»   »  வேட்டையாடு-100 நாள் சாதனை

வேட்டையாடு-100 நாள் சாதனை

Posted By:
Subscribe to Oneindia Tamil

கமல், கமலினி முகர்ஜி, ஜோதிகா நடிப்பில் கெளதம் இயக்கத்தில், ஹாரிஸ் ஜெயராஜ்இசையில் வெளியான வேட்டையாடு விளையாடு சைலண்டாக 100 நாள் ஓடிவசூலை வாரிக் குவித்துவிட்டது.

இந்தப் படம் தொடங்கியது முதலே பல சிக்கல்களை சந்தித்தது.

முதலில் இப்படத்தைத் தயாரிக்க இருந்த காஜாமைதீன் பல்வேறு பிரச்சினைகளைசந்தித்து தற்கொலை முயற்சி வரைக்கும் சென்றார். இதனால் வாங்கிய அட்வான்ஸைதிருப்பித் தந்தனர் கமலும் கெளதமும்.

இதையடுத்து செவன்த் சேனல் மாணிக்கத்திடம் படம் கைமாறியது. அவரும் பலகோடிகளை செலவிட்டு படத்தை முடித்தார். ஆனால், படத்தை வெளியிடப் போகும்தருவாயில் பல பிரச்சினைகளை சந்தித்தார் மாணிக்கம்.

இதனால் படத்தை வினியோகிக்கும் பொறுப்பை ஆஸ்கர் பிலிம்ஸ் ரவிச்சந்திரன்ஏற்றுக் கொண்டார்.

ஒரு வழியாக கமல், கெளதம் ஆகியோரின் பேருதவியால் சிக்கல்கள் தீர்ந்து படம்வெளியானது. இந்தப் படத்தால் மாணிக்கம் சந்தித்தது சில கோடி நஷ்டத்தைத் தான்.

ஆனாலும், படம் யாரும் எதிர்பாராத வகையில் மிகப் பெரும் வெற்றியைப் பெற்றது.

வசூல் ரீதியாகவும், விமர்சகர்கள் மத்தியிலும் இப்படம் பெரும் வரவேற்பைப்பெற்றது. படத்தைத் தயாரித்த மாணிக்கத்திற்கு நஷ்டம் தான் என்றாலும் படத்தைவாங்கிய வினியோகஸ்தர்கள் பெரும் லாபத்தைப் பார்த்ததுவிட்டனர்.

இப்படத்தின் நூறாவது நாள் விழாவை 24ம் தேதி சென்னையில் கொண்டாடத்திட்டமிட்டுள்ளார் மாணிக்கம். சத்யம் தியேட்ட>ல் இதற்கான விழாவுக்கு ஏற்பாடுசெய்யப்பட்டுள்ளது.

கமல்ஹாசன், ஜோதிகா உள்ளிட்டோர் இதில் கலந்து கொள்கின்றனர். இதுகுறித்துமாணிக்கம் கூறுகையில், இப்படத்தால் நான் சம்பாதிக்கவில்லை. என்றாலும், எனதுபேனரில் தயாரிக்கப்பட்ட படம் நூறு நாட்கள் ஓடியுள்ளது சந்தோஷம் தருகிறது.

அடுத்து இப்படத்தை இந்தியில் வெளியிட ஏற்பாடுகள் நடந்து வருகின்றன என்றார்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil