் ஃபீனிக்ஸ் படத்தில் சூர்யாவுடன் சேர்ந்து நடித்த காக்கா முட்டை விக்னேஷ் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில், "விஜய் சேதுபதியின் மகன் சூர்யா ஆட்டிட்யூட் என்று பலர் சொல்கிறார்கள். ஆனால் அவர் அப்படியெல்லாம் ஒன்றும் இல்லை. செட்டில் முதல் நாள் பார்க்கும்போது அவரிடம் சென்று பேசுவதற்கு ஒரு மாதிரிதான் இருந்தது.

அவராகவே பேசினார்: அப்போது ஒருவர் எங்களுக்கு பயிற்சி கொடுப்பதற்காக வந்திருந்தார். அவர் ஆங்கிலத்தில் மட்டும்தான் உரையாடிக்கொண்டிருந்தார். எனக்கு ஒன்றுமே புரியவில்லை. அந்த சமயத்தில் என்னிடம் வந்த சூர்யா ரொம்ப சகஜமாக பேசினார். அவர் விழாவில் பேச வந்தது வேறு; அது வேறு மாதிரி புரிந்துகொள்ளப்பட்டுவிட்டது. இதைத்தான் அவரும் என்னிடம் சொன்னார்" என்றார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X