»   »  கமல் அண்ணா?

கமல் அண்ணா?

Subscribe to Oneindia Tamil

பெரியாரைத் தொடர்ந்து அடுத்து பேரறிஞர் அண்ணாவின் கதை திரைப்படமாகஉள்ளது. அண்ணா வேடத்தில் நடிக்க கமல்ஹாசனைக் கேட்டுள்ளதாக பேச்சுஅடிபடுகிறது.

முன்பு பாரதியாரின் வாழ்க்கை படமானது. மகாகவியின் வேடத்தில் நடிக்ககமல்ஹாசனைத்தான் முதலில் அணுகினார் இயக்குநர் ஞான ராஜசேகரன். ஆனால் அதுசரிவராமல் போகவே சாயாஜி ஷிண்டேவைக் கூட்டி வந்து பாரதியாக்கினார்.

பின்னர் காமராஜரின் வாழ்க்கை வரலாறு படமானது. இப்போது பெரியாரின் வாழ்க்கைபடமாகியுள்ளது. முத்துராமலிங்கத் தேவரின் கதையும் படமாகவுள்ளதாக இடையில்பேச்சு அடிபட்டது. இந்த வரிசையில் அடுத்து அண்ணா சேரவுள்ளார்.

செங்கை சினி ஆர்ட்ஸ் என்ற பட நிறுவனம் அண்ணாவின் வாழ்க்கை வரலாற்றைதிரைப்படமாக்க முடிவு செய்துள்ளது. பெரும் பொருட் செலவில் இப்படம்உருவாகவுள்ளது.

பெரிய அளவில் செலவு செய்து படம் எடுக்கத் திட்டமிட்டுள்ளதால் படத்திற்குத்தேவையான பணத்தை பொதுமக்களிடமிருந்தும், வெளிநாடு வாழ்தமிழர்களிடமிருந்தும் திரட்ட திட்டமிட்டுள்ளனராம்.

இதற்கான முயற்சியின் பலனாக, தயாரிப்பில் உதவி செய்ய வெளிநாடு வாழ் தமிழர்ஒருவர் முன்வந்துள்ளாராம். அதற்கு அவர் விதித்துள்ள ஒரே நிபந்தனை கலைஞானிகமல்ஹாசன்தான் அண்ணா வேடத்தில் நடிக்க வேண்டும் என்பதுதான்.

இதையடுத்து செங்கை சினி ஆர்ட்ஸ் நிறுவனம் கமலை அணுகியுள்ளதாம். கமல்ஒத்துக் கொண்டார் செப்டம்பர் 15ம் தேதி அண்ணா பிறந்த நாளன்று பட பூஜையைவைத்துக் கொள்ளத் திட்டமிட்டிருக்கிறார்களாம்.

கமல் அண்ணா ஆவாரா?

Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil