»   »  தசாவதாரத்திற்கு தடை!

தசாவதாரத்திற்கு தடை!

Subscribe to Oneindia Tamil

கமல்ஹாசன் பத்து வேடங்களில் நடித்து வரும் தசாவதாரம் படத்தை வெளியிடசென்னை உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது. அதேசமயம்,படப்பிடிப்பை தொடரலாம் என அனுமதி அளித்துள்ளது.

சென்னை மேற்கு தாம்பரத்தைச் சேர்ந்தவர் செந்தில்குமார். இவர் தசாவதாரம் படத்தின்கதை தன்னுடையது என்று கூறி சில நாட்களுக்கு முன் பிரச்சினையைக் கிளப்பினார்.அத்தோடு நில்லாது சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கும் தொடர்ந்தார்.

இந்த மனுவில், நான் சில படங்களில் உதவி இயக்குநராக பணியாற்றியுள்ளேன். 10வேடங்களில் கதாநாயகன் நடிக்கும் வகையில் அர்த்தநா> என்ற கதையை ரெடி செய்துவைத்திருந்தேன்.

அந்தக் கதையில் நடிக்க கமல்தான் பொருத்தமானவர் என்று கருதி அவரிடம் கதைசொல்வதற்காக அவரது அலுவலகத்திற்குச் சென்றேன். அங்கு முரளி என்பவரிடம்நான் விஷயத்தைக் கூறவே அவர் கதையை வாங்கி வைத்துக் கொண்டார்.

இந்தக் கதையில் கமல் நடிப்பதாக இருந்தால், அப்படத்தில் உங்களை ஒரு உதவிஇயக்குனராக சேர்த்துக் கொள்வதாக அவர் கூறினார்.

இந் நிலையில், கமல்ஹாசன் 10 வேடங்களில் தசாவதாரம் படத்தில் நடிக்கப்போவதாக செய்தி வெளியானது. இதையடுத்து முரளியிடம் போய் நான் கேட்டபோது,என்னை திட்டி வெளியே அனுப்பி விட்டார்.

தசாவதாரம் எனது கதை. இதற்கு என்னிடம் வலுவான ஆதாரங்கள் உள்ளன.இப்படத்தை தயாரிப்பதற்கும், படப்பிடிப்பு நடத்துவதற்கும், வெளியிடுவதற்கும்தடை விதிக்க வேண்டும் என்று கோரியிருந்தார் செந்தில்குமார்.

மனுவை விசா>த்த நீதிபதி சித்ரா வெங்கட்ராமன் படத்தை வெளியிட 4வாரங்களுக்குத் தடை விதித்து உத்தரவிட்டார். ஆனால் படப்பிடிப்பை தொடர்ந்துநடத்த அவர் அனுமதித்தார்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil