அஜித்தை கொண்டாட வேண்டும்.. தூய்மையான மனிதர்.. மனம் திறந்து பேசிய பிரபலம்
சென்னை: அஜித் நடிப்பில் கடந்த ஆறாம் தேதி விடாமுயற்சி திரைப்படம் வெளியானது. கலவையான விமர்சனத்தை அந்தப் படம் பெற்றிருக்கிறது. வசூலிலும் பெரிய ரெஸ்பான்ஸை அந்தப் படம் பெறவில்லை என்றே கூறப்படுகிறது. அடுத்ததாக ஏப்ரல் பத்தாம் தேதி அவரது நடிப்பில் குட் பேட் அக்லி திரைப்படம் ரிலீஸாகவிருக்கிறது. இந்தச் சூழலில் அவர் குறித்து நடன அமைப்பாளர் கலா மாஸ்டர் மனம் திறந்து பேசியிருக்கிறார்.
அஜித்தின் நடிப்பில் விடாமுயற்சி திரைப்படம் கலவையான விமர்சனத்தை பெற்றது. அதனைத் தொடர்ந்து குட் பேட் அக்லி திரைப்படம் ஏப்ரல் பத்தாம் தேதி ரிலீஸாகவிருக்கிறது. விடாமுயற்சி விட்டதை கண்டிப்பாக குட் பேட் அக்லி திரைப்படம் பெறும் என்று அவரது ரசிகர்கள் நம்பிக்கையோடு காத்திருக்கிறார். இதற்கிடையே அஜித்துக்கு சமீபத்தில் பத்மபூஷன் விருது வழங்கப்பட்டது. சூழல் இப்படி இருக்க பிரபல நடன அமைப்பாளர் கலா மாஸ்டர் அஜித் குறித்து மனம் திறந்து பேசியிருக்கிறார்.

கலா மாஸ்டர் பேட்டி: அவர் சமீபத்தில் தனியார் யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், "அஜித் ரொம்பவே இனிமையான விருது. அவருக்கு பத்ம பூஷன் விருது வழங்கப்பட்டது எனக்கு தனிப்பட்ட ரீதியில் சந்தோஷம் தரக்கூடிய ஒன்று. ஒரு விஷயத்தை நான் சொல்லியே ஆக வேண்டும். அதாவது சினிமாவுக்கு வருவதற்கு முன்னரே அவரை நான் பார்த்திருக்கிறேன். நான் ரகு மாஸ்டரிடம் அசிஸ்டெண்ட்டாக வேலை செய்துகொண்டிருந்தேன். அந்த சமயத்தி தெலுங்கு இயக்குநர் ஒருவர் எனக்கு நண்பராக இருந்தார். அவர் புதுமுக ஹீரோ ஒருவரை தேடிக்கொண்டிருந்தார்.
5 ஹீரோக்கள்: அந்த சமயத்தில் எனக்கு ஐந்து ஹீரோக்கள் ஃபோட்டோக்களை அனுப்பி வைத்து இதில் யார் கரெக்ட்டாக இருப்பார்கள் என்று கேட்டார். அதில் அஜித் ஃபோட்டோவும் இருந்தது. அவர்கள் அஜித்தை செலக்ட் செய்திருந்தார்கள். நானும் அவரைத்தான் தேர்ந்தெடுத்தேன். அந்த சமயத்தில் ஐந்து நாட்களுக்கு அஜித் நடனம் கற்றுக்கொள்வதற்கு அனுப்பி வைக்கப்பட்டார். அப்போது எனது சித்தப்பா மகன் அஜித்துக்கு நடனம் சொல்லிக்கொடுத்தார். பிறகு ஒரு வேட்டி விளம்பரத்தில் அஜித்தை பார்த்தேன். அப்போது என்னை பார்த்து ரொம்ப நேரம் பேசிக்கொண்டிருந்தார்.
பக்கா மனிதன்: அவர் பக்கா ஜெண்டில்மேன். ரொம்ப தூய்மையான இதயம் கொண்ட ஒரு ஆள். தினமும் பேசிக்கொண்டால்தான் நண்பர்கள் என்று இல்லை. அதெல்லாம் மனதுக்குள்ளிருந்து வர வேண்டும். ஷாலினியும் எனக்கு நல்ல பழக்கம். நாங்கள் சினிமாவில் நிறைய முறை ஒன்றாக வேலை செய்திருக்கோம். அதனை தாண்டி நிறைய ப்ரோகிராம்களிலும் ஒர்க் செய்வோம். அஜித் ஷாலினி திருமணம் நடக்கும் ஒரு வாரம் முன்னர்கூட ஒரு படத்தில் வேலை செய்தோம். அப்போது நான் ஷாலினியிடம், நீ ஒரு ஜென்டில்மேனை திருமணம் செய்துகொள்ளப்போகிறாய் என்று கூறினேன்.
கொண்டாடப்பட வேண்டியவர்: திருமணத்துக்கு பிறகு நிறைய முறை ஷாலினியை பார்த்திருக்கிறேன். ஆனால் அஜித்தை பார்ப்பது குறைந்துவிட்டது. அவர் எல்லாம் கொண்டாடப்பட வேண்டியவர். சினிமாவில் எந்த பின்புலமும் இல்லாமல் தனி ஆளாக வந்து சாதித்து உயரத்துக்கு சென்றிருக்கிறார். அதோடு மட்டுமில்லாமல் ஸ்போர்ட்ஸையும் சாதித்திருக்கிறா. அவரை நினைத்தாலே எனக்கு பெருமையாகவும், மகிழ்ச்சியாகவும் இருக்கிறது. அவரது குடும்பத்தி யாருக்கு விருது கொடுத்தாலும் நாம் அதனை கொண்டாட வேண்டும். ஒரு உயரத்துக்கு போனால் நம்மை கண்டுகொள்ளமாட்டார்கள். ஆனால் அஜித் அப்படி இல்லை. எவ்வளவு உயரம் சென்றாலும் அவர் யாரையும் மறக்கமாட்டார்"என்றார்.


Click it and Unblock the Notifications











