நடிகர் கல்லூரி வினோத்திற்கு விரைவில் டும்டும்டும்.. பொண்ணு யாருனு தெரியுமா?

சென்னை: 'கல்லூரி' திரைப்படத்தில் நடித்தன் மூலம் பிரபலமானவர் நடிகர் வினோத். இவர் நடித்த முதல் படமே இவருக்கு எல்லா பெயரை பெற்றுக்கொடுத்ததை தொடர்ந்து தனது பெயரை கல்லூரி வினோத் என மாற்றக்கொண்டார். அடுத்தடுத்த படத்தில் நடித்து வரும் இவர் தற்போது திருமண வாழ்க்கையில் இணைய உள்ளார். நேற்று அவருக்கு எளிமையாக நிச்சயதார்த்தம் நடந்துள்ளது.

நடிகர் வினோத் 2007ம் ஆண்டு பாலாஜி சக்திவேல் இயக்கத்தில் உருவான கல்லூரி திரைப்படத்தில் நடித்திருந்தார். நடிகை தமன்னா கதாநாயகியாக நடித்த இந்த படத்தில் "நீங்க சொல்லுங்க... நீங்க சொல்லுங்க" என்ற ஒரே வசனத்தை படம் முழுக்க பேசி அனைவரையும் சிரிக்க வைத்தார் வினோத். அந்த படத்தை தொடர்ந்து, தனுஷ் நடித்த மாரி படத்தில் ரோபோ சங்கருடன் இணைந்து 'அடிதாங்கி' என்கிற கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார். மாரி படம் வினோத்திற்கு பெயர் சொல்லும்படமாக அமைந்தது. அந்த படத்தை தொடர்ந்து எனக்கு வாய்த்த அடிமைகள், பிச்சுவா கத்தி, ஸ்கெட்சி, ராஜா கங்குஸ்கி, மாரி2, தெக்கத்தி வீரன், அயோத்தி, பிழை, ட்ரிப், ரா ரா சரசுக்கு ராரா, ரெபல் போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார். தனுஷ், விக்ரம், சசிக்குமார், யோகிபாபு போன்ற முன்னணி நடிகர்களின் படங்களில் துணை நடிகராக நடித்து வருகிறார். அண்மையில் இவர் கவின். ஆண்ட்ரியா நடித்த மாஸ்க் திரைப்படத்தில் காவல்துறை அதிகாரியாக நடித்திருந்தார்.

Actor Kalloori vinoth marriage
Photo Credit:

விரைவில் டும்டும்டும்: இந்நிலையில், நடிகர் கல்லூரி வினோத்திற்கு நேற்று நிச்சயதார்த்தம் நடந்து முடிந்துள்ளது. அந்த போட்டோவை வினோத் தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். தனது வருங்கால மனைவி நித்யஸ்ரீயுடன் இருக்கும் நிச்சயதார்த்த போட்டோவை பகிர்ந்து 'அவளின்றி இனி ஒரு அணுவும் அசையாது என்றும் அவளே துணை' என பதிவிட்டுள்ளார். மாடல் அழகியான நித்யஸ்ரீ 2024 ஆம் ஆண்டுக்கான மிஸ் தமிழ் மணிலம் 2024 டைட்டிலை வென்றுள்ளார். மேலும் இவர் மேக்கப் கலைஞராகவும் இருக்கிறார். இவர் பல பேஷன் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு பல பட்டத்தை பெற்றுள்ளார். திருமண வாழ்க்கையில் இணைய இருக்கும் இவருக்கு பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

More from Filmibeat

Read more about: actor
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X