Kalamkaval Box Office: பாக்ஸ் ஆபீஸ் கல்லா கட்டியதா மம்மூட்டியின் களம் காவல்?.. முதல் நாள் வசூல் எவ்வளவு?
திருவனந்தபுரம்: மம்மூட்டி தயாரித்து நடித்துள்ள களம் காவல் திரைப்படம் நேற்று திரையரங்குகளில் வெளியான நிலையில், ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்த ஆண்டு மலையாளத்தில் வெளியான படங்களிலேயே சிறப்பான கிரைம் த்ரில்லர் படம் இதுதான் என ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
மம்மூட்டி நடிப்பில் கடைசியாக வெளியான பிரமயுகம் திரைப்படம் 80 கோடி வரை வசூல் ஈட்டிய நிலையில், இந்த படம் 100 கோடிக்கும் அதிகமான வசூலை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஆண்டு துல்கர் சல்மான் நடிப்பில் கல்யாணி பிரியதர்ஷன் நடித்த லோகா திரைப்படம் 30 கோடி பட்ஜெட்டில் உருவாகி 300 கோடி வசூலை தட்டித் தூக்கியது.

மோகன்லால் நடிப்பில் இந்த ஆண்டு வெளியான எம்புரான், தொடரும் படங்கள் 250 கோடி அளவுக்கு வசூல் ஈட்டிய நிலையில், கடைசியாக வெளியான ஹிருதயப்பூர்வம் திரைப்படமும் 100 கோடி வசூலை அள்ளியது.
மாஸ் காட்டிய மம்மூட்டி: மலையாள திரையுலகில் 74 வயதிலும் முன்னணி நடிகராக நடித்து வருகிறார் மம்மூட்டி. மோகன்லால் மற்றும் மம்மூட்டி ரசிகர்கள் இடையே கடும் போட்டி நிலவி வந்தாலும், மம்மூட்டி அதையெல்லாம் கண்டு கொள்வதே கிடையாது. எனக்காக கதையை எழுத வேண்டாம் என்றும் கஷ்டமான கதையில் நான் நடிக்க முடியும் என நினைத்தால், அந்த கதையை மட்டுமே தேர்வு செய்து நடித்து வருகிறேன் என சமீபத்தில் களம் காவல் படத்தின் புரொமோஷனின் போது பேசியது ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.
கம்மி பட்ஜெட் பெரிய லாபம்: நம்ம ஊர் டாப் ஹீரோக்கள் போல 100 கோடி சம்பளம் வாங்கிக் கொண்டு 300 கோடி பட்ஜெட்டில் படம் எடுப்பதெல்லாம் கிடையாது. தனது சொந்த தயாரிப்பு நிறுவனனாம மம்மூட்டி கம்பெனியில் 30 கோடி பட்ஜெட்டில் களம் காவல் படத்தை தயாரித்து நடித்துள்ளார். தொடர்ந்து 20 முதல் 30 கோடி பட்ஜெட்டில் உருவாகும் படங்களிலேயே நடித்து வருகிறார். அந்த படங்கள் 60 முதல் 80 கோடி வசூல் வந்தாலே போதும் என நினைக்கிறார். அதுவே டபுள் மடங்கு லாபத்தை கொடுக்கின்றன.
களம் காவல் முதல் நாள் வசூல்: ஜித்தின் கே. ஜோஸ் இயக்கத்தில் மம்மூட்டி, விநாயகன், ரஜிஷா விஜயன், மாளவிகா மேனன் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான களம் காவல் திரைப்படம் முதல் நாளில் 4.75 கோடி ரூபாய் வசூலை ஈட்டி நல்ல ஓபனிங்கை கொடுத்துள்ளது. சனி மற்றும் ஞாயிறுகளில் படத்திற்கான டிக்கெட் புக்கிங் அதிகரித்துள்ள நிலையில், 20 கோடி வரை முதல் 3 நாட்களில் ஈட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications











