»   »  ரஜினி அமெரிக்கா-கமல் மலேசியா!

ரஜினி அமெரிக்கா-கமல் மலேசியா!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சிவாஜி படப்பிடிப்புக்காக ரஜினி காந்த் அமெரிக்கா பறந்துள்ளார். இதேபோல தசாவதாரம் படப்பிடிப்புக்காக கமல் மலேசியா கிளம்பிச்சென்றுள்ளார்.

ரஜினியின் சிவாஜி படத்தின் பெரும்பாலான காட்சிகள் முடிந்து விட்டன. டப்பிங்கும் வெகு வேகமாக நடந்து வருகிறது. ரஜினியின் அமெரிக்காசம்பந்தப்பட்ட காட்சிகள் மட்டும் படமாக்கப்படவுள்ளது.

இதற்கான லொகேஷன்களைப் பார்த்து விட்ட சிவாஜி யூனிட், படப்பிடிப்புக்கான அனுமதிக்காக காத்திருந்தது. தற்போது அனுமதி கிடைத்துவிட்டதால், அமெரிக்காக கிளம்பியுள்ளனர்.

நியூயார்க்கில் அப்பா ரஜினி கேரக்டருக்கான காட்சிகளை படமாக்க உள்ளார் ஷங்கர். நேற்று நள்ளிரவு இதற்காக ரஜினியும், படக்குழுவினர்அமெரிக்கா புறப்பட்டுச் சென்றனர். இரவு 2 மணிக்குச் சென்ற விமானத்தில் அவர்கள் புறப்பட்டுச் சென்றனர்.

அதற்கு 2 மணி நேரத்துக்கு முன்னதாக கமல்ஹாசன் விமான நிலையத்திற்கு வந்தார். அவர் மலேசியாவுக்கு புறப்பட்டுச் சென்றார். தசாவதாரம்படப்பிடிபுப்காக கமல் மலேயா கிளம்பியுள்ளார்.

ரஜினி 5 நாட்கள் நியூயார்க்கில் இருப்பாராம், கமல் ஒரு வாரம் தங்கலாம் என்கிறார்கள்.

Read more about: kamal in malaysia rajini in us

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil