twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    களத்தூர் கண்ணம்மா முதல் விக்ரம் வரை...63 வருட கமலிசம் ஒரு பார்வை

    |

    சென்னை : இந்திய சினிமாவின் அடையாளம்...பெருமை என திரைத்துறையினரால் கொண்டாடப்படுபவர் கமல். குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி சினிமாவிற்கு அறிமுகமானவர்.

    களத்தூர் கண்ணம்மா படத்தில் தனது நான்காவது வயதில் நடிக்க வந்தவர் கமல். குழந்தை நட்சத்திரமாக சினிமாவிற்குள் என்ட்ரி கொடுத்தவர், இன்று உச்ச நடிகர், தயாரிப்பாளர், பின்னணி பாடகர், நடன கலைஞர், பாடலாசிரியர், அரசியல் தலைவர் என பல பரிமாணங்களை பெற்றுள்ளார்.

    தமிழ் சினிமாவில் பல புதுமைகளை புகுத்து, பல தொழில்நுட்பகங்களை அறிமுகம் செய்த பெருமை கமலையே சேரும். பிளாக் அன்ட் ஒயிட், ஈஸ்ட்மேன், டிஜிட்டல் என அத்தனை சினிமாவின் பல பரிமாணங்களிலும் நடித்த மிக சில நடிகர்களில் கமலும் ஒருவர்.

    டிக்கெட் கட்டணம் உயர்வு, 8 வாரங்களுக்குப் பிறகே ஓடிடியில் ரிலீஸ்: தியேட்டர் உரிமையாளர்கள் கோரிக்கைடிக்கெட் கட்டணம் உயர்வு, 8 வாரங்களுக்குப் பிறகே ஓடிடியில் ரிலீஸ்: தியேட்டர் உரிமையாளர்கள் கோரிக்கை

    கமல் வாழ்க்கையில் முக்கியமான நாள்

    கமல் வாழ்க்கையில் முக்கியமான நாள்

    6 மொழிகள், 232 படங்கள், 45 வெள்ளி விழா படங்கள், 4 தேசிய விருதுகள், 19 ஃபிலிம்ஃபேர் விருதுகள், பத்மஸ்ரீ, பத்மபூஷண், கெளரவ டாக்டர் பட்டம் உள்ளிட்ட பல பெருமைகளை சொந்தமாக்கிக் கொண்ட இந்தியாவின் ஒரே நடிகர் கமல் தான் என்று சொல்லலாம். அப்படிப்பட்ட கமலின் வாழ்க்கையில் மிக முக்கியமான நாள் இன்று.

    கமலின் 63 வருட திரைப்பயணம்

    கமலின் 63 வருட திரைப்பயணம்

    ஆம். இன்று தான் கமலின் திரையுலக பயணம் துவங்கிய நாள். இன்றுடன் கமல் தனது 63 வருட திரைப்பயணத்தை நிறைவு செய்துள்ளார். கமல், நடிகராக அறிமுகமான களத்தூர் கண்ணம்மா படம் இதே நாளில் தான் ரிலீசானது. 1960 ம் ஆண்டு ஆகஸ்ட் 12 ம் தேதி ரிலீசான களத்தூர் கண்ணம்மா படம் 100 நாட்களுக்கு மேல் ஓடி செம ஹிட்டானது.

    முதல் பாடலே இப்போது வரை ஹிட்

    முதல் பாடலே இப்போது வரை ஹிட்

    கமல் குழந்தை நட்சத்திரமாக முதன் முதலில் திரையில் தோன்றி அம்மாவும் நீயோ...அப்பாவும் நீயோ பாடல் தற்போது வரை எவர்க்ரீன் ஹிட் பாடலாக உள்ளது. களத்தூர் கண்ணம்மா படம் பிறகு தெலுங்கு, இந்தி மொழிகளிலும் ரீமேக் செய்யப்பட்டது. முதல் படத்திலேயே அந்த காலத்தில் டாப் நடிகர்களாக இருந்த ஜெமினி கணேசன், சாவித்ரி, மனோரமா, பாலைய்யா ஆகியோருடன் இணைந்து நடிக்கும் வாய்ப்பை பெற்றார் கமல்ஹாசன்.

    ஆடிசனிலேயே அசத்திய கமல்

    ஆடிசனிலேயே அசத்திய கமல்

    முதலில் கமல் நடித்த செல்வம் என்ற கேரக்டரில் டெய்சி இரானியை தன் ஏவிஎம் மெய்யப்ப செட்டியார் முடிவு செய்து வைத்திருந்தார். ஆனால் ஏவிஎம் குடும்ப டாக்டரான சாரா ராமச்சந்திரன் தான் கமலை மெய்யப்ப செட்டியாரிடம் அறிமுகம் செய்து வைத்துள்ளார். ஆடிசனிலேயே கமலின் நடிப்பைப் பார்த்து அவர் அசந்து போய் தான் இந்த படத்தில் நடிக்க சான்ஸ் கொடுத்துள்ளார்.

    உலக நாயகன் கமல்ஹாசன்

    உலக நாயகன் கமல்ஹாசன்

    முதல் படத்திலேயே அனைவரின் பாராட்டையும், அன்பையும் பெற்ற கமலுக்கு இன்று உலகம் முழுவதும் கோடிக்கணக்கில் ரசிகர்கள் உள்ளனர். உலக நாயகன் என ரசிகர்களால் கொண்டாடப்படும் கமல்ஹாசன், கமர்ஷியல் ஹிட் படங்களை அதிகம் கொடுக்கா விட்டாலும் நவீன சினிமாவிற்கு உதாரணமாக சொல்லும் வகையிலான , ரசிகர்களால் என்றும் மறக்க முடியாத பல படங்களை கொடுத்துள்ளார். தனித்துவமான சினிமாக்களை கொடுத்து, தனக்கென தனியிடத்தை பெற்றிருக்கிறார் கமல்ஹாசன்.

    63 வருட கமலிசம்

    63 வருட கமலிசம்

    கமலின் 63 வருட திரைப்பயணத்தில் சமீபத்திய ஆண்டுகளில் தான் அவர் சினிமாவிற்கு பிரேக் எடுத்துள்ளார். இருந்தாலும் 3 ஆண்டுகளுக்கு பிறகு விக்ரம் படத்தின் மூலம் கம்பேக் கொடுத்த கமலுக்கு மிகப் பெரி பிரம்மாண்ட வெற்றியை ரசிகர்கள் பரிசாக அள்ளிக் கொடுத்துள்ளனர். விக்ரம் படத்தின் வெற்றியை ரசிகர்கள் கொண்டாடிக் கொண்டிருக்கும் சமயத்தில் தனது திரைப்பயணத்தில் 63 வருடங்களை கமல் நிறைவு செய்துள்ளதை #63YearsOfKamalism என்ற ஹேஷ்டேக்கை உருவாக்கி ரசிகர்கள் கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள்.

    English summary
    Today Kamalhaasan completes his 63 years in film industry. His first film Kalathur Kanamma movie was in this same day of 1960. In this movie Kamalhaasan introduced as child artist by AVM. Fans celebrate #63YearsOfKamalism.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X