»   »  மீரா நாயர் படத்தை இயக்கும் கமல்!

மீரா நாயர் படத்தை இயக்கும் கமல்!

Subscribe to Oneindia Tamil

மிஸ்ஸிஸிப்பி மசாலா உள்ளிட்ட பிரபலமான படங்களை இயக்கிய மீரா நாயரின்புதிய குறும்படம் ஒன்றை கமல்ஹாசன் இயக்கவுள்ளார்.

உலகின் நம்பர் ஒன் பணக்காரரான பில்கேட்ஸ் நிறுவியுள்ள அறக்கட்டைள உலகம்முழுவதும் எய்ட்ஸ் ஒழிப்புக்காக பல கோடி முதலீட்டில் பல திட்டங்களைநிறைவேற்றி வருகிறது.

தற்போது எய்ட்ஸ் விழிப்புணர்வு பிரசாரத்திற்காக குறும்படங்களை தயாரிக்கவுள்ளது.இந்தக் குறும்படங்கள் இந்தியா மு ழுவதும் திரையிடப்படவுள்ளன. இதற்காகஇந்தியர்களை கொண்டே இக்குறும்படங்களை எடுக்கவுள்ளனர்.

படங்களை தயாரித்துக் கொடுக்கும் பணி மொத்தமாக மீரா நாயரிடம்வழங்கப்பட்டுள்ளது. பல்வேறு மொழிகளில் இக் குறும் படங்களை எடுக்கவுள்ளார்மீரா நாயர். இதற்காக பல்வேறு இயக்குனர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

சந்தோஷ் சிவன், விஷால் பரத்வாஜ் ஆகியோரை வைத்து மலையாளம், இந்தியில்படங்களை எடுக்கவுள்ள மீரா, கமல்ஹாசனுடனும் பேசியுள்ளார். அவரும் படத்தைஇயக்கித் தர ஒப்புக் கொண்டுவிட்டார்.

சந்தோஷ் சிவன் இயக்கும் படத்தில் பிரபு தேவா, குத்து பட நாயகி ரம்யா ஆகியோர்நடிக்கவுள்ளனர்.

கமல் இயக்கப் பாகும் படத்தில் நடிக்கவிருப்பது யார் என்பது இதுவரை முடிவுசெய்யப்படவில்லை.

இவர்களைத் தவிர மீரா நாயரும் ஒரு குறும்படத்தை இயக்கவுள்ளாராம். தசாவதாரம்படப்பிடிப்பில் படு பிசியாக இருக்கும் கமல் இப்படத்தை எப்போது இயக்குவார்என்பதும் தெரியவில்லை.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil