ஷூட்டிங்கிற்கு சிம்பு லேட்டாக வருவாரா?.. அரசன் கதை சொல்லும் தயாரிப்பாளர்.. எஸ்டிஆர் வேற லெவல்
சென்னை: சிம்பு இப்போது வெற்றிமாறன் இயக்கத்தில் அரசன் படத்தில் நடித்துவருகிறார். அந்தப் படத்துக்கு பிறகு தேசிங்கு பெரியசாமி இயக்கத்திலும், அஸ்வத் மாரிமுத்து இயக்கத்திலும் நடிக்கவிருக்கிறார். இதுவரை சிம்பு நடித்த படங்களிலேயே அரசன் படத்துக்குத்தான் எப்போதும் இல்லாத அளவுக்கு எதிர்பார்ப்பு எகிறியிருக்கிறது. இந்நிலையில் சிம்பு குறித்து அரசன் தயாரிப்பாளர் கலைப்புலி தாணு பேசியிருப்பது ட்ரெண்டாகியுள்ளது.
சிம்பு தமிழ் சினிமாவின் திறமை வாய்ந்த நடிகர்களி ஒருவர். பல விஷயங்களை தெரிந்து வைத்திருக்கும் அவர் சில வருடங்களுக்கு முன்புவரை தடுமாறிக்கொண்டிருந்தார் என்றுதான் சொல்ல வேண்டும். திடீரென அவர் தன் எண்ணங்களை ஒருநிலைப்படுத்தி உடல் எடையை குறைத்து மாநாடு படத்தில் தரமாக நடித்திருந்தார். படம் மெகா ப்ளாக் பஸ்டர் ஆகி நூறு கோடி ரூபாய் வசூலித்தது. அடுத்ததாக அவர் வெந்து தணிந்தது காடு, பத்து தல, தக் லைஃப் ஆகிய படங்களில் நடித்தார். அவற்றில் வெந்து தணிந்தது காடு மட்டும்தான் ஓரளவுக்கு வெற்றி பெற்றது.

வெற்றிமாறனுடன் கூட்டணி சேர்ந்த சிம்பு: இப்போது அவர் வெற்றிமாறன் இயக்கத்தில் அரசன் படத்தில் நடித்துவருகிறார். நீண்ட வருடங்களாக எதிர்பார்த்த கூட்டணி இப்போது அமைந்திருப்பதால் இப்படத்தின் மீது உச்சக்கட்ட எதிர்பார்ப்பு எழுந்திருக்கிறது. ஏற்கனவே இந்தக் கூட்டணி வடசென்னை படத்திலேயே அமைந்திருக்க வேண்டியது. சில காரணங்களால் நடிக்கவில்லை. இப்போது அந்தக் கூட்டணி அமைந்திருப்பதால் எஸ்டிஆர் ரசிகர்கள் சந்தோஷத்தில் துள்ளி குதிக்கிறார்கள்.
ஃபுல் ஃபார்மில் சிம்பு: அரசனுக்கு பிறகு அஸ்வத் மாரிமுத்து இயக்கத்திலும், தேசிங்கு பெரியசாமி இயக்கத்திலும் நடிக்க கமிட்டாகியிருக்கிறார்ர் எஸ்டிஆர். அரசன் மாதிரியே இந்த இரண்டு படங்களின் மீதும் அதீத ஹைப் எகிறியுள்ளது. இரண்டு இயக்குநர்களுமே இதற்கு முன்பு எடுத்த படங்கள் சூப்பர் டூப்பர் ஹிட்டடித்திருப்பது குறிப்பிடத்தக்கது. எனவே எஸ்டிஆரை வைத்து இயக்கும் படத்திலும் வெற்றியை பெறுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் சிம்பு குறித்து தயாரிப்பாளர் கலைப்புலி தாணு சமீபத்தில் ஒரு பேட்டியில் பேசியிருக்கிறார்.
தாணு பேச்சு: அந்தப் பேட்டியில் அவர், "தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் நடிக்கும் படத்துக்காக சிம்பு முடி வளர்த்துக்கொண்டிருந்தார். அரசன் கதையை கேட்டதும் அந்தப் படத்தை தள்ளி வித்துவிட்டு தனது லுக்கையே மாற்றி இந்தப் படத்தின் கேரக்டராகவே வாழ ஆரம்பித்துவிட்டார். எந்த நேரத்தில் ஷூட்டிங் வைத்தாலும் ஒரு மணீ நேரத்துக்கு முன்னதாகவே வந்துவிடுவார். அவர் லேட்டாக வந்ததே இல்லை. ஏன் அவரை அப்படி சொல்கிறார்கள் என தெரியவில்லை. அனிருத் இசையமைக்கட்டும் என சிம்புதான் சொன்னார். சமீபத்தில் வெற்றிமாறன் எனக்கு ஒரு காட்சியை காண்இத்தார். எஸ்டிஆர் நடந்து வருவது அவ்வளவு சூப்பராக இருந்தது" என்றார்.


Click it and Unblock the Notifications
